தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 6.5.2021 (Daily Current Affairs)

இந்தியா

இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுப்பு..!!

🔷கேரளா மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 145 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

🔷இங்குள்ள அபூர்வ இன வரையாடுகளின் பிரசவ காலத்திற்கு பின்னர், கடந்த ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 24 - ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெற்றது.

🔷இரவிகுளம் தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, சின்னார் வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்‍. அதில் புதிதாக பிறந்த 145 குட்டிகள் உட்பட 894 வரையாடுகள் உள்ளது தெரியவந்தது. இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும் 792 வரையாடுகள் உள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்தது எஸ்&பி..!!

🔷சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 9.8 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.

🔷கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து மீண்டும் வேகமெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசின் நிதி ஊக்குவிப்பு சலுகை திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என முன்னா் கணிக்கப்பட்டிருந்தது.

🔷நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி விகிதம் 9.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஜூன் இறுதியில் உச்சநிலையை அடைந்து பாதிப்பு மோசமான சூழ்நிலையை அடையும்பட்சத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

🔷இந்தியாவுக்கான கடன் தர மதிப்பீடு தற்போது ‘பிபிபி-’ நிலையானது என்ற பிரிவில் உள்ளது. எதிா்காலத்தில் பொருளாதார வேக தணிப்பின் ஆழத்தைப் பொருத்து இந்தியாவின் கடன் தகுதி நிா்ணயம் செய்யப்படும் என எஸ்&பி தெரிவித்துள்ளது.

கண்டுபிடிப்பு

அந்தமனின் நர்கொண்டம் தீவில் புதிய பாலூட்டி இனம் கண்டுபிடிக்கப்பட்டது..!!

🔷இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) விஞ்ஞானிகள் அந்தமனின் நர்கொண்டம் தீவில் இருந்து மற்றும் தீவுகளின் நிக்கோபார் குழுமத்திலிருந்து ஒரு புதிய வகை பூச்சிக்கொல்லி பாலூட்டி, வெள்ளை - பல் கொண்ட ஷ்ரூவைக் கண்டுபிடித்துள்ளனர்.

🔷குரோசிடுரா நர்கொண்டமிகா (Crocidura narcondamica) இனங்கள் நாட்டில் காணப்படும் பாலூட்டிகளின் பட்டியலில் ஒரு புதிய கூடுதலாகும். இவை சிறிய மற்றும் சுட்டி போன்ற பாலூட்டிகள், அவை காடுகளில் துணை இலை அடுக்குகளில் வாழ்கின்றன. இந்த விலங்குகளின் முதன்மை உணவு பூச்சிகள்.

🔷"இந்த எரிமலை தீவில் (நர்கொண்டம் தீவு) இருந்து ஒரு ஷ்ரூவின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும், மேலும் இது இந்தியாவில் வெள்ளை - பல் கொண்ட (குரோசிடுரா வகை) இனங்களின் எண்ணிக்கையை 11 முதல் 12 வரை அதிகரிக்கிறது" என்று விஞ்ஞானியும் பொறுப்பாளருமான சந்திரகாசன் சிவபெருமன் கூறினார். (ZSI அந்தமான் & நிக்கோபார் பிராந்திய மையம்).

🔷புதிய இனங்கள் நடுத்தர அளவு (தலை மற்றும் உடல் நீளம்) மற்றும் இருண்ட சாம்பல் அடர்த்தியான ரோமங்களுடன் ஒரு தனித்துவமான வெளிப்புற உருவமைப்பைக் கொண்டுள்ளன, அவை பிற இனங்களுடன் ஒப்பிடும்போது அடர்த்தியான, இருண்ட வால் கொண்டவை என்று டாக்டர் சிவபெருமன் மேலும் கூறினார்.

🔷"இந்த கண்டுபிடிப்பு மூலம் நாட்டில் காணப்படும் பாலூட்டிகளின் எண்ணிக்கை 429 முதல் 430 ஆக உயர்ந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மாதிரியின் ஆஸ்டியோலாஜிக்கல் மற்றும் டி.என்.ஏ மூலக்கூறு ஆய்வுகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது" என்று முன்னாள் இயக்குநரும் வெளியீட்டின் ஆசிரியர்களில் ஒருவருமான கைலாஷ் சந்திரா கூறினார்.

🔷ஒரு புதிய பூச்சிக்கொல்லி பாலூட்டியின் கண்டுபிடிப்பு 43 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. இதற்கு முன்னர், ZSI இன் விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டில் தெற்கு அந்தமான் தீவில் குரோசிடுரா ஜென்கின்சியைக் கண்டுபிடித்தனர்.

🔷இந்த கண்டுபிடிப்பு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் மிக தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவுகளில் ஒன்றான நர்கொண்டம் தீவில் இருந்து வருகிறது. நர்கொண்டம் தீவு வடக்கு அந்தமானுக்கு கிழக்கே 130 கி.மீ தொலைவிலும், மியான்மரின் மேற்கு கடற்கரையில் சுமார் 446 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு வக்ஃபு தீா்ப்பாயத் தலைவராக நீதிபதி எஸ்.அப்துல் மாலிக் நியமனம்..!!

🔷தமிழ்நாடு வக்ஃபு தீா்ப்பாயத் தலைவராக நீதிபதி எஸ்.அப்துல் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷சிறப்புப் பணியின் கீழ் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆய்வுப் பிரிவில் கூடுதல் பதிவாளராக முன்பு பணியாற்றிய மாவட்ட நீதிபதி எஸ்.அப்துல் மாலிக், தமிழ்நாடு வக்ஃபு தீா்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷இதே போல், மாற்றுப் பணியின் கீழ் தீா்ப்பாயத்தின் தலைவராக இருந்த ஏ.பால்கிஸ், சிதம்பரம், 2 - ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறாா் என்று கூறப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் / ஏவுகணை

ஸ்பேஸ் எக்ஸ்சின் ஸ்டார்ஷிப் எஸ்.என் 15 ரக விண்கலம் சோதனை ஓட்டம் வெற்றி..!!

🔷ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் எஸ் என் 15 ரக விண்வெளி ஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது.

🔷நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்கள் மற்றும் 100 டன் எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் விண்கலத்தின் சோதனை ஓட்டம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

🔷வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்த விண்கலம், மீண்டும் தரையிறக்கப்பட்டது. கடந்த 2 சோதனை ஓட்டத்தின்போது விண்கலம் வெடித்து சிதறிய நிலையில் தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.

அதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா..!!

🔷ரஷ்யா பிரமாண்டமான தனது ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.

🔷208 டன் எடையுடன் ஆர்எஸ் 28 சர்மட் என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

🔷அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.

🔷அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட சர்மட் ஏவுகணையை வெல்ல முடியாத ஏவுகணை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வர்ணித்துள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...