தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.8.2021 (Daily Current Affairs)

கண்டுபிடிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை..!

💠டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் புகழ்பெற்ற தாவர மரபியலாளருமான பேராசிரியர் தீபக் பென்டல் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

💠அதாவது, மினெர்வார்யா பென்டலி என்று பெயரிடப்பட்டுள்ளது.

💠இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடற்கரையோரத்தில் பரவியுள்ள உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மேற்கு தொடர்ச்சி பல்லுயிர் வெப்பநிலையிலிருந்து புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

💠இனங்கள் பற்றிய கண்டுபிடிப்புகள் மற்றும் விளக்கம் 'தீபகற்ப இந்தியாவின் டிஎன்ஏ பார்கோடிங் மற்றும் மினெர்வேரியன் தவளைகளின் முறையான விமர்சனம் (டிக்ரோகுளோசிடே:மினெர்வர்யா) என்ற தலைப்பில் ஒரு அறிவியல் கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் அன்னை தமிழில் அா்ச்சனை திட்டம் தொடக்கம்..!!

💠தமிழகத்தில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்தார்.

💠தமிழகத்தில் முதல்கட்டமாக 47 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்திருந்தார்.

💠முதல்கட்டமாக இத்திட்டமானது ‘அன்னை தமிழில் அா்ச்சனை’ என்ற பெயரில் மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத் தொடா்ந்து மற்ற 46 பெரிய கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பின்னா் சிறிய கோயில்களிலும் பகுதி வாரியாக விரிவுபடுத்தப்படும் என அமைச்சா் கூறியிருந்தார்.

விளையாட்டு

ஆண்களுக்கான 110மீ தடைதாண்டுதல் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் தங்கப்பதக்கம் வென்றார்..!!

💠ஆண்களுக்கான 110மீ தடைதாண்டுதல் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் 13.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

💠டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100மீ தடைதாண்டும் ஓட்டம் நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.

💠இதில் ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

💠ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2 ஆவது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன்..!!

💠விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் அனில் கும்ப்ளே சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார்.

💠டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஆண்டர்சனின் 619 ஆவது விக்கெட். இதன்மூலம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

💠அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிரண்டு இடங்களில் முறையே முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்னே (708) உள்ளனர்.

💠டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்..!!

💠41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் இந்தியா பதக்கம் பெற்றுள்ளது.

💠டோக்கியோ ஒலிம்பிக்கில் அரை இறுதியில் பெல்ஜியத்துடன் போராடி தோற்ற இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான இடத்திற்கு நடந்த போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.

💠ஆட்டத்தின் துவக்கம் முதலே இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. ஒரு கட்டத்தில் சம பலத்துடன் 3 க்கு 3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்தன. பிறகு விளையாட்டில் விறுவிறுப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.

💠இதனிடையே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாகியா வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

💠இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்கொண்ட அவர் நான்குக்கு ஏழு என்கிற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுசில்குமாருக்குப் பின் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

💠ரவிக்குமாருக்கு 4 கோடி ரூபாய் பரிசும், குரூப் 1 பிரிவில் வேலையும், பாதி விலையில் வீட்டு மனையும் வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...