நியமனங்கள்
அமேசான் நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ-வாக ஆண்டி ஜாஸே நியமனம்..!!
🔷அமேசான் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதை தொடர்ந்து புதிய CEO-வாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
🔷1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெஃப் பெசோஸ் அதனை உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாற்றினார்.
🔷1.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 27 ஆண்டுகள் பதவி வகித்த ஜெஃப் பெசோஸ் ஜூலை ஐந்தாம் தேதி முதல் பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
🔷அந்தப் பதவிக்கு அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே-வை ஜெஃப் பெசோஸ் நியமித்துள்ளார். 57 வயதாகும் ஜெஃப் பெசோஸ் இனி தனது செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனமான ப்ளூ ஒரிஜனில் கவனம் செலுத்த உள்ளார்.
கண்டுபிடிப்பு
மூன்று புதிய குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு..!!
🔷திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகியோர் மூன்று புதிய குறுங்கோள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றிற்குத் தற்காலிகமாக BBM2101, BBM2102 மற்றும் BBM2103 எனப் பெயரிட்டு உள்ளனர்.
🔷இந்த ஆராய்ச்சியானது நாசாவினால் மேற்கொள்ளப்படும் குடிமக்கள் அறிவியல் மீதான சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் கூட்டிணைவு என்ற திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
🔷பால பாரதி என்கிற K. பாலகிருஷ்ணன் மற்றும் G. ஆழிமுகிலன் (இயற்பியல் மாணவர்) ஆகியோர் இந்த மூன்று குறுங்கோள்கள் கண்டறியப்பட்ட சர்வதேச குறுங்கோள் ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி விண்வெளிச் சங்கத்தின் உறுப்பினர்களாவர்.
சாதனைகள்
முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் - ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை..!!
🔷முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார்.
🔷சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்.
🔷162 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 617 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலகம்
அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்..!!
🔷அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகினார்.
🔷இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி என அனைத்து பொருள்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமேசானை உருவாக்கியுள்ளார்.
🔷அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், 20,180 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.
🔷அமேசான் நிறுவனத்திலிருந்து பதவி விலகியதையடுத்து, தனது ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான ப்ளூ ஒரிஜன் நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.