இந்தியா
பாதுகாக்கப்பட்ட-சதுப்பு நிலங்கள் !!
⚡ஸ்ரீ நகரிலுள்ள தால் ஏரி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள இதர ஐந்து ஏரிகள், பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
⚡காஷ்மீர் பகுதியிலுள்ள வுலார், தால், நைகீன் ஏரி ஆகியவை மற்றும் ஜம்மு பகுதியிலுள்ள சனாசர், மனாஸ்பல் மற்றும் பூர்மண்டல் ஏரி ஆகியவை பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
⚡பூர்மண்டல் ஏரி சோட்டா காசி எனவும் அழைக்கப்படுகிறது.
⚡ஜம்மு காஷ்மீர் வனத்துறையானது ஈரநிலங்கள் பற்றிய புவிசார்ந்த தரவுகளின் டிஜிட்டல் விவரங்களை தயாரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றிற்கான ஒரு முதன்மை துறையாகும்.
மாநாடுகள்
உலக நோய்த்தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு-2021 !!
⚡HOPE கூட்டமைப்பின் முதல் உலக நோய்த் தடுப்பு மற்றும் தளவாடங்கள் உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபியில் நடைபெற்றது.
⚡மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்தன் காணொளி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
⚡இம்மாநாட்டில் ஆசியா மீது கவனம் செலுத்துதல் : ஆசியா முழுவதும் தடுப்பூசி உற்பத்தி மற்றும் பங்கீடு” பற்றி விவாதிக்கப்பட்டது.
⚡டாக்டர் ஹர்ஷ்வர்தன் இந்தியாவின் தடுப்பூசி நிர்வாகத் திட்டம் பற்றியும் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் எனப்படும் இரண்டு இந்தியத் தடுப்பூசிகளின் உருவாக்கம் பற்றியும் இம்மாநாட்டில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
⚡HOPE கூட்டமைவு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள முன்னணித் தொழிற்சாலை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு ஒரு பொது - தனியார் கூட்டாண்மை ஆகும்.
⚡தடுப்பூசியின் உலகளாவியப் பங்கீட்டிற்காக இந்த கூட்டமைவு இணைந்து செயல்படுவதற்கு உறுதி பூண்டுள்ளது.
கண்டுபிடிப்பு
இயற்கையின் ஒரு புதிய விசை !!
⚡ஸ்விட்சர்லாந்திலுள்ள லார்ஜ் ஹாட்ரன் கொலைடரில் (Large Hadron Collider - LHC) உள்ள இயற்பியலாளர்கள் இயற்கையின் ஒரு புதிய விசையைக் கண்டுபிடித்துள்ளனர்.
⚡LHC என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் அணுத்துகள்களை அதிவேகத்தில் முடுக்கி விடும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஆய்வுக் கூடமாகும்.
⚡இது ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மன்றத்தின் (CERN - European Council for Nuclear Research’s) வளாகத்தில் அமைந்துள்ளது.
⚡இது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
⚡இது அணுத் துகள்களை அதன் பாதையின் ஊடாக அதன் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு வேண்டி அவற்றை முடுக்கி விடுவதற்காக 27 கி.மீ. தொலைவிற்கு மீக்கடத்தி காந்த வளையங்களுடன் கூடிய ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது.
⚡இது புரோட்டான் - புரோட்டான் என்ற ஒரு மோதலை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
⚡இந்த முடுக்கிகளின் உள்ளே மோதச் செய்வதற்கு முன்னால் ஒளியின் வேகத்திற்கு இணையான இரு உயர் ஆற்றல் துகள் ஒளிக்கற்றைகள் செல்லும்.
⚡அதி உயர் வெற்றிடத்தில் வைக்கப்பட்ட இரு தனித்தனி ஒளிக்கற்றை குழாய்களின் ஊடாக இந்த ஒளிக்கற்றைகள் எதிரெதிர் திசையில் பயணிக்கும்.
⚡மீக்கடத்தி மின்காந்தங்கள் வழி நடத்தும் வலுவான காந்தபுலத்தினால் இவை முடுக்கி வளையங்களை சுற்றி இயக்கப்படுகின்றன.
பாரம்பரியப் பல்லுயிர்ப் பெருக்கத் தளம் !!
⚡மகாராஷ்டிர மாநில அரசானது சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்போலி எனும் பகுதியைப் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.
⚡அரிதான நன்னீர் மீன் இனங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
⚡ஸ்கிஸ்துரா ஹிரண்யகேஷி எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய நன்னீர் மீன் இனத்தினை தேஜாஸ் தாக்கரே மற்றும் அவரது குழு கண்டுபிடித்துள்ளது.
⚡தேஜாஸ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகனாவார்.
⚡இந்த மீன்கள் சிந்துதுர்க் மாவட்டத்தின் சவந்த்வாடி தாலுக்காவிலுள்ள அம்போலியின் அருகே காணப் படுகின்றன.
⚡ஸ்கிஸ்துரா மீன் ஆக்சிஜன் நிறைந்த நீர்நிலைகள் மற்றும் ஓடைகளில் வாழும் ஒரு சிறிய வண்ண மயமான மீனாகும்.
⚡இதற்கு முன்பு அந்த மாநில அரசு,
அல்லப்பள்ளியின் மகிமை - கட்சிரோலி மாவட்டம்
லன்டோர் கோரி பூங்கா - ஜல்காவோன்
கணேஷ் கிந்த் - பூனா
மைரிஸ்டிகா சதுப்புநிலத் தாவரங்கள் - சிந்துதுர்க் மாவட்டம்
ஆகியவற்றைப் பாரம்பரிய பல்லுயிர்ப் பெருக்கத் தளங்களாக அறிவித்துள்ளது.
வர்த்தகம்
ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா !!
⚡உலகத்தின் மிகப் பெரிய சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்திற்கு குழந்தைகளை வன்முறையில் ஈடுப்படுத்தும் பதிவுகளை நீக்காததால் ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
⚡ரஷ்யாவில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவாலனி கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதற்கு காரணம் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பதிவுகளே என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
⚡இந்நிலையில் இந்த போராட்டத்தில் குழந்தைகளுக்கு அழைப்புவிடுக்கும் விதமாக பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்காததற்கு மாஸ்கோ நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்திற்கு 1,17,000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
⚡ரஷ்ய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகளவில் பலக் கோடி மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை ரஷ்யாவில் முழுமையாக முடக்க திட்டமிட்ட நிலையில் அது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது.
⚡கூடிய விரைவில் ரஷ்ய அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களையும் ரஷ்யாவில் முடக்க கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இராணுவம் / பாதுகாப்பு
ஐந்து நாடுகள் கூட்டு பயிற்சி !!
⚡கடற்படை செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகளுக்கான, 'குவாட்' அமைப்பில், இந்தியாவுடன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
⚡இந்த அமைப்பின் சார்பில், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில், மூன்று நாள் கடற்படை பயிற்சிகள் துவங்கின. இதில், பிரான்ஸ் கடற்படையும் இணைந்து உள்ளது.