தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 5.3.2021 (Daily Current Affairs)

உலகம்

மியன்மார் சர்வாதிகார ராணுவத் தலைமை, அமைச்சகங்களுக்கு அமெரிக்கா தடை !!

🔷மியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.

🔷ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 38 பேர் கொல்லப்பட்டனர்.

🔷இதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வெளியிட்ட கருப்புப் பட்டியலில் மியான்மர் பொருளாதார நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

🔷பர்மாவின் ராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

🔷அமைதியான போராட்டங்களை ராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்பு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது

அறிவியல் தொழில்நுட்பம்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் !!

🔷பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அமெரிக்கா ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் எஸ் 10 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

🔷நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஸ்டார்ஷிப் எஸ் 10 விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

🔷ஆகாயத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற நிலையில் மீண்டும் வெற்றிகரமாக தரையிரங்கியது. இதையடுத்து 2023-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு எலன் மஸ்க் அழைப்பு விடுத்து உள்ளார்.

ஏவுகணை தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதனை !!

🔷ஒடிசாவில் எஸ்.எப்.டி.ஆர். எனப்படும் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணை தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

🔷தொலைதுார ஏவுகணைகளை மேம்படுத்த உதவும் எஸ்.எப்.டி.ஆர். எனப்படும் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணை தொழில்நுட்பம் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஒடிசாவின் பலாசோரில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நேற்று காலை பரிசோதிக்கப்பட்டது.

🔷பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

இந்தியாவின் மிகப் பெரிய ரத்த வங்கி !!

🔷“சோனு ஃபார் யூ” என்ற செயலியை நடிகர் சோனு சூட் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். இதனால் இது இடியாவின் மிக பெரிய ரத்த வங்கியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த செயலி மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான ரத்தத்தினை உடனடியாக பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

🔷இதன் மூலமாக விபத்துகளில் காயமடைபவர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு

58 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி !!

🔷69-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

🔷இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 30 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, கேரளா, ரெயில்வே உள்பட 28 அணிகளும் கலந்து கொள்கின்றன.

🔷லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது.

விளையாட்டு

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை !!

🔷ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

🔷3-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட இந்திய வீரரான அரியானாவை சேர்ந்த 24 வயது நீரஜ் சோப்ரா தனது 5-வது முயற்சியில் 88.07 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

🔷இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

🔷ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் மற்றொரு இந்திய வீரரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷிவ்பால் சிங் (81.63 மீட்டர்) 2-வது இடமும், மற்றொரு அரியானா வீரர் சஹில் சில்வால் (80.65 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர்.

விருதுகள்

பாடகி பி.சுசீலாவுக்கு இங்கிலாந்தில் கவுரவம்

🔷சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, இங்கிலாந்தில் விருது வழங்கப்பட உள்ளது.

🔷'இங்கிலாந்து மகளிர் நெட்வொர்க்' அமைப்பை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்தில் சாதனை படைத்த பெண்களுக்கு, பாராட்டு விழா நடத்துவர்.

🔷இவ்விழா அங்குள்ள பார்லிமென்ட் கட்டடத்தில், உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும். இந்தாண்டு, இங்கிலாந்துக்கு வெளியே, சாதனை படைத்த பெண்களை கெளரவிக்க உள்ளனர்.

🔷இந்த விழா, காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில், பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான, இசை அமைப்பாளர் ரெஹைனா கெளரவிக்கப்பட உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு செராவீக் விருது !!

🔷'செராவீக்' மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

🔷அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவங்கியது.

🔷இன்று வரை நடந்த இந்த மாநாட்டில், 'செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நியமனங்கள்

ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்வு !!

🔷உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு அமெரிக்கா நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்றக்கழகம் சார்பில் சிறந்த ஆளுமை பெண் தலைவராக தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு வரும் 7 ஆம் தேதி சிக்காகோ நகரில் நடைபெறும் விழாவில் அமெரிக்கா எம்பி டேனி விருதுங்களை காணொளி காட்சி மூலம் வழங்கவுள்ளார்.

🔷மொத்தமாக, 20 துறைகளில் சிறந்து விளங்கும் 20 பெண்களுக்கு இந்த ஆண்டு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.


Share Tweet Send
0 Comments
Loading...