தினசரி நடப்பு நிகழ்வுகள் 4.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 4.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

⭐இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் ( floating solar power plant) தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் (Ramagundam) அமைக்கப்பட உள்ளது.

⭐100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் மே 2021 அன்று திறக்கப்படவுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் பறக்க ஆயத்தமானது நாசாவின் ஹெலிகாப்டா் !!

⭐செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலத்திலுள்ள சிறிய ஹெலிகாப்டா், பறப்பதற்குத் தயாராக அந்த கிரகத்தின் மேற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

⭐இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரால் அந்த ஹெலிகாப்டரின் மின் பாகங்கள் உறைந்து பழுதாவதைத் தடுப்பதற்காக, அதில் பொருத்தப்பட்டுள்ள வெப்பமூட்டி பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று நாசா அதிகாரிகள் தெரிவித்தனா்.

⭐செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.

⭐வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.

⭐அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.

விளையாட்டு

தேசிய மகளிர் ஒருநாள் போட்டி 12வது முறையாக ரயில்வேஸ் சாம்பியன் !!

⭐தேசிய சீனியர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், மித்தாலி ராஜ் தலைமையிலான ரயில்வேஸ் அணி 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

⭐சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ரயில்வேஸ் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

⭐இந்தப் போட்டித் தொடரில் அபாரமாக வென்ற ரயில்வேஸ் அணி 12வது முறையாக தேசிய சீனியர் மகளிர் ஒருநாள் டிராபியை முத்தமிட்டது.

⭐இந்த தொடர் மொத்தம் 14 முறை நடந்துள்ளதில், ரயில்வேஸ் 2 முறை மட்டுமே பட்டம் வெல்லத் தவறியது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி.. தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு !!

⭐ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இ்ந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை தேர்வு செய்து, தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் அறிவித்தது.

⭐இதில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் (பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்) இடம் பிடித்துள்ளார். 21 வயதான இளவேனில் தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா விட்டாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:-

⭐10 மீட்டர் ஏர் ரைபிள் (ஆண்கள்): திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார். பெண்கள் பிரிவு: அபூர்வி சண்டேலா, இளவேனில் வாலறிவன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (ஆண்கள்): சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், பெண்கள்: அஞ்சும் மோட்ஜில், தேஜஸ்வினி சவாந்த், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஆண்கள்): சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, பெண்கள்: மானு பாகெர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால்.

⭐25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் (பெண்கள்): ராஹி சர்னோபத், மானு பாகெர்.

⭐ஸ்கீட் (ஆண்கள்): அங்கட் விர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்

⭐10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக்குமார், அஞ்சும் மோட்ஜில். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி

மியாமி ஓபன் டென்னிஸ் !!

⭐அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

⭐இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 9-ம் நிலை வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) தோற்கடித்து வெற்றி பெற்றார்.

⭐35 ஆண்டு கால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற 6-வது வீராங்கனை என்ற சிறப்பை ஆஷ்லி பார்ட்டி பெற்றார். இதற்கு முன்பு ஸ்டெபி கிராப் (ஜெர்மனி), மோனிகா செலஸ் (அமெரிக்கா), சாஞ்சஸ் விகாரியா (ஸ்பெயின்), வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றவர்கள் ஆவர்.

⭐24 வயதான ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.2 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

சாதனைகள்

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி சாதனை !!

⭐நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம், சர்வேதச ஒரு நாள் போட்டியில் 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி, புதிய உலக சாதனையை படைத்தது.

⭐நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

⭐தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 38.3 ஓவரில் 215 ரன்கள் குவித்து அதிரடி வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 22 ஆட்டங்கள் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

நியமனங்கள்

பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு புதிய அதிகாரியாக குஜராத் முன்னாள் டிஜிபி நியமனம்!

⭐குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காந்த்வாலா, பிசிசிஐ-யின் புதிய ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

⭐இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராக, குஜராத் மாநில முன்னாள் டிஜிபி சபீர் ஹூசைன் காந்த்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த அஜித் சிங் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ற நிலையில், காந்த்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...