தினசரி நடப்பு நிகழ்வுகள் 4.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 4.3.2021 (Daily Current Affairs)

உலகம்

அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு கிடைத்த கெளரவம் !!

🔷அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி. ஒருவர் வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பியாக பிரமிளா ஜெயபால் பணியாற்றி வருகிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023-ஐ அறிவித்தது ஐ.நா. !!

🔷இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த முன்மொழிவின் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. பொதுச் சபை அறிவித்துள்ளது.

🔷சிறுதானியங்களால் உடல்நலனுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிப்பதற்கு இந்தியா, ரஷியா, வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் ஐ.நா. பொதுச் சபையில் முன்மொழிவை அளித்தன.

🔷அதில், 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிப்பதற்கு ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. அதைத் தொடா்ந்து, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

🔷சிறுதானியங்கள் உற்பத்தி தொடா்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை உதவும்

இந்தியா

இஸ்ரோ விண்வெளி ஆய்வு இத்தாலியும் இணைகிறது..!

🔷சமீபத்தில் பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக்கோள்களை 'பி.எஸ்.எல்.வி - சி51' ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

🔷இதேபோல இத்தாலியும் இஸ்ரோ உடன் இணைந்து விண்வெளி ஆய்வு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

🔷இஸ்ரோ தலைவர் கே.சிவன் மற்றும் இத்தாலி விண்வெளி கழக தலைவர் ஜியார்ஜியோ சகோசியா தலைமையிலான குழுக்கள் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விண்வெளி திட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சு நடத்தின.

🔷அப்போது புவிசார் ஆய்வு விண்வெளி அறிவியல் 'ரோபோ' மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது ஆகியவை தொடர்பாக கூடுதல் பணிக் குழுக்களை ஏற்படுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

🔷ஏற்கனவே பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இஸ்ரோவிடம் உள்ள விண்வெளி ஆய்வுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் தற்போது இத்தாலியும் இணைந்துள்ளது.

முதல் விமான சரக்கு சேவை !!

🔷நாகலாந்து தனது முதல் விமான சரக்கு சேவைகளை திமாபூர் விமான நிலையத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷நாகலாந்து முதல்வர் இந்த சேவையை அதிகாரப்பூர்வமாகக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இது நாகலாந்து அரசின் தோட்டக்கலைத் துறை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.

🔷இந்த சேவைகளில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான பங்காளிகளாக உள்ளனர்.

விளையாட்டு

தேசிய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் !!

🔷நடப்பு சீசன் போட்டிகள் மாா்ச் மாதத்தில் தொடங்குகின்றன. இதில் முதலாவதாக சப்-ஜூனியா் மகளிா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஜாா்க்கண்ட் மாநிலம், சிம்தெகாவில் மாா்ச் 10 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

🔷அதைத் தொடா்ந்து சப்-ஜூனியா் ஆடவா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹரியாணா மாநிலம், நா்வானாவில் மாா்ச் 17 முதல் 25 வரை நடைபெறுகிறது.

🔷முதல் முறையாக நடைபெறும் ஜூனியா் மகளிா் அகாதெமி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மாா்ச் 17 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. அதிலேயே மகளிா் பிரிவு போட்டி மாா்ச் 17 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.

🔷இரண்டுமே ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடத்தப்படுகின்றன. பின்னா் ஜூனியா் மகளிா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஜாா்க்கண்டின் சிம்தெகாவில் ஏப்ரல் 3 முதல் 12 வரை நடைபெறவுள்ளது.

தரவரிசை

சென்னை ஐஐடி முதலிடம் !!

🔷அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் 14 கல்வி நிறுவனங்கள் தகுதி பட்டியில் உள்ளன.

🔷இந்திய கல்வி நிறுவனங்களில், ஐஐடி சென்னை முதல் இடத்தையும் (சர்வதேச தரவரிசை 30), ஐஐடி பம்பாய் (41) இரண்டாவது இடத்தையும், ஐஐடி கோரக்பூர் (44) மூன்றாவது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் (50) நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஐஐடி டெல்லி 10வது இடத்தில் உள்ளது.

🔷ஐஐடி சென்னையை பொருத்தமட்டில் பெட்ரோலிய பொறியியல் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்த சர்வதேச பட்டியலில் தேர்வாகி உள்ளது.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

இந்தியா, பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

🔷புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவும், பிரான்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

🔷பரஸ்பர ஒத்துழைப்பு, சமத்துவம், பயன்களைப் பரிமாறிக் கொள்வதன் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். சூரிய மின்சக்தி, காற்றாலை, ஹைட்ரஜன், உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக:

🔷அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சியும், அவர்களது பரிமாற்றமும் ஏற்படும்

🔷அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களும், தரவுகளும் பரிமாறிக் கொள்ளப்படும்

🔷பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு; உபகரணங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறப்படும்

🔷கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்

🔷புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை அடைய முடியும்.

இந்தியா- ஃபிஜி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

🔷மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகமும்,  ஃபிஜி குடியரசு நாட்டின் வேளாண்மை அமைச்சகமும், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

🔷இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் நிர்வாக முகமைகளின் வாயிலாக பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக கூட்டு பணிக் குழு அமைக்கப்படும்.

🔷இந்த பணிக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்தியாவிலும் ஃபிஜியிலும் தனது கூட்டத்தை நடத்தும்.

🔷ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...