தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 31.3.2021 (Daily Current Affairs)

உலகம்

பாலின பாகுபாடை அகற்றுவதில் 140வது இடத்தில் இந்தியா !!

🔷பாலின பாகுபாடுகளை அகற்றுவதில் இந்தியா 156 நாடுகளில் 140வது இடத்தில் உள்ளது.சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு உலக நாடுகளின் பாலின பாகுபாடு குறியீடை 2006ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.

🔷அரசியல், கல்வி, பொதுச்சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பாலின பாகு பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இந்தக் குறியீடு வெளியிடப் படுகிறது.இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான பாலின பாகுபாடை குறீயிடு வெளியிடப் பட்டு உள்ளது.

🔷மொத்தம் 156 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பாலின பாகுபாடில் இந்தியா 140-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

🔷இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் 65வது இடத்தையும் நேபாளம் 106வது இடத்தையும் பாகிஸ்தான் 153வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் 156வது இடத்தையும் பூடான் 130வது இடத்தையும் இலங்கை 116வது இடத்தையும் பிடித்துள்ளன.

டெக்சாசில் துவக்க பள்ளிக்கு இந்திய அமெரிக்கர் பெயர் !!

🔷அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட உள்ள துவக்கப்பள்ளி ஒன்றுக்கு, மறைந்த சமூக சேவகரும், இந்திய அமெரிக்கருமான சோனால் புச்சர் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔷மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சோனால் புச்சர். 'பிசியோ தெரப்பி'யில் பட்டம் பெற்ற சோனால், திருமணத்துக்கு பின், 1984-ல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டனில் குடியேறினார்.சமூக சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த சோனால், பள்ளி மாணவ - மாணவியர் நலனில் மிகவும் அக்கறை செலுத்தினார்.

🔷ஹூஸ்டனில் கல்வி மேம்பாடு தொடர்பாக, பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார்.

🔷புற்று நோயால் பாதிக்கப்பட்ட சோனால் புச்சர், கடந்த, 2019ல், தன், 58 வயதில் இறந்தார்.

🔷இந்நிலையில், ஹூஸ்டனில், 2023ல் திறக்கப்பட உள்ள துவக்கப்பள்ளி ஒன்றுக்கு, சோனாலி புச்சர் பெயரை வைக்க, ஹூஸ்டனில் உள்ள, 'தி போர்ட் பிளண்ட் இண்டிபெண்டன்ட் ஸ்கூல் டிஸ்டிரிக்ட்' அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியா

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் !!

🔷அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

🔷இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும் மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

🔷பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

விண்வெளி அடைவு தொழில்நுட்ப மையம் !!

🔷இந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) அண்மையில் NIT - நாக்பூர், போபால் மற்றும் ரூர்கேலா ஆகியவற்றில் மூன்று விண்வெளி அடைவு தொழில்நுட்ப மையங்களை திறந்துவைத்தது.

🔷இது இந்தியாவில் உள்ள விண்வெளிதுறைசார் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதற்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ISRO, ஏற்கனவே NIT அகர்தலா, திருச்சி மற்றும் ஜலந்தரில் இதுபோன்ற மூன்று மையங்களைத் திறந்துள்ளது.

டயல் 112 - மாநில அவசரகால ஆதரவு அமைப்பு !!

🔷ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் `157 கோடி மதிப்புள்ள ‘டயல் 112’ – மாநில அவசரகால ஆதரவு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

🔷காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் நலவாழ்வு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், இந்தக் கட்டணமில்லா எண்ணை மக்கள் பயன்படுத்தலாம்.

🔷மாநில அவசரநிலை பதிலளிப்பு மையம் மற்றும் மொபைல் டேடா டெர்மினல்கள் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு வாகனங்களும் தொடங்கிவைக்கப்பட்டன.

முக்கிய குழு

பியூஷ் கோயல் குழு !!

🔷உயர்தொழிநுட்ப பகுதிகளில் உற்பத்தி மேற்கோள்வதற்கான குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது.

🔷அலுவல்பூர்வ அறிவிப்பின்படி, இக்குழுவுக்கு மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கவுள்ளார்.

🔷இந்நடவடிக்கை, முதலீடுகளை மேம்படுத்துவதோடு தீவிர தொழில்நுட்ப துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள்

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது !!

🔷திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

🔷நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...