தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.4.2021 (Daily Current Affairs)

உலகம்

கண்ணிமை நோயை ஒழித்ததற்காக காம்பியா சான்றிதழ்..!!

🔷பொதுநலச்சிக்கலான கண்ணிமை நோயை ஒழித்ததற்காக உலக நல வாழ்வு அமைப்பிடம் இருந்து அண்மையில் காம்பியா சான்றிதழ் பெற்றது. இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலக நல வாழ்வு அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 2 - ஆவது நாடாக காம்பியா ஆனது.

🔷புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்காக 2021 முதல் 2030 வரையிலான செயல்திட்டத்தை WHO அறிமுகப்படுத்தியது. கோட் டி ஐவோயர் நாடு இந்தச் சாதனையை அடைந்த முதல் நாடாகும்.

அர்ஜென்டினாவில் கூகுள் வலைதளத்தை 215 ரூபாய் கொடுத்து வாங்கிய வெப் டிசைனர்..!!

🔷அர்ஜென்டினாவில் வெறும் 270 பெசோ ($2.9 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 215 ரூபாய்) கொடுத்து www.google.com.ar என்கிற அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கிவிட்டார் ஒரு 30 வயது வலைதள வடிவமைப்பாளர்.

🔷அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளம் கடந்த சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஏலத்துக்கு வந்த போது, அந்த வலைதள வடிவமைப்பாளர் அதை வாங்கிவிட்டார்.

🔷நிகோலஸ் குரொனா என்கிற 30 வயதுக்காரர் தான், Google.com.ar என்கிற வலைதளத்தை சட்டப் பூர்வமாக, மிக சாதாரண முறையில் வாங்கிவிட்டார்.

இந்தியா

டெல்லியில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது..!!

🔷டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் கட்டாயம் ஆகியுள்ளது.

🔷டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா - 2021 (என்சிடி மசோதா) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.

🔷எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த மார்ச் 29 - ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

🔷இந்த நிலையில், டெல்லிக்கு ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டம் முதல் அமலுக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் கட்டாயம் ஆகியுள்ளது.

நியமனங்கள்

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ASICS பிராண்ட் தூதராகிறார்..!!

🔷ஜப்பானிய விளையாட்டு ஆடை பிராண்ட் ASICS, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அதன் பிராண்ட் தூதராக நியமித்ததாக அறிவித்தது.

🔷இது ஓடுதல் / ஓட்டம் வகைக்கான விளையாட்டு உபகரணங்களில் கவனம் செலுத்தும் நிறுவனம்.

🔷ASICS பல்வேறு வகையான விளையாட்டுகளில் இளம் மற்றும் புதிய தடகள திறமைசாலிகளுடன் பணியாற்றி வருகிறது.

🔷இந்தியாவில், ASICS - ஐ நடிகர் டைகர் ஷெராஃப் விளம்பரப்படுத்துகிறார். ஆசியாவில், ASICS தற்போது இந்தியா, இலங்கை மற்றும் பூட்டான் முழுவதும் 55 - க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள் / ஏவுகணை

விண்ணில் எதிரி இலக்கை தாக்கும் பைதான் 5 ஏவுகணை சோதனை வெற்றி..!!

🔷விண்ணில் எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பைதான் 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

🔷இந்திய ராணுவத்தின் சார்பில்ஏவுகணைகளின் தாக்குதல் திறன்அவ்வப்போது பரிசோதிக்கப்படும். அதன்படி, பைதான் 5 ஏவுகணை கோவா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

🔷இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத் தில் இருந்து செலுத்தப்பட்ட பைதான் 5 ஏவுகணை வானில்இருந்து விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) முதல் முறையாக இந்தஏவுகணை சோதனையை நடத்தி முடித்துள்ளது.

🔷கோவா கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை பைதான் 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்காக அதிகாரிகளுக்கும் விஞ்ஞானி களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறப்பு

அப்பல்லோ-11 விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்..!!

🔷மைக்கேல் கொலின்ஸ் சுமார் 238,000 மைல்கள் பயணித்து நிலவை நெருங்கி, நிலவில் இருந்து 69 மைல்கள் தொலைவுக்கு வந்தபோதும் நிலவில் கால் வைக்கவில்லை.

🔷நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் அப்பல்லோ - 11 ஆகும். நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்குடன், நிலவுப் பயணம் மேற்கொண்டவர் மைக்கேல் கொலின்ஸ்.

🔷நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இறங்கி நடந்தபோது, அப்பல்லோவின் கட்டுப்பாட்டு விண்கலத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கியிருந்து சுற்றுவட்டப்பாதை பணிகளை கவனித்தார். இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அப்பல்லோ - 11 பூமிக்கு திரும்பியதை உலகமே கொண்டாடியது.

🔷இந்த சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றிருந்த விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ், முதுமை சார்ந்த சார்ந்த உடல்நல கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

🔷மைக்கேல் கொலின்ஸ், சுமார் 238,000 மைல்கள் பயணித்து நிலவை நெருங்கினார். நிலவில் இருந்து 69 மைல்கள் தொலைவுக்கு வந்தபோதும், நிலவில் கால் வைக்கவில்லை. ஆல்ட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவின் மேற்பரப்பில் இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ஒரு நாள் சுற்றுப்பாதையில் கழித்தார்.

இறப்பு

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்..!!

🔷இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சோலி சொராப்ஜி காலமானார்.

🔷இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி (91). கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

🔷சோலி சொராப்ஜி 1930 - ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவர் 1953 - ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் பயிற்சியைத் தொடங்கினார். 1971 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். 1977 முதல் 1980 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.

🔷கடந்த 1989 - ஆம் ஆண்டு அட்டர்னி ஜெனரலாகவும், பின்னர் 1998 - ஆம் ஆண்டு முதல் 2004 - ஆம் ஆண்டு வரை மீண்டும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக சோலி சொராப்ஜி பணியாற்றினார்.

🔷மனித உரிமை வழக்குரைஞரான சொராப்ஜி 1997 - இல் நைஜீரியாவிற்கான சிறப்பு அறிக்கையாளராக ஐ.நா. நியமித்தது.

🔷மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. துணை ஆணையத்தில் சேர்ந்த சொராப்ஜி, 1998 முதல் 2004 வரை அதன் தலைவராக இருந்தார். சிறுபான்மையினரின் பாகுபாடு மற்றும் பாதுகாப்பு தடுப்பு தொடர்பான ஐ.நா துணை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

🔷சொராப்ஜி 2000 முதல் 2006 வரை ஐ.நா. உலக நிரந்தர நீதிமன்றத்தில் நடுவராகவும் பணியாற்றினார். 2002 - ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்யும் ஆணையத்தில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

🔷மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடியதற்காக சோலி சொராப்ஜிக்கு பத்மவிபூஷண் விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.


Share Tweet Send
0 Comments
Loading...