தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 30.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

எரிசக்தி துறையின் உறவுகளை புதுப்பிக்க இந்தியா -அமெரிக்கா ஒப்புதல் !!

🔷மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோல்மை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தலைவா்களும் இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மறுஆய்வு செய்து சீரமைப்பது என பரஸ்பரம் ஒப்புக் கொண்டனா்.

🔷பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பசுமை எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு அதிக முன்னுரிமை தந்து செயல்பட்டு வருகின்றனா்.

🔷அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த எரிசக்தி உறவுகளை புதுப்பிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔷அமெரிக்காவின் தொழில்நுட்பங்களையும், இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் எரிசக்தி சந்தையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எரிசக்தி உறவை மறுசீரமைத்து புதுப்பிப்பதன் வாயிலாக இருநாடுகளும் தீவிர முயற்சிகளை முன்னெடுக்கும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவியல் தொழில்நுட்பம்

சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ஹோப் விண்கலம் !!

🔷அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதையடுத்து, அந்த விண்கலம் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதியை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

🔷அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் வெற்றிகரமாக ‘சயின்ஸ் ஆர்பிட்’ எனப்படும் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. இதற்காக அந்த விண்கலத்தில் உள்ள 6 திரஸ்டர் என்ஜின்கள் 8.36 நிமிடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்பட்டது.

🔷சரியாக திரஸ்டர்கள் இயக்கப்படவில்லை என்றால் விண்கலம் விண்வெளியில் தொலைந்து போகக்கூடும் சூழ்நிலை இருந்தது. இந்த திசை திருப்பும் முயற்சியில் கடைசியாக என்ஜின் இயக்கப்பட்டது மிகவும் சவாலானது. ஆனால் வெற்றிகரமாக செவ்வாயின் அறிவியல் சுற்றுவட்டப்பாதையை ‘ஹோப்’ விண்கலம் அடைந்தது சாதனைக்குரியது.

🔷அறிவியல் சுற்றுவட்டப் பாதையில் நகர்ந்து கொண்டு இருக்கும் ‘ஹோப்’ விண்கலம் குறைந்தபட்சமாக 20 ஆயிரம் கி.மீ தொலைவில் இருந்து அதிகபட்சமாக 42 ஆயிரத்து 461 கி.மீ தொலைவில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளது.

🔷அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை ‘ஹோப்’ விண்கலம் தொடங்க உள்ளது.

🔷அறிவியல் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ள ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்ட ‘செர்பெரஸ் போசே’ என்ற பகுதியை மிக தெளிவாக படம் பிடித்து விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பியுள்ளது.

கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் புதிய வகை சிலந்தி கண்டுபிடிப்பு !!

🔷ஆஸ்திரேலியாவில் அழகிய வண்ணம் கொண்ட புதிய வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🔷சதுப்பு நிலப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மராட்டஸ் நெமோ என அழைக்கப்படும் இந்த சிலந்தி 4 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. மயில் சிலந்தி வகையைச் சேர்ந்த நெமோ, நடனங்கள் ஆடுவதில் தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🔷ஆரஞ்சு நிற முகவமைப்புடன் வெள்ளைக் கோடுகளுடன் காண்பதற்கு கோமாளியைப் போல இருப்பதால் இந்தச் சிலந்திக்கு நெமோ என பெயரிட்டுள்ளதாக இதனைக் கண்டுபிடித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

நியமனங்கள்

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதி !!

🔷உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிப்பதற்குத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளாா்.

🔷விதிகளின்படி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு வருகிறாா். அதனடிப்படையில் என்.வி.ரமணாவின் பெயரை எஸ்.ஏ.போப்டே பரிந்துரைத்துள்ளாா்.

🔷எஸ்.ஏ.போப்டேவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.

🔷2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை என்.வி.ரமணா அப்பதவியில் நீடிப்பாா். அவா் ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

🔷கடந்த 2013-ஆம் ஆண்டில் தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி.ரமணா, அடுத்த ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

விருதுகள்

பாடகி பி.சுசீலாவுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது !!

🔷பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

🔷வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடியாக வலம் வருபவர் பி.சுசீலா(85). 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

🔷பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றிருப்பவர் 5 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.

🔷இந்நிலையில் இவருக்கு மற்றொரு மகுடமாய் தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

🔷பாடகி பி.சுசீலாவுக்கு 2019ம் ஆண்டுக்கான புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும், பொற்பதக்கமும் வழங்கப்பட்டது.

🔷இந்த விருதை பெறும் முதல் இசை கலைஞர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

சாதனைகள்

உலக சாதனை படைத்த ஈஷா மஹா சிவராத்திரி விழா..!!

🔷கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், உலகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். சத்குருவுடன் நள்ளிரவு தியானம், பல்வேறு மாநில கலைஞர்களின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

🔷இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் மற்றும் ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் என மொத்தம் 13 மொழிகளில் நேரலை செய்யப்பட்டது.

🔷மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடந்த இவ்விழாவில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பங்கேற்றனர்.

🔷அதில் சமூக வலைதளங்களில் மட்டும் 2 கோடி பேர் பார்த்துள்ளதாக போல் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அன்றைய வாரம், உலக அளவில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் இவ்விழா முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

🔷சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவைக் கூட இது பின்னுக்கு தள்ளியுள்ளது. 2-ம் இடம் பிடித்த கிராமி விழாவை 1.3 கோடி பேர் மட்டுமே நேரலையில் பார்த்துள்ளனர்.

🔷இதுதவிர, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தொலைகாட்சிகள் மூலம் பல கோடி பேர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாவாகவும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் திகழும் மஹா சிவராத்திரி விழாவை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை ஈஷாவுக்கு கிடைத்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...