உலகம்
சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் முதன்முறையாக இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி சாதனை..!!
🔷சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் 53 ஆண்டுகளில் முதன்முறையாக இரவு நேரத்தில் பூமிக்கு திரும்பி சாதனை படைத்துள்ளனர்.
🔷அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
🔷167 நாட்களுக்கு பின் விண்வெளியிலிருந்து ஸ்பேஸ் - எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ (Crew) டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் புறப்பட்ட நான்கு பேரும் புளோரிடா மாகாணத்திலுள்ள பனாமா நகரில் நள்ளிரவில் வெற்றிகரமாக தரையிரங்கினர்.
உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு..!!
🔷உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு உலகிலேயே மிக நீளமானமானதாக கருதப்படும் தொங்கு நடைப்பாலம் போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.
🔷போர்ச்சுகல்லில் உள்ள அரோவுகா (Arouca) பகுதியில் பசுமையான இயற்கை சூழலுக்கு மத்தியில், ஆற்றின் குறுக்கே இந்த தொங்கு நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. தரையில் இருந்து 175 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 2.8மில்லியன் டாலர் மதிப்பில், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
🔷தொங்கு நடைபாலத்தை கட்டிமுடிப்பது கடும் சவாலாக இருந்ததாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
🔷1693 அடி நீளம் கொண்ட இந்த தொங்கு நடைபாலத்தில் பயணிப்பது மிகுந்த உற்சாகமளிப்பதாக இதில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். பாலத்தில் நடக்கையில், ஒவ்வொரு அடியிலும் பாலம் அசையும் போது அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், வித்யாசமான அனுபவமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
🔷பாலத்தில் நடந்த படி இயற்கை சூழலை ரசிக்க முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா
அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி..!!
🔷அஸ்ஸாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
🔷126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தனியாக 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 25 இடங்களில் வெற்றி பெற்றன. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 29 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
🔷இதன் மூலம் அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையடுத்து அஸ்ஸாமின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் மீண்டும் தேர்வு செய்யப்படுகிறார்.
🔷பாஜக சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்த சோனாவால், மோடி அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கேரளாவில் இடதுசாரி கட்சிக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது..!!
🔷கேரளாவில் இடதுசாரி கட்சிக் கூட்டணி, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி இத்தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
🔷140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜக 3 - வது அணியாகவும் களம் இறங்கின.
🔷கடந்த 6 - ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனியாக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெற்றது.
🔷இதேபோல் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 21 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
🔷பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சிக்கு ஏற்கனவே இருந்த ஒரு எம்எல்ஏ தொகுதியும் கைவிட்டுப் போனது. இந்தத் தேர்தலில் இடது சாரி கூட்டணிக் கட்சிகள் 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
புதுச்சேரி முதல்வராகிறார் என்.ரங்கசாமி..!!
🔷புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக என்.ரங்கசாமி பொறுப் பேற்கிறார்.
🔷தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
🔷மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி யில் காங்கிரஸ் 2 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
🔷புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 இடங்களை பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும்.
🔷எனவே, அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்கிறார்.
தமிழ்நாடு
திமுக 10 வருட கால இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளது..!!
🔷மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மே 2 ம் தேதி 10 வருட கால இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ளது.
🔷திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
🔷தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 - ஆம் தேதி நடைபெற்றது. மே 2 - ஆம் ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.
🔷இதில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது.
சாதனைகள்
ஒரு மணி நேரத்தில் 3050 புஷ்அப் - அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை..!!
🔷அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 3ஆயிரத்து 50 முறை pushups செய்து இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
🔷Pineville பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற இளைஞர் இந்த சாதனையை செய்துள்ளார். இவர் இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 2900 முறை pushups எடுத்து சாதனை படைத்திருந்தார்.
🔷தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். அவரது இந்த சாதனை முயற்சிகள் மூலம் கிடைக்கின்ற பணம் National Purple Heart Honor Mission என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டன.