தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை 2021 !!

⭐‘அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை 2021’-க்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஒப்புதல் அளித்துள்ளாா்.

⭐அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்தோடு மட்டுமின்றி, அரியவகை நோய் குறித்த உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த தேசிய கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

⭐இதன் மூலம், இந்த கொள்கையில் குரூப்-1 இன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ராஷ்டிரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்படும்.

⭐வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினா் மட்டுமின்றி, ‘பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜ்னா’ திட்டத்தின் கீழ் தகுதிபெறுபவா்களில் 40 சதவீதம் பேரும் இந்த மருத்துவ நிதியுதவித் திட்டத்தால் பயன்பெற முடியும்

14 இலக்க அடையாள எண் !!

⭐ஒரு வருட காலத்திற்குள் நாட்டின் ஒவ்வொரு நிலத்திற்கும் 14 இலக்க அடையாள எண்ணை வழங்க திட்டமிட்டுள்ளது.

⭐”ULPIN” என்பதன் விரிவாக்கம் - Unique Land Parcel Identification Number (தனித்துவமான நில அடையாள எண்), இது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள 14 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும்.

⭐ULPIN என்பது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (Digital India Land Records Modernisation Programme (DILRMP)) ஒரு பகுதியாகும்.

⭐2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Digital India Land Records Modernisation Programme (DILRMP) திட்டத்தின் முக்கிய நோக்கம் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதல் மற்றும் மையப்படுத்தப்பட்ட நில பதிவு மேலாண்மை முறையை உருவாக்குதலாகும்.

பாலின விகதம் அதிகரிப்பு வீதத்தில் தில்லி முதலிடம் !!

⭐இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அறிக்கையை (Women and Men in India report) தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office) வெளியிட்டுள்ளது.

⭐பாலின விகிதம் 2001 ல் 933 ஆக இருந்தது 2011 ல் 943 ஆக உயர்ந்துள்ளது.

⭐பாலின விகதம் அதிகரிப்பு வீதத்தில் தில்லி முதலிடத்தையும், சண்டிகார் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளன.

⭐பாலின விகிதம் வீழ்ச்சியில் டாமன் மற்றும் டையு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

⭐1000 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் 2017 ல் 0.07 ஆக இருந்தது 2019 ல் 0.05 ஆக குறைந்துள்ளது

⭐இந்தியாவின் கல்வியறிவு விகிதம் (literacy rate) 2011 ல் 73 ஆக இருந்து 2017 ல் 77.7 ஆக உயர்ந்துள்ளது.

⭐கல்வியறிவு விகிதங்களில் பாலின இடைவெளி மிக அதிகமாகவுள்ள மாநிலங்களாக ராஜஸ்தான் , பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நியமனங்கள்

அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் நியமனம் !!

⭐அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் (Employees’ State Insurance Corporation (ESIC)) பொது இயக்குநராக முக்மீத் S பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

⭐இவர் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

⭐ஜார்கண்ட் அரசாங்கத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து !!

⭐ரியோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரேசிலில் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் நடக்க இருந்தது.

⭐நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

⭐அடுத்த ஆண்டு (2022) போட்டி வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்குவாஷ் சேலஞ்சா்: டோட் ஹாரிட்டி சாம்பியன் !!

⭐சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சா் போட்டியில் அமெரிக்காவின் டோட் ஹாரிட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

⭐சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாதெமியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த டோட் ஹாரிட்டி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் மகேஷ் மங்கோன்கரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

⭐மகளிர் இறுதிச்சுற்றில் எகிப்தின் ஹனா மோட்டாஸ், சகநாட்டவரான மலாக் கமாலை வீழ்த்தி பட்டம் வென்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...