தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.4.2021 (Daily Current Affairs)

உலகம்

மியான்மா் ராணுவம் மீது ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை..!!

🔷மியான்மரில் ஜனநாயக அரசைக் கலைத்துவிட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

🔷மியான்மா் ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாயிங் உள்ளிட்ட அதிகாரிகள், எல்லைக் காவல் படையினா், அரசு அதிகாரிகள் மீது சொத்து முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்படுகின்றன.

🔷2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் 30 - ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் நீருக்குள் மூழ்கி புதிய கின்னஸ் சாதனை..!!

🔷சீனாவில் நீருக்குள் கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் மூழ்கி, புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

🔷தெற்கு சீனாவின் Hainan மாகாணம் Sanya நகரில் இயங்கும் ஒரு பொழுது போக்கு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் 110 தொழில் முறை நீச்சல் வீரர்கள் கடல் கன்னி உடை அணிந்து பங்கேற்றனர்.

🔷11 அடி ஆழ ராட்சத நீர் தொட்டியில் மீன்களுடன் கடல் கன்னி உடையில் நீச்சல் வீரர்கள் அதிக நேரம் மூழ்கி, தங்கள் திறமையை நிரூபித்து க்காட்டினர். முடிவில், இந்த சாதனைக்கு அங்கீகாரம் வழங்கி கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கி, கௌவுரவித்தது.

இந்தியா

தேஜஸ் போர் விமானத்தில் பைத்தான் - 5 ஏவுகணை இணைப்பு..!!

🔷முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான ‘பைத்தான் - 5’ ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

🔷இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போர் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷அதனடிப்படையில், பைத்தான் - 5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு வாட்ஸ்ஆப் உதவி எண் - தேசிய பெண்கள் ஆணையம் அறிவிப்பு..!!

🔷தேசிய பெண்கள் ஆணையம், கர்ப்பிணி பெண்களுக்காக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை (9354954224) அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் அவசரத் தேவைகளுக்காக வாட்ஸ்ஆப் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷இதன்படி அவசரத் தேவைகளுக்காக கர்ப்பிணி பெண்கள் 9354954224 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் 24 மணி நேரமும் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

விளையாட்டு

டி20 வரலாற்றில் முதல் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்த முதல் வீரர்..!!

🔷டி20 வரலாற்றில் முதல் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் டெல்லி அணி வீரரான பிரித்வி ஷா.

🔷ஐபிஎல் போட்டியின் 25 - வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. அதிரடியாக ஆடிய டெல்லி வீரா் பிரித்வி ஷா ஆட்டநாயகன் ஆனாா்.

🔷இந்த ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய ஷிவம் மவியின் பந்துவீச்சில் ஆறு பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் இளம் வீரர் பிரித்வி ஷா. டி20 வரலாற்றில் எந்த ஒரு வீரரும் முதல் ஓவரிலேயே ஆறு பவுண்டரிகள் அடித்தது கிடையாது.

🔷ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்த 2-வது வீரர், பிரித்வி ஷா. இதற்கு முன்பு 2012-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரஹானே, ஆர்சிபி அணியைச் சேர்ந்த எஸ். அரவிந்த் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அது 14-வது அடிக்கப்பட்டது.

செயற்கைக்கோள் / ஏவுகணை

விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை ஏவிய சீனா..!!

🔷விண்ணில் தனக்கென பிரத்யேக ஆய்வு மையத்தை அமைத்துவரும் சீனா, அதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக செலுத்தியது.

🔷ஹைனான் (Hainan ) மாகாணத்தில் இருந்து லாங்மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்ட, 66 டன் எடைக்கொண்ட தியான்ஹே சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🔷தியான்ஹே என்ற அந்த அமைப்பு, விண்வெளி ஆய்வு மையத்தின் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகவும், பணியாளர்களின் முக்கிய வாழ்க்கை இடமாகவும் செயல்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

🔷விண்ணில் தனக்கென பிரத்யேக விண்வெளி மையத்தை அமைத்துவரும் சீனா, அடுத்த ஆண்டு முதல் அங்கு ஆய்வை தொடங்கவுள்ளது.

நியமனங்கள்

அமித் பானர்ஜியை BEML - இன் CMD - யாக தேர்வு செய்தது..!!

🔷பொது நிறுவன தேர்வு வாரியம் பாரதி எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தின் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (CMD) அமித் பானர்ஜியை தேர்வு செய்தது.

🔷ஏப்ரல் 26, 2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில் PESB அறிவித்தது. தற்போது, அவர் BEML லிமிடெட் இயக்குநராக (ரயில் & மெட்ரோ) பணியாற்றி வருகிறார்.

🔷BEML மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது தொழில் வாழ்க்கையில், ஶ்ரீ பானர்ஜி R&D மற்றும் உற்பத்தி செயல்பாடுகளில் பணியாற்றியுள்ளார் SSEMU, மெட்ரோ கார்கள், கேடனரி பராமரிப்பு வாகனம் போன்ற பல்வேறு தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு அவரது அனுபவத்தில் அடங்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...