தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.11.2020 (Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 29.11.2020 (Current Affairs)
உலகம்
  • ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) பிரதமர் ஷேக்-முகமது-பின்-ரஷீத்-அல்-மக்தூமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்
  • ஃஎத்தியோப்பியாவின் டிக்ரே மாகாணத்தில் தாக்குதல் நடத்தி வரும் ராணுவம், தலைநகர் மேகேலியைக் கைப்பற்றியுள்ளது
இந்தியா
  • வெளிநாட்டு செய்திகளை ஒளிபரப்பவும், வெளியிடவும் கட்டுப்பாடு விதிப்பதற்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  • உத்தர பிரதேச மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த சட்டவிரோத மதமாற்றத்தைத் தடை செய்வதற்கான அவசரச் சட்ட வரைவுக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்தார்
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான மாசுக் கட்டுப்பாடு சான்றிதழை அறிமுகப்படுத்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம்
  • அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) நவம்பரில் இதுவரையில் பங்குகளில் ரூ.60,358 கோடியை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
விளையாட்டு
  • காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகினார்

Share Tweet Send
0 Comments
Loading...