தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.5.2021 (Daily Current Affairs)

உலகம்

வடகொரியாவில் உடலுடன் ஒட்டி இருக்கும் இருக்கமான ஜீன்ஸ் அணிய தடை..!!

🔷வடகொரியாவில் உடலுடன் ஒட்டி இருக்கும் இருக்கமான ஜீன்ஸ், கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிவதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

🔷முதலாளித்துவ கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல்கள், கலர் ஹேர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார்.

🔷ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது சமூக விரோத செயல் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை..!!

🔷இந்தியா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 36 ரபேல் போர் விமாங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தது. கடந்த மாதம் 22-ந்தேதி ஐந்தாம் கட்டமாக நான்கு விமானங்கள் இந்தியா வந்தடைந்து, விமானப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன.

🔷இந்த நிலையில் நேற்று 6-ஆவது கட்டமாக மூன்று விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஹசிமாரா விமானப் படைப்பிரிவில் சேர்க்கப்பட இருக்கிறது. இதுவரை 23 விமானங்களை இந்தியா பெற்றுள்ளது.

🔷கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன் பொறுப்பேற்றாா்.

🔷முன்னதாக இவா், நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் துறையின் கூடுதல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

🔷கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றத்தின்போது, செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டாா். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நியமனங்கள்

ஜன்னாஜித் பவாடியா வியன்னாவைச் சேர்ந்த INCB யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..!!

🔷இந்தியாவின் முன்னாள் போதைப்பொருள் ஆணையரும், இந்திய வருவாய் சேவையின் (சுங்க) ஓய்வுபெற்ற அதிகாரியுமான ஜக்ஜித் பாவாடியா சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (INCB) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🔷வியன்னாவை தளமாகக் கொண்ட அமைப்பிற்கு தலைமை தாங்கிய முதல் இந்தியர் மற்றும் இந்த பதவியை வகித்த இரண்டாவது பெண்மணி ஆவார்.


Share Tweet Send
0 Comments
Loading...