தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.4.2021 (Daily Current Affairs)

உலகம்

பிரிட்டனுடனான வா்த்தக ஒப்பந்தம் - ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்..!!

🔷ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

🔷பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் மேற்கொள்ளபடவிருக்கும் வா்த்த மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

🔷அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 எம்.பி.க்கள் வாக்களித்தனா். ஒப்பந்தத்தை எதிா்த்து 5 போ் வாக்களித்திருந்தனா்; 32 போ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

🔷பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான சிறப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்ற அனுமதி கிடைக்க வேண்டியிருந்த சூழலில், டிசம்பா் 30-ஆம் தேதி கூடிய அந்த நாடாளுமன்றம் 521:73 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

🔷தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எகிப்தில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய 110 கல்லறைகள் கண்டுபிடிப்பு..!!

🔷எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

🔷நைல் நதிப்படுகையில் உள்ள கோயும் எல் குல்கான் (Koum el-Khulgan ) என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

🔷அப்போது பெரிய பாறையில் வெட்டி அமைக்கப்பட்ட கல்லறைகளைக் கண்டனர். அதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை 110 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

🔷இந்தக் கல்லறையின் காலம் கி.மு. 6000 முதல் கி.மு. 3150 - க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைகள் அனைத்தும் ஒவ்வொரு வடிவிலும் அச்சில் வார்த்தார் போல இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இலங்கையில் புர்கா அணிய தடைவிதிக்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல்..!!

🔷இலங்கையில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🔷கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 260 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் காரணம் என்று தெரியவந்தது.

🔷இதையடுத்து இலங்கையில் புர்கா அணிவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

🔷இந்நிலையில் பொதுவெளியில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா

3 மாதங்களில் 500 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் - ராஜ்நாத் சிங்..!!

🔷பி.எம். கேர்ஸ் நிதி மூலம் மூன்று மாதங்களில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூலம் நாட்டில் 500 இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

🔷"டிஆர்டிஓ சார்பில் "எம்ஓபி' தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொண்டு செல்வதில் இலகுரக விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

🔷பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெங்களூரில் இயங்கி வரும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் எம்ஓபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், 380 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

🔷டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்திலுள்ள ஆலைகளில் நிமிஷத்துக்கு 500 லிட்டர் திறன் கொண்ட 120 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். டிஆர்டிஓவின் "எம்ஓபி' தொழில்நுட்பம் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🔷இந்த அமைப்பு மூலம் 190 நோயாளிகளுக்குத் தேவைப்படும் வகையில், நிமிடத்திற்கு 5 லிட்டர் வீதம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும் ஒரு நாளைக்கு 195 ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த சுரேஷ் ரெய்னா..!!

🔷ஐபிஎல் போட்டியில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார்.

🔷ஐபிஎல் போட்டியின் 23 - வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.

🔷ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவன் (615), வார்னர் (519), விராட் கோலி (512) ஆகிய வீரர்கள் மட்டுமே 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த இலக்கை சிஎஸ்கே வீரர் சுரேஷ் எட்டியுள்ளார்.

🔷ஆட்டத்தில் முதல் பவுண்டரியை அடித்தபோது இச்சாதனையை நிகழ்த்தினார். சமீபத்தில், ஐபிஎல் போட்டியில் 200-க்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் ரெய்னா இணைந்தார்.

🔷ஐபிஎல்: அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள்

624 - ஷிகர் தவன்

525 - டேவிட் வார்னர்

521 - விராட் கோலி

502 - சுரேஷ் ரெய்னா

50 முறை 50 ரன்கள் - 200 சிக்சர்கள் - ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை..!!

🔷ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 50ரன்களை 50 முறை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி தலைவர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். மேலும் 200 சிக்சர் அடித்த சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார்.

🔷டி-20 கிரிக்கெட் போட்டியில் 10ஆயிரம் ரன்கள் கடந்த 4 - வது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

🔷கிறிஸ் கெயில், Kieron Pollard மற்றும் Shoaib Malik ஆகியோர் டி-20 போட்டியில் 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர்.

தமிழ்நாடு

சிவகளை தொல்லியில் ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த கல் வட்டங்கள் கண்டெடுப்பு..!!

🔷தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் தொல்லியில் ஆய்வு பணியில் முதன் முறையாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

🔷அங்குள்ள ஶ்ரீ மூலக்கரை பகுதியில் கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் 10 - க்கு 10 என்ற அளவில் இருந்தன. சுமார் 15 - க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் இங்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறிய தொல்லியல் துறையினர், மொத்தம் 29 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தனர்.

🔷மூடியுடன் கிடைத்த 3 முதுமக்கள் தாழியை, முதற்கட்டமாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அகழ்வாய்வு பணியில் ஈடுடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.

நியமனங்கள்

மத்திய நிதித் துறை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்..!!

🔷மத்திய நிதித் துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷கடந்த 1987 - ஆம் ஆண்டின் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை செயலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அவா் மத்திய நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளதாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

🔷மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள செயலா்களில் மிக மூத்த அதிகாரி நிதித் துறை செயலராக நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...