தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 28.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

பாஸ்எக்ஸ் ஒத்திகை !!

🔷பாஸ்எக்ஸ்’ ஒத்திகை ( 'PASSEX' exercise ) என்ற பெயரில் , இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று தொடங்கியது.

🔷இந்த கூட்டு பயிற்சியில் முதன் முறையாக இந்திய விமானப்படை போா் விமானங்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

ராணுவ தளவாடங்கள் கூட்டுத் தயாரிப்பு !!

🔷இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்களை கூட்டாகத் தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது, சைபா் மற்றும் விண்வெளித் துறைகளில் உளவுத் தகவல்கள் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இந்தியாவும் தென் கொரியாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

🔷மேலும், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பில் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சி, கூட்டு தயாரிப்பு, கூட்டு ஏற்றுமதியில் கவனம் செலுத்த முடிவு செய்தன.

🔷பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சூ வூக் ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

🔷உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரு பாதுகாப்புத் தொழில்துறை முனையங்களை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

🔷இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் விநியோகத்தில் தென்கொரியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்னூல் விமான நிலையம் !!

🔷மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் YS ஜகன்மோகன் ரெட்டி ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தில் ஓர்வக்கல் என்ற இடத்தில் கர்னூல் விமான நிலையத்தைத் திறந்து வைத்தனர்.

🔷கடப்பா, விசாகப் பட்டினம் திருப்பதி, இராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ஆகியவற்றையடுத்து ஆந்திர மாநிலத்தில் ஆறாவது விமான நிலையமாக கர்னூல் செயல்பட உள்ளது.

🔷கர்னூல் விமான நிலையத்தில் விமான சேவைகள் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும்.

🔷பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கான நேரடி விமானப் பயணச் சேவை இந்தப் பகுதியினை தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும்.

🔷இந்த பாதைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற UDAN என்ற திட்டத்தின் ஏல முறையின் கீழ் பயணியர் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் டிரேப் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம் !!

🔷ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் டிரேப் குழு போட்டிகளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.

🔷பைனலில் கஜகஸ்தான் அணியுடன் மோதிய பிரித்விராஜ் தொண்டைமான், லக்‌ஷய் ஷியோரன், கைனன் செனாய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

🔷மகளிர் டிரேப் குழு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர், ஷ்ரேயாசி சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்தனர்.

🔷உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்தது.

🔷அமெரிக்கா 4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. இத்தாலி (2-0-2), டென்மார்க் (2-0-1), போலந்து (1-3-3) அணிகள் டாப்-5ல் இடம் பிடித்தன.

புத்தகம்

100-க்கும் அதிகமான வரைகதை புத்தகங்கள் !!

🔷மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டு NCERT அமைப்பால் சீரமைக்கப்பட்ட 100-க்கும் அதிகமான வரைகதை புத்தகங்களை வெளியிட்டார்

🔷இப்புத்தகங்களை எந்தவொரு ஆன்டிராய்டு திறன்பேசியிலும் தீக்சா இணையதளம் வாயிலாகவோ (diksha.gov.in) தீக்சா செயலி மூலமாகவோ அணுக இயலும்.

🔷இந்தப் புத்தகங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் இயக்கப்படும் ஒரு புதிய சாட்பாட் என்ற உதவியாளர் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்

🔷இந்த சாட்பாட் டிஜிட்டல் மூலமாக கற்றலின் நோக்கத்தை விரிவாக்க ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.

🔷அப்புத்தகங்களின் வெளியீட்டின் போது CBSEயின் போட்டித்தன்மை அடிப்படையிலான கல்வித் திட்டத்தின் ஓர் அங்கமாக அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கான CBSE மதிப்பீட்டுக் கட்டமைப்பினையும் கல்வி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விருதுகள்

2020 ஆம் ஆண்டின் சிறந்த EY தொழில்முனைவர் !!

🔷மரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் C. மரிவாலா, 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த EY (Entrepreneur of the Year) தொழில் முனைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

🔷இவர் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஆண்டின் சிறந்த EY உலகத் தொழில்முனைவர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க உள்ளார்

🔷மரிகோ நிறுவனம் நாட்டில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்க ளைத் தயாரிக்கும் மிகப்பெரிய மற்றும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.

🔷அது பாராசூட் மற்றும் சபோலா போன்ற பிராண்டுகளைச் சொந்தமாக கொண்டது ஆகும்.


Share Tweet Send
0 Comments
Loading...