தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 27.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் !!

🔷100% வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கியுள்ள இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் (மாநிலம்/யூனியன் பிரதேசம் சேர்ந்து மூன்றாவது) எனும் பெருமையை அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம் அடைந்துள்ளது.

🔷இதனை உலக தண்ணீர் தினமான 22-3-2021 அன்று அந்தமான் லெப்டினண்ட் கவர்னர் டி.கே.ஜோஷி அறிவித்தார்.

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டாயமாகிறது பிஐஎஸ் தரச்சான்று !!

🔷கடைகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற வேண்டும் என்று இந்திய உணவுப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது

🔷2008ஆம் ஆண்டின் உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் உரிய உரிமமும் பதிவும் பெற்றே தங்களது நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

🔷அத்துடன், 2011-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (பிஐ எஸ்) சான்றிதழைப் பெறாமல் எந்த நிறுவனமும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களை விற்பனை செய்யக் கூடாது.

🔷எனவே, குடிநீர் தயாரிப்பதற்கான எஃப் எஸ்எஸ்ஏஐ சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும்.

தில்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் !!

🔷தில்லியில் மாநில அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

🔷‘தில்லி அரசு திருத்த மசோதா 2021’ என்ற அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருப்பதை அரசிதழ் அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🔷இந்தச் சட்டத்தின்படி, தில்லி அரசானது எந்த நிர்வாக நடவடிக்கையை எடுக்கும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தை கேட்க வேண்டும். இந்த மசோதா மக்களவையில், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

கேலோ இந்தியா திட்டம் 2025-26 ஆண்டு வரை நீடிப்பு !!

🔷விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ, கேலோ இந்தியா திட்டத்தை 2021-22 முதல் 2025-26 ஆண்டு வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

🔷2021-22 முதல் 2025-26 வரை கேலோ இந்தியா திட்டத்தை நீட்டிப்பதற்கான செலவின நிதிக் குழு ஒப்பந்தத்தினை விளையாட்டுத் துறை அமைச்சகமானது நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.

🔷முதல் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன.

வர்த்தகம்

உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடம் !!

🔷நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

🔷2020 - 21-ஆம் நிதியாண்டில், கடந்த டிசம்பர் 2020 வரையில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.286 கோடிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும், இதே காலக்கட்டத்தில் 2019 - 20 ஆம் நிதியாண்டில் இது ரூ.151 கோடியாக இருந்ததாகவும், இது 112 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகர் மற்றும் ஃபிரோஸாபாத் மாவட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்தமைக்காக பெருமையோடு டிஜிட்டல் மாவட்டங்கள் என்று அழைக்கிறது.


Share Tweet Send
0 Comments
Loading...