தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 26.2.2021 (Daily Current Affairs)

இந்தியா

புதுச்சேரியில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

🔷இது, குடியரசு தலைவரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக, புதுச்சேரியின் அனைத்துத் துறைகளும், துணைநிலை ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

🔷பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல், நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு கவிழ்ந்த நிலையில், அங்கு, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

🔷புதுச்சேரியில் இதற்கு முன்பு, 6 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது.

காகிதமில்லாத பட்ஜெட் !!

🔷காகிதமில்லாத பட்ஜெட்டை (paperless budget) தாக்கல் செய்த முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை உத்தரப்பிரதேசம் பெற்றுள்ளது .

🔷அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா 2021-2021-க்கான மாநில பட்ஜெட்டை காகிதமற்ற முறையில் தாக்கல் செய்தார்.

அறிவியல் தொழில்நுட்பம்

கடுங்குளிரை சமாளிக்க சூரிய மின்னாற்றல் வெப்ப கூடாரம் !!

🔷கடுங்குளிர் பிராந்தியமான லடாக்கில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் மின்னுற்பத்தி செய்து கதகதப்பாக வைக்கும் கூடாரத்தை சோனம் வாங்சுங் உருவாக்கியுள்ளார்.

🔷இது எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் 30 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இந்தக் கூடாரத்தில் ஒரே நேரத்தில் 10 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.

🔷இந்தக் கூடாரம் உறைபனி நிலை 0 முதல் மைனஸ் 14 டிகிரி வரையிலான குளிர் நிலவும் பிராந்தியங்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது.

தமிழ்நாடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்

🔷பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இன்று “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்” என்ற பெயரில் புதிய தபால் நிலையம் துவங்கப்பட உள்ளது.

🔷பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதன் வாயிலாகப் பயனடைவார்கள்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

ஜாதிக்காய் மிட்டாய் வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது..!

🔷ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கோவாவில் உள்ள மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR-Central Coastal Agricultural Research Institute (ICAR-CCARI) மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

🔷இந்த ஒப்பந்தத்தில் மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் இயக்குநர் டாக்டர் இ.பி.சாகுர்கர், மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரிய உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர் தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

🔷ஜாதிக்காயில் விதை மட்டும் எடுக்கப்பட்டு விதையுறை தோல் பகுதி வீணாக்கப்பட்டு வயல்களில் வீசப்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு செயலி

இந்திய ரயில்வேயின் யூடிஎஸ் செயலி மீண்டும் அறிமுகம் !

🔷பயணச்சீட்டு மையங்களில் கூட்டம் சேருவதைத் தவிா்க்கவும் சமூக இடைவெளி விதிமுறைகள் சுமுகமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் யூடிஎஸ் செல்லிடப்பேசி செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷முன்பதிவில்லாத ரயில் சேவைகளையும் படிப்படியாக இந்திய ரயில்வே மீண்டும் செயல்படுத்தி வருகிறது. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வாங்கும்போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிா்க்கவும், சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும்,

🔷புகார் பிரிவுகளில் மட்டுமின்றி பிராந்திய ரயில்வேக்களின் முன்பதிவில்லா ரயில் சேவைகளிலும் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

🔷பிராந்திய ரயில்வேக்களால் முன்பதிவில்லாத ரயில் சேவைகள் எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் உகந்த முறையில் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுகள்

பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது 2021 !!

🔷பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின், "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது 2021' வழங்கப்பட்டுள்ளது.

🔷நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உ.சிவராமன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.

மாநாடுகள்

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு !!

🔷மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, தஞ்சாவூரில் , பாரத் அறிவியல் - நிர்வாகவியல் கல்லூரியில், 2021 பிப்ரவரி 26-28 தினங்களில் நடைபெறுகிறது.

🔷தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூர் பாரத் அறிவியல் - நிர்வாகவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...