தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 25.3.2021 (Daily Current Affairs)

உலகம்

இந்தியாவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்தது சிகாகோ கவுன்சில் !!

🔷இந்தியாவில் மனித உரிமை நிலவரம் மற்றும் சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவின் சிகாகோ நகர கவுன்சில் நிராகரித்தது.

🔷நம் நாட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து மத ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ள ஹிந்து சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

🔷இது முஸ்லிம்களுக்கு எதிரானது என பல நாடுகளில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இந்தியாவில் மனித உரிமை மீறல் உள்ளதாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

🔷அமெரிக்காவின் சிகாகோ நகர கவுன்சிலிலும் இது தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 26 - 18 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பு !!

🔷ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற இலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.

🔷எனினும், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது.

🔷இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இந்தியா

பெண்களுக்காக புதிதாக மூன்று காவல் படைகள் !!

🔷உத்தரப்பிரதேசத்தில் பிஏசி (Provintial Armed Constabulary) என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படைகளில் பெண்கள் மட்டுமே இடம்பெறும் மூன்று படைகள் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது .

🔷முதன்முறையாகப் பெண்கள் மட்டுமே இடம்பெறும் இம்மூன்று காவல் படைகள், சுதந்திரப் போர்வீரர்களான ராணி அவந்தி பாய் லோதி, உதா தேவி மற்றும் ஜல்காரி பாய் ஆகிய மூன்று பெண் வீரர்களின் பெயர்களில் அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷இவை மத்திய பாதுகாப்பு படைகளில் ஏற்கனவே அமர்த்தப்பட்டு செயல்படுகின்றன.

நியமனங்கள்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை நியமனம் !!

🔷அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை அமைச்சராக நியமித்து, அதிபர் பைடன் வரலாறு படைத்துள்ளார்.

🔷தனது அரசில் இந்திய வம்சாவளியினருக்கு இந்நாட்டில் இதுவரையில் இல்லாத வகையில், மிகப்பெரிய முக்கிய பதவிகள் வழங்கி கெளரவித்துள்ளார்.

🔷தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் இருக்கிறார்.இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருநங்கை ஒருவரை சுகாதாரத் துறை இணையமைச்சராக பைடன் நியமித்துள்ளார்.

🔷ரேச்சல் லெவின் என்ற திருநங்கை டாக்டர், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய நியமனத்துக்கு ஆளும் குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பைடன் அதை நிராகரித்தார். ரேச்சலின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா, செனட் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

🔷இதன் மூலம், அமெரிக்காவின் முதல் திருநங்கை அமைச்சர் என்ற பெருமையை ரேச்சல் பெற்றுள்ளார்.

ஆதார் அட்டைக்கான தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் !!

🔷ஆதார் அட்டைகளை நிர்வாகிக்கும் தனிநபர் தகவல் ஆணையத்தின் தலைவராக சவுரப் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

🔷ஒடிசாவை சேர்ந்த சவுரப் கார்க் 1991ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியானார்.

🔷இதே போன்று ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியின் தலைமை அதிகாரியாக சஞ்சீவ் குமாரும், உணவு கார்ப்பரேஷனின் தலைவராக அதிஷ் சந்திராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 22 அதிகாரிகளின் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு !!

🔷மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

🔷தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

🔷எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகளான சாலை, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள், 2019 ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

🔷இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

🔷இந்த உறுப்பினர் பொறுப்புக்கு 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களில் எம்.பி. சு.வெங்கடேசன் விலகிக்கொண்டார். இதையடுத்து தற்போது ரவீந்திரநாத் குமார் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு

தொடங்கியது ஒலிம்பிக் சுடர் ஓட்டம் !!

🔷ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது.

🔷அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது.

🔷முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.

🔷விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செய்கோ ஹஷிமோடோ, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

🔷ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் 121 நாட்களுக்கு ஜப்பானின் முக்கிய நகரங்களின் வழியாக செல்லும். இறுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரை சென்றடையும்.

🔷பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரீசில் இருந்து வழக்கம் போல் ஒலிம்பிக் சுடர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது.

🔷இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது,

🔷அந்நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்தியுள்ளது. கூடவே தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் உருவாகி உள்ளது.

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி - விஜயவீர் சித்து வெள்ளி வென்றார்..!

🔷உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 25 மீட்டர் ரேபிட் பிஸ்டல் சுற்றில் இந்திய வீரர் விஜயவீர் சித்து வெள்ளி வென்றார்.

🔷உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதுவரை 10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

🔷வரும் 29-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டங்கள்

போஷான் அபியான் திட்டம் !!

🔷முதியவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதாரத்தினை வழங்குவதற்கான ”போஷான் அபியான்” திட்டத்தினை சமூக நல மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகம் தொடங்க உள்ளது.

🔷இத்திட்டத்தின் கீழ், முதியோர் இல்லங்களில் தங்கியிருக்காத, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆதரவில்லாத முதியவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

🔷சூடான சமைத்த மதிய உணவினை வழங்க உள்நாட்டிலேயே கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்தும்.

🔷இத்திட்டமானது கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்படும்.

🔷மூத்த குடிமக்கள் நல நிதி என்ற நிதியானது இத்திட்டத்திற்கு நிதி வழங்கவும் அமல்படுத்தவும்.பயன்படுத்தப்படும்.


Share Tweet Send
0 Comments
Loading...