உலகம்
இத்தாலி தூதர் சுட்டுக் கொலை !!
🔷ஐநா. உலக உணவு திட்டத்துக்கான வாகன அணிவகுப்பு காங்கோ நாட்டின் வடக்கு கிவுவில் உள்ள நைரன்காங்கோவின் கோமா பகுதியில் நடந்தது.
🔷அப்போது, தீவிரவாதிகள் மறைந்து இருந்து நடத்திய தாக்குதலில் காங்கோவுக்கான ஐநா தூதர் லூகா அட்டனாசியோ, இத்தாலி போலீஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
வர்த்தகம்
அதிவேக 5ஜி சேவை !!
🔷இந்தியாவில் RAN சார்ந்த திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் O RAN வழிமுறையை அமல்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
🔷O RAN போன்ற தளம் கொண்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களும் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்த வழி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
🔷இதுதவிர ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை பல்விதங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளில் செயல்பட இருக்கின்றன.
நியமனங்கள்
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக லிண்டா தாமஸ் நியமனம் !!
🔷ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக லிண்டா தாமஸ் நியமனத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
🔷ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கறுப்பினத்தைச் சேர்ந்தவருமான லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் (வயது 68) என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்ததற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியது. லிண்டா, வெளியுறவுத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் ஆவார்.
🔷ஆப்பிரிக்கா உள்பட 4 கண்டங்களில் அவா் அமெரிக்காவுக்காக வெளியுறவு சேவையாற்றியுள்ளார்.
கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி பொறுப்பேற்பு !!
🔷கிழக்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் தருண் சோப்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
🔷விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ரியர் அட்மிரல் சஞ்சய் வத்ஸ்யனிடமிருந்து அவர் இந்த பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்.
🔷இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இவர் இந்திய கடற்படையில் கடந்த 1988-ஆம் ஆண்டு சேர்ந்தார்.
🔷கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள பாதுகாப்பு மையம், மும்பையின் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் ரியர் அட்மிரல் தருண் சோப்தி பயிற்சி பெற்றுள்ளார்.
விருதுகள்
சர்வதேச ஊழல் தடுப்பு விருது !!
🔷ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
🔷அரசு நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல், ஊழலுக்கு எதிரான முயற்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றில் இயங்கும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 தனிநபர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
🔷48 வயதாகும் அஞ்சலி பரத்வாஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திவரும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்துவருகிறார். சதர்க் நக்ரிக் சங்கதன் என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் கடமையையும் உறுதி செய்யும் முயற்சிகளை எடுத்துவருகிறார்.
🔷மேலும் ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அம்பலப்படுத்தும் நபர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தையும், ஊழல் விவகாரங்களின் குறைதீர்ப்பு அமைப்பையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
🔷ஊழலுக்கு எதிராக இயங்கும் தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றின் உதவியனால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பொது சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க அரசு செயலர் டோனி பிளிங்கென் கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவருக்கு கம்போடிய நாட்டின் உயரிய விருது !!
🔷இந்தியாவைச் சேர்ந்த கெளசிக் பரூவா, கம்போடியா அரசின் உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐ.எஃப்.ஏ.டி.) இயக்குநராக பதவி வகிக்கும் அவருக்கு, வேளாண் துறை சார்ந்த சேவைகளுக்காக இந்த விருதை வழங்கி அந்நாட்டு அரசு கெளரவித்துள்ளது.
🔷ராயல் ஆர்டர் ஆஃப் சாஹமித்ரை என்ற அமைப்பின் கீழ் கெளசிக் பரூவாவுக்கு கம்போடிய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மன்னருக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றிய வெளிநாட்டினருக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
🔷பரூவாவுடன் பணியாற்றும் ஐ.எஃப்.ஏ.டி. திட்ட அதிகாரியான கம்போடியா நாட்டின் சக்பூசெத் மெங்கி என்பவருக்கும் ராயல் ஆர்டர் ஆஃப் சோவத்தராவின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
🔷ஐ.எஃப்.ஏ.டி. என்பது ஐ.நா.வின் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது வளரும் நாடுகளின் கிராமப்புறங்களில் வறுமை மற்றும் பசிக்கு தீர்வு காணும் அமைப்பாகும்.
🔷கம்போடியாவில் வறுமைக் குறைப்பு, கிராமப்புற மேம்பாடு, சிறுதொழில் விவசாய அபிவிருத்தி ஆகியவற்றில் இருவரும் செலுத்திய பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாக விருது வழங்கப்பட்டுள்ளது.
🔷சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரான பரூவாவும், மெங்கும் ஐ.எஃப்.ஏ.டி. ஆதரவு திட்டங்களால் மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு, வீட்டு வருமானம் மற்றும் சொத்துகளை அதிகரித்தல், விவசாய உற்பத்தித்திறன், பன்முகத்தன்மை, சாலைகள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேம்பாடு அடையச்செய்துள்ளனர்.
🔷அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பரூவா, ஐ.எஃப்.ஏ.டி. திட்டத்தின் மூலம் பிராந்தியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.
🔷சோமாலியாவின் ஐ.எஃப்.ஏ.டி. மேலாளராக இருந்த பரூவா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் கிராம அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
🔷"வின்ட் ஹார்ஸ்' என்ற தனது முதல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை பரூவா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.