தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.2.2021 (Daily Current Affairs)

இந்தியா

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் !!

🔷புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவையின் ராஜினாமை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து பெரும்பான்மை இழந்த ஆளும் கட்சியாக நாராயணசாமி தலைமையிலான அரசு மாறியது.

🔷இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 22ம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்.

🔷இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்தார்.

🔷இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் !!

🔷ஆசிய கண்டத்தின் மிக பெரிய விமான நிலையத்தினை உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்க அந்த மாநிலத்தின் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

🔷அந்த விமான நிலையத்திற்கு “Jewar Airport” என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔷இதனை கட்டுவதற்காக 2000 கோடி ரூபாய் அந்த மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலில் போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

🔷இந்த விமான நிலையம் 6 (runway) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷அதே போல் உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் விமனநிலையத்திற்கு “Maryada Purushottam Sriram” என்று பெயரிட முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்சிஜன் ஆலை ஐநாக்ஸ் நிறுவனம் !!

🔷‘ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ்’ நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ ஆக்சிஜன் தொழிற்சாலைகளை அமைப்பது உட்பட, பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

🔷குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஐநாக்ஸ் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கான திரவ வாயுக்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

🔷இந்நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், திரவ வடிவிலான ஆக்சிஜன், நைட்ரஜன், ஆர்கன் வாயுக்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அத்துடன், இத் தொழிற்சாலைகளில், வாயு பிரிப்பு பிரிவுகளையும் அமைக்க உள்ளது.

🔷தற்போது தினமும், 2,300 டன் திரவ வாயுக்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

🔷இது, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் அமையும் தொழிற்சாலைகள் மூலம், 4,800 டன்னாக அதிகரிக்கும்.

🔷இதன் மூலம், மின்னணு, மருந்து, உருக்கு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான வாயுக்கள் தடையின்றி கிடைக்கும்.

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் !!

🔷காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடி நிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

🔷ரூ.14,400 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.

🔷ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில், நிறைவேற்றப்படுகிற இந்த திட்டத்தினால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, வருகிற உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி வருகிற தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட வழி பிறக்கும்.

🔷இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

🔷முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலப்பரப்பும், இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலப்பரப்பும், மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலப்பரப்பும் நீர்ப்பாசன வசதியைப் பெறும்.

🔷காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, கடலில் வினாடிக்கு சுமார் 6,300 கன அடி நீர் கடலில் கலக்கும். அது, இனி மேற்சொன்ன மாவட்டங்களின் நீர்ப்பாசன தேவைக்கும், குடிநீர் வசதிக்கும் பயன்படும் என்பது இத்திட்டத்தின்  சிறப்பாகும்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

ஆரோவ்-4 பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை !!

🔷”ஆரோவ்-4” (‘Arrow-4’) என்ற பெயரில் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல்  மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து உருவாக்குகின்றன.

🔷உலகிலேயே பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகளை (anti-ballistic missile system) தயாரித்துள்ள நான்கு நாடுகள் அமெரிக்கா, ரஷியா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவையாகும்.

நியமனங்கள்

மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் நியமனம் !!

🔷மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

🔷இந்நிகழ்ச்சி இந்திய கடற்படை தளமான ஐஎன்எஸ் குஞ்சாலியில் நடந்தது. அங்கு ரியர் அட்மிரல் அதுல் ஆனந்துக்கு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

🔷இவர் இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் கடந்த 1988ம் ஆண்டு சேர்ந்தார்.

🔷கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இவர் பயிற்சி பெற்றவர். அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் உள்ள பாதுகாப்பு படிப்புகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தில் நவீன பாதுகாப்பு ஒத்துழைப்பு படிப்பை இவர் முடித்துள்ளார்.

🔷விசிஸ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ள இவர், கடற்படையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். போர் கப்பல்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக பிரவாஸ் குமார் சிங் நியமனம் !!

🔷மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக பிரவாஸ் குமார் சிங்கிற்கு மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் ஆர்கே சிங் முன்னைலையில் பதவியினை ஏற்று கொண்டார்.

🔷சட்டப்படிப்பு படித்துள்ள அவர், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன், ஜார்க்கண்ட் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.

🔷மின்சாரத் துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மத்திய ஆணையம் தொடர்பான இதர விஷயங்களில் மத்திய அரசுக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனைகள் வழங்கும்.

ஏற்றுமதி நிறுவன சம்மேளன தலைவராக சக்திவேல் தேர்வு !!

🔷இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளன தலைவராக, திருப்பூர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ், 'இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம்' (எப்.ஐ.இ.ஓ.) செயல்படுகிறது. இதன் தலைவராக, திருப்பூர் பாப்பீஸ் நிறுவனங்களின் தலைவர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷தற்போது ஏ.இ.பி.சி., தலைவராக உள்ள அவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கியவர்.


Share Tweet Send
0 Comments
Loading...