தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.5.2021 (Daily Current Affairs)

இந்தியா

உலகின் முதலாவது தனியார் டிஜிட்டல் நீதிமன்றம்..!!

🔷சண்டிகரில் அமைந்துள்ள ‘ஜுப்பிடைஸ் ஜஸ்டீஸ் டெக்னாலஜீஸ்’ எனும் தொடக்க நிறுவனமானது உலகின் முதலாவது தனியார் டிஜிட்டல் நீதிமன்றத்தினை (தொடர் சங்கிலி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன்) தொடங்கி உள்ளது.

🔷தனியார் நீதி அமைப்பின் கீழ் மோதல்களுக்கு மாற்று வழியில் தீர்வு காணும் முறையின் (Alternative Dispute Redressal - ADR) மூலம் மோதல்களுக்குத் தீர்வு காணச் செய்வதற்காக இந்த நீதிமன்றமானது அமைக்கப்பட்டுள்ளது.

🔷இந்தத் தளமானது நடுவர் தீர்ப்பாயம், சமரசம், மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தை போன்ற தனியார் நீதி முறைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

🔷மோதலில் ஈடுபட்ட பிரிவனர் ஒரு நிர்வாக அமைப்பினுடைய உதவியின்றித் தீர்ப்பு வழங்குதல், சமரசம் (அ) மத்தியஸ்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு இந்தத் தளம் வழி வகுக்கிறது.

🔷ஜுப்பிடைஸ் தளத்தின் மூலம் பெற்ற இணையதள தீர்ப்பானது ஒரு நீதிமன்றத்தின் ஆணையைப் போன்றே சட்டப்படி செயல்படுத்தக் கூடியது ஆகும்.

நியமனங்கள்

சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பத்ரா மீண்டும் தேர்வு..!!

🔷சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பத்ரா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

🔷சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இதில் சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து 2 ஆவது முறையாக இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார்.

🔷நரிந்தர் பத்ராவை எதிர்த்து பெல்ஜியம் ஆக்கி சங்க தலைவர் மார்க் கோட்ரான் போட்டி களத்தில் நின்றார். இதையடுத்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பத்ரா 63 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

🔷கோட்ரான் 61 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவினார். பத்ரா இந்த பதவியில் 2024 ஆம் ஆண்டு வரை நீடிப்பார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் பத்ரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்

புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்தியப் பெண்கள்..!!

🔷பல்ஜீத் கௌர் மற்றும் கன்பாலா சர்மா ஆகியோர் நேபாளத்திலுள்ள புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்தியப் பெண் வீராங்கனைகள் எனும் பெருமையைப் பெற்றுள்ளனர்.

🔷எவரஸ்ட் மசீஃப் சிகரத்தின் ஓர் அங்கமான இந்த மலையில் ஏறிய முதல் பெண்களும் இவர்களே ஆவர்.

🔷மசீஃப் சிகரத்தில் நான்கு மலைச் சிகரங்கள் உள்ளன, அவை புமோரி (7,161 மீ), நுப்சே (7,862 மீ), லோட்சே (8,516 மீ) மற்றும் எவரெஸ்ட் (8,848.86 மீ) ஆகியவையாகும்.

🔷புமோரி மற்றும் நுப்சே ஆகிய இரு மலைச் சிகரங்களும் ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைகளாக கருதப்படுகின்றன.

Share Tweet Send
0 Comments
Loading...