தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.3.2021 (Daily Current Affairs)

உலகம்

டுவிட்டா் நிறுவனரின் முதல்பதிவு ரூ.21 கோடிக்கு ஏலம் !!

🔷சுட்டுரை (டுவிட்டா்) சமூக ஊடக நிறுவனத்தை நிறுவியவா்களில் ஒருவரும் அந்த நிறுவனத்தின் தலைமை செய்தி அதிகாரியுமான ஜாக் டார்சி, அந்த ஊடகத்தில் முதல்முறையாக வெளியிட்ட பதிவு 29 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.21 கோடி) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

🔷2006-ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவிடப்பட்ட, ‘எனது சுட்டுரையை நிறுவுகிறேன்’ என்ற குறுகிய வாசகத்தைக் கொண்ட அந்தப் பதிவின் மின்னணு வடிவை ஏலத்தில் விடப் போவதாக 2 வாரங்களுக்குப் பிறகு, அது இந்தத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

🔷இந்தத் தொகையை மெய்நிகா் நாணயங்களாக மாற்றி, சேவை அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்போவதாக ஜாக் டார்சி அறிவித்துள்ளார்.

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் !!

🔷நியூசிலாந்தில் மார்ச் - ஏப்ரல் 2022 ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கான (ICC Women’s World Cup 2022) அதிகாரப்பூர்வ பாடலாக, ‘Girl Gang’ எனும் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🔷இதனை கின் விக்க்மோர் (Gin Wigmore) எனும் நியூசிலாந்து நாட்டு பாடகி பாடியுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

சூரிய சக்தியில் இயங்கும் பேருந்து !!

🔷’எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா ’ (Energy Swaraj Yatra bus) என்ற பெயரில் சூரிய சக்தியில் இயங்கும் பேருந்தை மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் சேதன் சிங் சோலாங்கி (Chetan Singh Solanki) உருவாக்கியுள்ளார்.

🔷இந்த பேருந்திற்குள், குளியல், சமையல், தூக்கம், வேலை, மீட்டிங் ஆகிய அனைத்து அன்றாட நடவடிக்கைகளையும் செய்ய முடியும். பஸ்ஸில் 3.2 கிலோவாட் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 6 கிலோவாட் பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது.

இந்தியா

கென் - பெட்வா நதியிணைப்பு !!

🔷மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநில முதல்வர்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கென்-பெட்வா நதியிணைப்புத் திட்டத்தினை அமல்படுத்த செய்வவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

🔷இது நாட்டின் முதல் நதியிணைப்புத் திட்டமாகும்.

🔷இத்திட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்ட பந்தேல்கண்ட் பகுதிக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதற்காக மத்தியப் பிரதேசத்திலுள்ள கென் நதியிலிருந்து உத்திரப் பிரதேசத்திலுள்ள பெட்வா நதிக்கு உபரி நீரை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

கென் மற்றும் பெட்வா ஆகிய நதிகள் மத்தியப் பிரதேசத்தில் உருவாகின்றன. இவை யமுனை ஆற்றின் துணை ஆறுகளாகும்.

🔷கென் நதியானது உத்திரப் பிரதேசத்தின் பன்டா மாவட்டத்தில் யமுனை ஆற்றினையும் உத்திரப் பிரதேசத்திலுள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் பெட்வா நதியினையும் சந்திக்கிறது.

🔷கென் நதி மத்தியப் பிரதேசத்திலுள்ள பன்னா புலிகள் காப்பகத்தின் வழியே கடந்து செல்கிறது.

🔷தௌதான் அணையின் கட்டுமானத்தால் பன்னா புலிகள் காப்பகத்தின் 10% முக்கிய வாழிடப் பகுதியானது நீரில் மூழ்கும்.

விருதுகள்

காசநோய் ஒழிப்பில் சிறப்பான செயல்பாடு: கேரளத்துக்கு மத்திய அரசு விருது !!

🔷காசநோயை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தேசிய அளவிலான விருது கேரளத்துக்கு கிடைத்துள்ளது. அந்தப் பிரிவில் இருந்து விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் கேரளமாகும்.

🔷கடந்த 5 ஆண்டுகளில் கேரள சுகாதாரத் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, மாநிலத்தில் 37.5 சதவீதம் காசநோய் குறைந்துள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நியமித்த 26 பேரைக் கொண்ட நிபுணா் குழு, எா்ணாகுளம், கொல்லம், காசா்கோடு, மலப்புரம் ஆகிய நகரங்களுக்குச் சென்று ஆய்வு செய்தது உறுதி செய்தது.

🔷அந்த நிபுணா் குழு, 60 துணை ஆய்வுக் குழுக்களின் உதவியுடன் 83,000 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதுதவிர தனியாா் மருத்துவா்கள், மருந்துக் கடை உரிமையாளா்களிடம் அந்த நிபுணா் குழு ஆலோசனை நடத்தியது. முடிவில், காசநோய் ஒழிப்பில் கேரளம் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசுக்கு அந்தக் குழு அறிக்கை சமா்ப்பித்தது.

🔷உலகிலேயே சிறந்த காசநோய் ஆராய்ச்சிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இடங்களில் ஒன்றாக கேரளம் திகழ்கிறது என்றும் அந்த நிபுணா் குழு அமைப்பு சான்றளித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி !!

🔷உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.

🔷உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

🔷நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா. இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26, 2022 வரை உள்ளது.

🔷ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா, கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

🔷பின்னர் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி அதைத் தொடர்ந்து 2014 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்

கம்பளா போட்டியில் சீனிவாசகவுடா புதிய சாதனை !!

🔷கர்நாடகாவில் நடைபெற்ற கம்பளா போட்டியில் சீனிவாசகவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

🔷ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்டு இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால் அவரை விட குறைவான நேரத்தில் சீனிவாசகவுடா 100 மீ. தொலைவைக் கடந்துள்ளார்.

🔷கடலோர கர்நாடக பகுதியான உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களில் இரு எருதுகளை கலப்பையில் பூட்டி சேற்றில் இலக்கை நோக்கி ஓடும் கம்பளா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

🔷சாதனைகள் என்பது யாரோ ஒருவர் தகர்க்கப்படுவது உண்மை தான். அதற்கு எடுத்துக்காட்டாக கம்பளா போட்டியில் வீரர்கள் சாதனை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...