தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.4.2021 (Daily Current Affairs)

உலகம்

அமெரிக்காவின் துணை அட்டா்னி ஜெனரலாக இந்தியர்..!

🔷அமெரிக்காவின் துணை அட்டா்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

🔷அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

🔷இது தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் லிசா மா்கோவ்ஸ்கி, தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வனிதா குப்தாவை ஆதரித்து வாக்களித்ததால் அவரது நியமனத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

🔷46 வயதாகும் வனிதா குப்தா, மனித உரிமை வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.

வளமான இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முயற்சிக்கு ஆஸ்திரேலியா இந்தியாவுடனான கூட்டணி..!!

🔷இந்தோ-பசிபிக் பெருங்கடல் முயற்சி (IPOI) இன் கீழ் ஆஸ்திரேலியா ரூ .81.2 மில்லியன் (AUD 1.4 மில்லியன்) மானியம் அறிவித்துள்ளது.

🔷நவம்பர் 2019 - இல் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியால் IPOI முன்மொழியப்பட்டது, இந்த முயற்சியின் கடல் சூழலியலில் ஆஸ்திரேலியா புதுடெல்லியை இணைத்து கொள்கிறது.

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்..!!

🔷வரும் 2030 - ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

🔷வரும் 2050 - ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூர்வமாகியுள்ளது.

🔷இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன.

🔷முதல்கட்டமாக, வரும் 2030 - ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990 - ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

🔷பூமி கடும் குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன.

🔷இந்த வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன.

🔷"பருவநிலை மாற்றம்' என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.

சாதனைகள்

ஐ.பி.எல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து விராட்கோலி புதிய சாதனை..!!

🔷கிரிக்கெட் வீரர் விராட்கோலி, ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

🔷14 - வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16 - வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதிய பெங்களூரு அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அரை சதம் விளாசினார்.

🔷2008 - ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் கோலி, இதுவரை 196 போட்டிகளில் பங்கேற்று, 40 அரை சதம், 5 சதங்களுடன் 6,021 ரன்களை குவித்துள்ளார்.

செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து புதிய வரலாறு படைத்தது நாசா..!!

🔷பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க விட்டது என்ற வரிசையில், தற்போது செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.

🔷பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை தயாரித்துள்ளது.

🔷கார் பேட்டரி அளவுள்ள மாக்சி எனப்படும் தங்கப்பெட்டியில் உள்ள கருவிகள் மூலம், ஒரு விண்வெளி வீரர் 10 நிமிடங்கள் சுவாசிக்க தேவையான அளவான, 5 கிராம் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.

🔷ஒரு டன் அளவுள்ள இதே கருவியை செவ்வாய்க்கு அனுப்பினால் அதன் மூலம் 25 டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என்பதால், இந்த சோதனை முயற்சியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.

நியமனங்கள்

வாஷிங்டன் சுந்தர், தேவதூத் படிக்கல் ஆகியோர் பூமா நிறுவனத்தின் விளம்பர தூதரக நியமனம்..!!

🔷உலகளாவிய விளையாட்டு, ஆடை நிறுவனமாகிய பூமா , கிரிக்கெட் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் தேவதூத் படிக்கல் ஆகியோருடன் நீண்டகால ஒப்புதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

🔷சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடனான தனது பங்காளித்துவத்தை அறிவித்த பூமா இந்தியாவின் விளையாட்டு, சுற்றுச்சூழல் அமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...