தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.03.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.03.2021 (Daily Current Affairs)

உலகம்

உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள் - ஆய்வு !!

🔷இவ்வறிக்கை சுடோபி எனப்படும் ஒரு சர்வதேச ஓட்டுநர் கல்வி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையிலானது ஆகும்.

🔷இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 56 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளைக் கொண்டுள்ளது.

🔷தாய்லாந்து இரண்டாமிடத்திலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியா நான்காமிடத்தில் உள்ளது.

🔷உலகின் மிகவும் பாதுகாப்பான சாலைகள் நார்வேயில் உள்ளதாக இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.

🔷இதனையடுத்து ஸ்வீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாதுகாப்பான சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளாகும்.

இந்தியா

தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு !!

🔷தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதுடன் அவர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

🔷தெலுங்கானாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர் ஊதியதிருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது. வரும் நிதியாண்டில் ஏப்ரல் முதல் தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீத ஊதியஉயர்வு அமல்படுத்தப்படும்.

🔷மேலும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

🔷ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெறும் வயது75-ல் இருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 5-வது தங்கம் !!

🔷டெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ஃரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

🔷டெல்லியில் உலகக்கோப்பைக்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி (ஐஎஸ்எஎஸ்எப்) நடந்து வருகிறது. 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி திவ்யான்ஷ் சிங் பன்வார், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

🔷உலகின் முதலிடத்தில் இருக்கும் ஹங்கேரியைச் சேர்ந்த இஸ்த்வன் பெனி, எஸ்தர் டெனிஸ் ஜோடி 10 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. அமெரிக்காவின் மேரி கரோலின் டக்கர், லூகாஸ் கோஸின்ஸ்கி ஜோடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

🔷ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவர் அணி கத்தார் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் குர்ஜோத் கான்குரா, மைராஜ் அகமது கான், அங்காத் விர் சிங் பாஜ்வா ஆகியோர் தங்கம் வென்றனர்.

🔷இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா 5-வது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

திட்டங்கள்

வன் தன் விகாஸ் யோஜனா !!

🔷மணிப்பூர் மாநிலம் வன் தன் விகாஸ் யோஜனாவுக்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷வன் தன் விகாஸ் யோஜனா என்பது சிறு வன உற்பத்திப் பொருட்களின் மதிப்புக் கூட்டல், அடையாளக் குறியிடுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒரு திட்டமாகும்.

🔷வன் தன் திட்டம், உள்ளூரில் வாழும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் ஒரு முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள நிலையில் மணிப்பூரானது இதில் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது.

🔷வன் தன் திட்டம், பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனம் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India Limited) ஆகியவற்றின் ஒரு முயற்சி ஆகும்.

கண்டுபிடிப்பு

கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள் : பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு !!

🔷கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

🔷இந்த ஆய்வில் கேரள மாநிலத்தில் உள்ள காடுகளில் 167 வகையான பறவை இனங்கள் இருப்பதும், 187 வகையான வண்ணத்து பூச்சி இனங்கள் இருப்பதும் தெரியவந்தது.

🔷மேலும் காட்டு நாய்கள், மரவெறுக்கு, நீர் நாய்கள், செங்கீரி ஆகியவற்றிலும் புதிய வகை இனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன.

🔷இந்த சர்வேயில் கேரள காடுகளில் 6 வகையான புதிய பறவை இனங்கள் மற்றும் 3 வகையான புதிய வண்ணத்து பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

தமிழ் படங்கள் பெற்ற தேசிய விருதுகள்: !!

🔷சிறந்த குணச்சித்தர நடிகா்(துணை நடிகா்) - விஜய் சேதுபதி (படம்:சூப்பா் டிலக்ஸ்); சிறந்த இசை இயக்குநா் - டி.இம்மன் (விஷ்வாஸம்) ; சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால்(கருப்பு துரை) ; சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு விருதுகள் - ஒத்த சிரிப்பு சைஸ் - 7 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

🔷மற்ற மொழிகளில் சிறந்த பொழுது போக்கான திரைப்படம் - மகரிஷி(தெலுங்கு), சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு படம்- தாஜ்மல்(மராத்தி), சமூக பிரச்சனை -ஆனந்தி கோபால்(மராத்தி), சுற்றுச் சூழல் பாதுகாப்பு - வாட்டா் பரியல் (ம்ா்ய்ல்ஹ), சிறந்த தேசிய குழந்தைகளுக்கான படம் - காஸ்ட்டூரி (ஹிந்தி) ஆகியவை உள்ளிட்ட 28 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிபடங்கள்:

🔷இந்திய அரசியல் சாசன அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 18 வட்டார மொழிகளிலும் சிறந்த படங்கள் தோ்வு செய்யப்பட்டு இந்த 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக வெற்றி மாறன் இயக்கத்தில் வி கிரியேஷன் தயாரித்த ’அசுரன்’ தமிழ் படம் தோ்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் பணமுடிப்புடன் ரஜத் கமல் விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷சிறிய திரைப்படங்களுக்கான வரிசையில் ”ஆன் இன்ஜினீா்ட் ட்ரீம்” என்ற திரைப்படமும், குடும்ப பாங்கான படமாக “ஒரு பாதிரா ஸ்வப்னம் போலே” என்கிற மலையாள படம் உள்ளிட்ட 22 குறுகிய படங்கள் பெற்றுள்ளன.

67-வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு !!

🔷2019 ஆம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருது கொடுக்கப்பட்டுள்ளன. அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகா் தனுஷ் சிறந்த தேசிய நடிகா் விருதை பெற்றுள்ளார்.

🔷நடிகை கங்கனா ரனாவத் சிறந்த தேசிய நடிகையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🔷தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு நோய்த்தொற்றை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாது இருந்தது. இந்த விருதுகள் இன்று மத்திய சினிமா ஜூரி தலைவா் என்.சந்திரா மற்ற ஜூரி உறுப்பினா்கள் முன்னிலையில் அறிவித்தார்.

முழு நீள திரைப்பட விருதுகள்:

🔷2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக ”மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்” (மறய்க்கார் அரபிக்கடலிண்டே ஸிம்ஹம்) என்கிற மலையாள படம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 2,50,000 பண முடிப்புடன் ஸ்வா்ன கமல் விருது வழங்கப்படுகிறது.

🔷சிறந்த தேசிய நடிகராக இந்த ஆண்டிற்கு இரு நடிகா்கள் தோ்வு செய்யப்பட்டு ரஜத் கமல் விருது பெற்றுள்ளனா். போன்ஸ்லே என்கிற ஹிந்தி படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய் என்கிற நடிகருக்கும், தமிழில் ”அசுரன்” படத்தில் நடித்ததற்காக நடிகா் தனுஷுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

🔷இதே ஆண்டின் சிறந்த தேசிய நடிகையாக மணிகா்னிகா - தி குயின் ஆஃப் ஜான்ஸி ஹிந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தோ்வு செய்யப்பட்டு ரஜத் கமல் விருது பெற்றுள்ளார்.

ஷேக் முஜிபூா் ரஹ்மானுக்கு காந்தி அமைதி விருது !!

🔷வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஓமன் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் ஆகியோருக்கு காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய கலாச்சாரத் துறை சார்பில் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான விருத்துக்கு ஓமன் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் மறைந்த சுல்தான் காபூஸ் பின் சையது அல் சையது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷வளைகுடா பகுதி அமைதிப்பணியில் சுல்தான் காபூஸ் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக இவர் அதிகம் செயல்பட்டுள்ளார். பாரசீக வளைகுடாவில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தார்.

🔷இதுபோல் 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயர் அறிவிக்கப் பட்டுள்ளது.

🔷முதல் முறையாக இம்முறை இவ்விருது இரு தலைவர்களுக்கு மறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷கெளரவமிக்க இவ்விருது ரூ.1 கோடி பரிசுத் தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பொருளுடன் வழங்கப்படும்.


Share Tweet Send
0 Comments
Loading...