தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.5.2021 (Daily Current Affairs)

உலகம்

ஆசியாவின் 2 ஆவது பணக்காரரானார் கெளதம் அதானி..!!

🔷அதானி குழுமத்தின் நிறுவனத் தலைவர் கௌதம் அதானி ஆசியாவின் 2ஆவது பெரும் பணக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

🔷ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலை ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் கோலாச்சி வரும் அதானி, 66.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாங் ஷான்ஷனை (Zhong Shanshan) பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

🔷76.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். உலக அளவிலான பணக்காரர் பட்டியலில் அம்பானி 13 ஆவது இடத்திலும் அதானி 14 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இராணுவம் / பாதுகாப்பு

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகள் வாங்க இந்தியா முடிவு

🔷ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க 5 பில்லியன் டாலருக்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

🔷இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் 800 மில்லியன் டாலர்களை இந்தியா செலுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டின் இறுதியில் எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசு இந்தியாவிற்கு வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

🔷இந்த எஸ்-400 ரக ஏவுகணை, தரையில் இருந்து வானில் பறந்து இலக்கை தாக்கும் வடிவமைப்பை கொண்டது ஆகும்.

🔷ரஷ்யாவிடம் இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம்..!!

🔷புதுச்சேரியில் சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமி, தற்காலிக சபாநாயகரை நியமிக்கும் கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கிருந்தார்.

🔷அண்மையில் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து தமிழிசை உத்தரவிட்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவரானார் இந்திய வம்சாவளி..!!

🔷உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்வீ பூட்டானி (Anvee Bhutani ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🔷ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்ணான ராஷ்மி சமந்த், இனவெறி கருத்துக்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.

🔷இதனையடுத்து அப்பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக அன்வீ பூட்டானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மாக்டலென் (Magdalen) கல்லூரியில் human Science படித்து வருகிறார்.


Share Tweet Send
0 Comments
Loading...