தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.4.2021 (Daily Current Affairs)

உலகம்

ஐ.நா. சமூக, பொருளாதார அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தோ்வு..!!

🔷ஐ.நா. சமூக, பொருளாதார கவுன்சிலின் 3 முக்கிய அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது.

🔷இந்த கவுன்சிலின் ஒரு பிரிவான குற்றவியல் நீதி மற்றும் குற்றத் தடுப்புக்கான ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது. ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, கனடா, பிரான்ஸ், கானா, லிபியா, பாகிஸ்தான், கத்தாா், தாய்லாந்து, டோகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

🔷இரண்டாவதாக, ஐ.நா.வின் பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பான ஆணையத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோ்வாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கேமரூன், கொலம்பியா, டோமினிக் குடியரசு, எகிப்து, காம்பியா, கயானா, கென்யா, மொனாக்கோ, போலந்து, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துா்க்மேனிஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

🔷மூன்றாவதாக, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கானா, தென்கொரியா, ரஷியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

🔷இந்த 3 அமைப்புகளிலும் வரும் ஜனவரி 1 - ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும்.

கியூபாவில் கம்யூனிஸ்டு கட்சிக்கு புதிய தலைவராக அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு..!!

🔷கியூபா நாட்டில் 1959-ம் ஆண்டு நடந்த புரட்சிக்கு பின்னர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப் பதவியை பிடல் காஸ்டிரோ வகித்தார். அவருக்கு பின்னர் அவரது சகோதரர் ராவுல் காஸ்டிரோ அந்த பதவிக்கு வந்தார்.

🔷இந்த நிலையில் கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் 4 நாள் மாநாடு அங்கு நடந்து முடிந்துள்ளது. அந்த மாநாட்டின் தொடக்கத்தில், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ராவுல் காஸ்டிரோ அறிவித்தார். 89 வயதான அவர் 2011-ம் ஆண்டு, கட்சியின் தலைமைப்பதவியை தனது மூத்த சகோதரர் பிடல் காஸ்டிரோவிடம் இருந்து பெற்றார்.

🔷இவ்விரு சகோதரர்களும்தான் அந்த நாட்டை 1959-க்கு பின்னர் அதிபர்களாக இருந்து தொடர்ந்து ஆண்டு வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. அதிபர் பதவியை விட்டு 2018-ம் ஆண்டு விலகிய ராவுல் காஸ்டிரோ கட்சிப்பதவியில் மட்டும் தொடர்ந்து வந்தார்.

🔷இப்போது அதில் இருந்தும் விடைபெற்றுள்ளார். இதையடுத்து அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு பிடல் காஸ்டிரோ குடும்பத்தினர் அல்லாத ஒருவர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கான அறிவிப்பை கட்சி வெளியிட்டுள்ளது. மிகுவல் தியாஸ் கேனல், பிடல் காஸ்டிரோ குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ராமாயணம் குறித்த முதல் ஆன்லைன் கண்காட்சியை பிரஹ்லாத் சிங் படேல் திறந்து வைத்தார்..!!

🔷2021 உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ராமாயணத்தில் முதன்முதலில் ஆன்லைன் கண்காட்சியை மகரிஷி வால்மீகியின் காவியமாக திறந்து வைத்தார்.

🔷ஆன்லைன் கண்காட்சியின் தலைப்பு “ராம கத: இந்திய மினியேச்சர்கள் மூலம் ராமரின் கதை” (Rama Katha: The Story of Rama Through Indian Miniatures”) இது 17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பல்வேறு கலைப் பள்ளிகளிலிருந்து 49 மினியேச்சர் ஓவியங்கள் தொகுப்புகளைக் காட்டுகிறது.

🔷இந்த ஓவியத்தின் தொகுப்பு புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திர நன்கொடையாளரின் பெயரை அறிவித்த முதல் கட்சி..!!

🔷ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை வழங்கிய நிறுவனத்தின் பெயரை அறிவித்த முதல் கட்சி.

🔷கட்சியின் 2019-20 பங்களிப்பு அறிக்கையில் ₹ 1 கோடி நன்கொடை அறிவிக்கப்பட்டது. ஜார்கண்டில் ஆளும் கட்சியின் பங்களிப்பு அறிக்கையின்படி அலுமினியம் மற்றும் செப்பு உற்பத்தி நிறுவனமான ஹிண்டல்கோ இந்த நன்கொடை அளித்தன.

🔷ஒரு புதிய அறிக்கையில், 2019-20 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளுக்கு மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வருமான ஆதாரம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் என்று சங்கம் கூறியது.

ஆன்ட்ராய்டு செயலி

வயது வந்தோருக்கான மனநலத்தை மேம்படுத்துவதற்காக பயன்பாடு அறிமுகம்..!!

🔷வயது வந்தோருக்கான மனநலத்தை மேம்படுத்துவதற்காக முதன்மை அறிவியல் அலோசகர் கே. விஜயராகவன் “மனாஸ்” எனும் மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

🔷மன ஆரோக்யம் மற்றும் இயல்பான பெருக்குதல் அமைப்பை குறிக்கும் மனாஸ் என்ற பயன்பாடு ஒரு விரிவான அளவிடக்கூடிய மற்றும் தேசிய டிஜிட்டல் நல்வாழ்வு தளமாகும்.

சாதனைகள்

அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி இந்தியப் பெண் சாதனை..!!

🔷உலகின் 10-ஆவது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே. இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் அவர்.

🔷இமய மலைத் தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ள சிகரம் அன்னபூர்ணா. இது 8,091 மீட்டர் உயரம் கொண்டது. ஏறுவதற்கு மிகக் கடினமான மலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

🔷உலகின் 10-ஆவது மிக உயர்ந்த மலைச் சிகரமான அன்னபூர்ணாவின் உச்சியை ஏப்ரல் 16-ஆம் தேதி பிற்கல் 1.30 மணிக்கு அடைந்து சாதனை படைத்துள்ளார் பிரியங்கா மோஹிதே. மேற்கு மகாராஷ்டிரத்தின் சதாரா பகுதியைச் சேர்ந்த அவர், மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

🔷கடந்த 2013-இல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திலும் (8,849 மீட்டர்), 2018-இல் லோக் சிகரத்திலும் (8,516 மீட்டர்), 2016-இல் மக்காலு சிகரம் (8,485 மீட்டர்), கிளிமஞ்சாரோ சிகரம் (5,895 மீட்டர்) ஆகியவற்றிலும் பிரியங்கா ஏறியுள்ளார்.

🔷கடந்த 2017-2018இல் சாகச விளையாட்டுகளுக்காக மகாராஷ்டிர அரசின் "சிவ சத்ரபதி' விருது பெற்றுள்ளார் பிரியங்கா.

🔷"சிறு வயதிலிருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர் பிரியங்கா. மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள சஹ்யாத்ரி மலைத்தொடர் பகுதியில், இளவயதில் மலை ஏறுதலைத் தொடங்கினார். மேலும் 2012-ஆம் ஆண்டில் உத்தரகண்டில் உள்ள இமயமலையின் கர்வால் தொடரில் பந்தர்பஞ்ச் மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்' என அவரது சகோதரர் ஆகாஷ் மோஹிதே பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...