தமிழ்நாடு
கீழடியில் பண்டைய நெல் சேமிப்பு கலன் கண்டுபிடிப்பு !!
🔷தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்படும் பொருட்கள் தமிழர்களின் பண்டைய வாழ்வியல், நாகரிகம் உள்ளிட்டவற்றை உலகிற்கு வெளிக்காட்டி வருகின்றன. இந்நிலையில் கீழடியில் அகழ்வாய்வு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
🔷முன்னதாக பானை, கொள்கலன்கள், முதுமக்கள் தாழியின் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
🔷நெல், தானியங்களை சேமிக்க பயன்படும் மண் கலன், பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கீழடியில் விவசாயம் நடைபெற்றதும், நெல், தானியங்கள் சேமிக்கப்பட்டதையும் அறிய முடிவதாக கூறப்படுகிறது.
வர்த்தகம்
லண்டனில் தலைமையகத்தை அமைக்கும் ஹீரோ சைக்கிள்ஸ் !!
🔷மின்னணு சைக்கிள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஹீரோ நிறுவனம் லண்டனில் தலைமையகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
🔷இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், மின்னணு சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குஜராத்தில் மின்னணு சைக்கிள் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
🔷அங்கு சுமார் 40 லட்சம் மின்னணு சைக்கிள் மற்றும் வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று உலக அளவிலான வர்த்தகத்தை எட்டுவதற்காக லண்டனில் தலைமையகத்தை அமைக்கவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பா நாடுகளில் ரூ.2,500 கோடி வரை வர்த்தகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு
சரத் - மணிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி !!
🔷டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சரத்கமல் மற்றும் மணிகா பத்ரா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
🔷கத்தார் தலைநகர் தோஹாவில் டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி, சரத்கமல் மற்றும் மணிக்கா பத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
🔷டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஜி.சத்தியன், சுதிர்தா முகர்ஜி கொரிய அணியை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களிடம் தோல்வியைத் தழுவினார்கள்.
🔷பின்னர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொரிய அணியை இந்தியாவின் சரத்கமல் மணிக்கா பத்ரா ஆகியோர் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.
வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி !!
🔷பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வரும் வட்டு எறிதல் போட்டியில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
🔷தனது முதல் முயற்சிலேயே நீண்ட தூரம் வீசி அசத்திய 25 வயதான கமல்பிரீத் கவுர் ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
🔷ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10வது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார்.
🔷கமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.