உலகம்
இத்தாலி இந்தியாவின் முதல் உணவு பூங்கா..!!
🔷உணவு பதப்படுத்தும் வசதிகளைக் கொண்ட இந்தியாவின் முதல் “மாபெரும் உணவுத் தோட்டத்தை” இத்தாலி துவக்கியது.
🔷இது நாட்டின் முதல் இத்தாலிய - இந்திய உணவு பூங்கா திட்டமாக கருதப்படுகிறது.
🔷இத்தாலி தனது முதல் பெரிய அளவிலான உணவு பூங்கா திட்டத்தை இந்தியாவின் குஜராத்தின் ஃபனிதரில் தொடங்கியுள்ளது.
🔷இந்த திட்டம் முதன்முதலில் இத்தாலிய - இந்திய உணவுத் திட்டமாகும், இது இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையில் ஒரு சிறந்த கூட்டாட்சியை மேம்படுத்த உதவுகிறது.
இறப்பு
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேலா காலமானார்..!!
🔷அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேலா காலமானார்.
🔷அவருக்கு வயது 93. 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் துணை அதிபராகவும், பில் கிளின்டன் அதிபராக இருந்த போது, 1993 முதல் 1996 வரை ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்ட வால்டர் மண்டேலா, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா-பிரேஸில் ஒப்பந்தம்..!!
🔷நியாயமான வா்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்திய தொழில்போட்டி ஆணையத்துக்கும் பிரேஸிலின் பொருளாதார பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🔷இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய தொழில்போட்டி ஆணையம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா - வங்கதேசம் ஒப்பந்தம்..!!
🔷இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
🔷கடந்த மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலமாக, உலக வா்த்தக அமைப்பின் விதிகளின் அடிப்படையில் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
🔷இந்திய பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா
ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு - இந்தியாவுக்கு பிரிட்டன் அழைப்பு..!!
🔷ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
🔷ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு, லண்டனில் வரும் மே மாதம் 3 - ஆம் தேதி முதல் 5 - ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அமைச்சா்கள் நேரில் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனா்.
🔷இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுக்கும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) அமைப்பின் பொதுச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔷இந்த மாநாட்டில் இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்பாா் என்று தெரிகிறது. முன்னதாக, இந்த மாநாட்டுக்கான திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டோமினிக் ராப் உறுதிசெய்தாா்.