உலகம்
உலகிலேயே முதல் மஞ்சள் நிற பென்குயின் !!
🔷உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
🔷வெள்ளை கருப்பு மற்றும் கழுத்துகளில் லேசான மஞ்சள் கலந்த நிறத்துடன் பென்குயின்கள் உள்ளன. ஆனால் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் முழுவதுமாக இருக்கக்கூடிய பென்குயின் புகைப்படம் தற்பொழுது பலரையும் கண் கவர செய்துள்ளது.
இந்தியா
உலகின் மிக பிரமாண்டமான ஜூ குஜராத்தில் அமைக்கிறார் அம்பானி !!
🔷ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது அடுத்த திட்டமாக, உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையை அமைக்க உள்ளார்.
🔷குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியம், தகவல் தொடர்பு துறைகளுடன் தகவல் தொழில்நுட்பம், இ-காமர்ஸ் என பல துறைகளிலும் தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.
🔷அதோடு, மும்பை இந்தியன்ஸ், கால்பந்து லீக் அணியையும் சொந்தமாக வைத்துள்ளார். சுமார் 6 லட்சம் கோடிக்கு அதிபதியான அம்பானி அடுத்ததாக தடம் பதிக்க இருப்பது மிருகக்காட்சி சாலை பிசினஸ்.
🔷குஜராத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 280 ஏக்கர் பரப்பளவிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதன் அருகே பிரமாண்டமான மிருகக்காட்சி சாலையை உருவாக்கி வருகிறார்.
🔷இது, உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாக திகழும். இங்கு கொமோடா உடும்பு, சிறுத்தைகள், பறவைகள் என 100க்கும் மேற்பட்ட உயிரினங்களை பராமரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த மிருகக்காட்சி 2023ல் திறக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவன கார்ப்பரேட் விவகார இயக்குநர் பரிமல் நத்வானி கூறி உள்ளார்.
உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனம் !!
🔷உலகின் மிகப்பெரிய பர்னீச்சர் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனமான IKEA அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ரூ.5500 கோடியை முதலீடு செய்கிறது.
🔷நொய்டாவில் தொடங்கி, புர்வான்சால் மற்றும் மத்திய உத்திரபிரதேசத்தில் குறைந்தது மூன்று பெரிய விற்பனை நிலையங்களை திறக்க IKEA திட்டமிட்டுள்ளது. நொய்டா மையம் திறக்கப்பட்ட பின், மற்ற விற்பனை நிலையங்களுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்படும்.
🔷உத்திரபிரதேசம் (Uttar Pradesh) நொய்டாவின் செக்டர் 51 இல் கிட்டத்தட்ட 50,000 சதுர மீட்டர் அளவிலான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
🔷ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சீனா முழுவதும் 45 IKEA ஸ்டோர்கள் மற்றும் மால்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில், தொடங்கவும் திட்டமிட்டுள்ளன, நொய்டா திட்டத்தில் கிட்டத்தட்ட ₹5500 கோடி (759 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
🔷IKEA தனது முதல் ஸ்டோரை இந்தியாவில் 2018 இல் ஹைதராபாத்தில் திறந்தது, அதைத் தொடர்ந்து 2020 இல் மும்பையில் ஒரு கடை திறக்கப்பட்டது.
நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் துவக்கம் !!
🔷கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாநில அரசால், ஐ.ஐ.ஐ.டி.எம்.கே., எனப்படும், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் கேரள மேலாண்மை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
🔷இந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தி, 'கேரள டிஜிட்டல் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
🔷நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகமான இதை, கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.
அறிவியல் தொழில்நுட்பம்
பீரங்கிகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி !!
🔷பீரங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஹெலினா என்ற நவீன ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றம் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.
🔷மிகவும் குறைவான எடை கொண்ட இது, விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இவை விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் என்ற இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து நேற்று வீசப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
🔷ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்த சோதனையில் 4 ஏவுகணைகள் துருவ் ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. நான்கில் மூன்று ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன. இந்த ஏவுகணை 7 கிமீ தூரம் வரை பாய்ந்து எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
விவசாயம்
ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி !!
🔷நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.
🔷இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
🔷வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
🔷பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும்.
🔷சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.
விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் !!
🔷ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
🔷இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் மோதிய ஒசாகா வென்று கோப்பையை முத்தமிட்டார்.
🔷இது அவரது 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். யுஎஸ் ஓபனில் 2018 மற்றும் 2020ல் ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
🔷மேலும் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச் கைப்பற்றினார். ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்,