தினசரி நடப்பு நிகழ்வுகள் 2.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2.4.2021 (Daily Current Affairs)

உலகம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி !!

🔶கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது.

🔶இந்த நிலையில் கடந்த மாதம் இரு நாடுகளின் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீட்டெடுத்ததன் இருநாடுகள் இடையிலான பதற்றம் தணிந்தது.

🔶இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் தற்போது நீக்கியுள்ளது.

இந்தியா

இந்தியாவில் பயன்பாட்டில் 4 கோடி பழைய வாகனங்கள் !!

🔶இந்தியாவில் 15-ஆண்டுகளுக்கும் மேலான 4 கோடி பழைய வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

🔶ஆந்திரம், மத்திய பிரதேசம், தெலங்கானா, லட்சத் தீவு தவிா்த்து இத்தகைய வாகனங்களின் தரவுகளை நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.

🔶நாடு தழுவிய அளவில் 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 15-ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக, 2 கோடி வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை. எனவே, இந்த வாகனங்கள் அனைத்தும் பசுமை வரி விதிப்பின் வரம்புக்குள் வருகின்றன.

🔶பழைய வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் கா்நாடகம் 70 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, 56.54 லட்சம் வாகனங்களுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளன.

🔶இந்த பட்டியலானது மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

சாதனைகள்

25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை !!

🔶ஷோலாப்பூர் - பிஜப்பூரில் 25 கி.மீ தூரத்துக்கு ஒருவழி சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

🔶துரிதமாக சாலை அமைப்பதில் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 3 கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

🔶இதே வழித்தடத்தில் 2.5 கி.மீ. தூரத்துக்கு 4 வழி காங்கிரீட் சாலையை 24 மணி நேரத்தில் அமைத்து மேலும் ஒரு சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதை கண்டறிந்த நாசா!

🔶செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

🔶பூமியைப் போன்று செவ்வாயில் நிலத்தடித் தட்டுக்கள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

🔶இந்நிலையில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இன்சைட் என்ற ஆய்வூர்தி நடத்திய சோதனையில் அங்கு இருமுறை நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🔶அங்குள்ள செர்பரஸ் ஃபோஸே என்ற இடத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகள் முறையே 3 புள்ளி 3 மற்றும் 3 புள்ளி ஒன்று ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இரு நில அதிர்வுகளுக்குப் பின்னர் சிறிதும் பெரிதுமாக 500 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் நாசா கூறியுள்ளது.

நியமனங்கள்

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை !!

🔶இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔶இந்தியாவில், அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.

🔶இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது.

🔶இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும் ஏப்ரல் 8 ஆம் தேதி , பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது. இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

🔶கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார்.

🔶தமிழக காவல் துறையில் 'சப்-இன்ஸ்பெக்டராக' பணியாற்றி வருகிறார்.

🔶கடலூரில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள்தான் இந்துமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலிஷ் கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர் நியமனம் !!

🔶பிரிட்டனின் பிரதான கால்பந்து தொடரான இங்கிலிஷ் கால்பந்து லீக்கின் முதல் பெண் நடுவராக ரெபெக்கா வெல்ச் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

🔶இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலிஷ் கால்பந்து கிளப் வெளியிட்டு உள்ளது. இதற்கு முன் வரை உள்ளூர் ஆட்டம் மற்றும் எப்.ஏ. வகை கால்பந்து தொடர்களில் மட்டும் நடுவராக ரெபெக்கா செயல்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து கால்பந்து கிளப்பில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடுவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...