தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.4.2021 (Daily Current Affairs)

உலகம்

கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்த துருக்கி தடை விதித்தது..!!

🔷துருக்கி மத்திய வங்கி கிரிப்டோகரன்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதித்ததை அடுத்து பிட்காயின் நாணய வீதம் 4% க்கும் அதிகமாக குறைகிறது.

🔷சரிசெய்யமுடியாத சேதங்கள் மற்றும் பரிவர்த்தனை சிக்கல்கள் தடைக்கு காரணம் என்று வங்கி கூறியது.

🔷கிரிப்டோகரன்சி தளங்களை உள்ளடக்கிய மின்னணு நிதி பரிமாற்றங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களையும் இது தடை செய்கிறது.

இந்தியா

நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி..!!

🔷நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔷இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்த ஆலைகள் மூலமாக 154.19 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷33 ஆலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் மேலும் 54 ஆலைகளும், அடுத்த மாத இறுதிக்குள் கூடுதலாக 80 ஆலைகளும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🔷ஆலைகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் 201கோடியே 58 லட்சம் ரூபாயை மத்திய அரசு செலவிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

உதவி சொலிசிட்டா் ஜெனரலாக ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் பதவி ஏற்பு..!!

🔷சென்னை உயா்நீதிமன்றத்தில், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி சொலிசிட்டா் ஜெனரலாக ஆா். ராஜேஷ் விவேகானந்தன் பதவியேற்றுக் கொண்டாா்.

🔷சென்னை உயா்நீதிமன்றத்தில், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவதற்கு, உதவி சொலிசிட்டா் ஜெனரலாக ராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய அரசு அண்மையில் பிறப்பித்தது. இதனையடுத்து, உதவி சொலிசிட்டா் ஜெனரலாக வழக்குரைஞா் ராஜேஷ் விவேகானந்தன் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டாா்.

🔷புதிய உதவி சொலிசிட்டா் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் தாலுகா, தாண்டவன்காடு கிராமத்தைச் சோ்ந்தவா்.

🔷மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, கடந்த 1998 - ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவில், கிரிமினல் என அனைத்து வழக்குகளில் ஆஜராகி, திறம்பட வாதிட்டுள்ளாா்.

செயற்கைக்கோள் / ஏவுகணை

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை பறக்க விட்டது அமெரிக்காவின் நாசா..!!

🔷செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனை படைத்துள்ளது. மனித குலத்தின் மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படும் இத்தகைய நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

🔷செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு ஏதேனும் உயிரினங்கள் இருந்தனவா என்பதை அறிந்து கொள்வது மானுட குலத்தின் பெருங்கனவாக இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு நடத்த பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன.

🔷இந்த நிலையில் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக கடந்த வருடம் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் என்ற விண்ணூர்தி 7 மாதங்களில் சுமார் 292 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கடந்த பிப்ரவரி 18 - ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரா பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

🔷இந்த முயற்சியில் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவராகப் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகனுக்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்தன. அடுத்த சில தினங்களில் பெர்சிவரன்ஸ் எடுத்த செங்கோளின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது நாசா.

🔷அடுத்த 2 ஆண்டுகளுக்கு செவ்வாயில் உள்ள பாறைகள், மணற்பாங்கான பகுதியில் துளையிட்டு ஆய்வு நடத்தும் பெர்சிவரன்ஸ் 2030 - ம் ஆண்டு பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரோவரில் உள்ள இன்ஜெனூட்டி என்ற அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட நாசா முயற்சி மேற்கொண்டது.

🔷மனிதர்களற்ற மற்றொரு கிரகத்தில் நாசா எடுத்துக் கொண்ட முயற்சி, இருமுறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்தத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டர் தற்போது செவ்வாய்க் கிரகத்தில் 30 வினாடிகள் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. அதன் இயக்கம் யூடியூப்பில் நேரலையும் செய்யப்பட்டது.

🔷இன்ஜெனியூட்டி வெற்றிகரமாக பறந்ததைத் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். தற்போது பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாறு படைத்துள்ளது.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் கிரேக்கமும் கையெழுத்திட்டுள்ளது..!!

🔷சமீபத்தில், இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

🔷இந்த ஒப்பந்தம் 1.65 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

🔷இது நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளையும் பலப்படுத்தும். மேலும், நாடுகள் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.

விளையாட்டு

எம்யுஎஸ்சி ஹெல்த் மகளிா் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீராங்கனை..!!

🔷அமெரிக்காவின் சாா்லஸ்டன் நகரில் நடைபெற்ற எம்யுஎஸ்சி ஹெல்த் மகளிா் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்த்ரா சா்மா.

🔷உலகின் 165 - ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் அஸ்த்ரா இறுதிச்சுற்றில், உலகின் 27 - ஆம் நிலையில் உள்ள டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபுயேரை வீழ்த்தினாா்.

🔷அஸ்த்ராவுக்கு இது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும். நடப்பாண்டில் முதல் முறையாக டபிள்யூடிஏ பட்டம் வென்ற 6 - ஆவது ஒற்றையா் வீராங்கனை என்ற பெயரை அஸ்த்ரா பெற்றுள்ளாா்.

நியமனங்கள்

சிட்பி வங்கியின் தலைவராகசிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்பு..!!

🔷சிட்பி வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவராக சிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

🔷சிட்பி வங்கியின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சிவசுப்ரமணியன் ராமன் பொறுப்பேற்றுள்ளாா். இவா் மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பாா் என சிட்பி வங்கி தெரிவித்துள்ளது.

🔷கடந்த 1991 - ஆம் ஆண்டு இந்திய தணிக்கை & கணக்குகள் பணிக்கு (ஐஏ&ஏஎஸ்) தோ்வான ராமன், இதற்கு முன் நேஷனல் இ - கவா்னன்ஸ் சா்வீசஸ் நிறுவனத்தின் (என்இஎஸ்எல்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவா்.

விருதுகள்

ராபர்டோ பெனிக்னிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!!

🔷ராபர்டோ பெனிக்னிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. இயக்குனர் ராபர்டோ பெனிக்னி பற்றிய செய்தியை செயல்பாட்டு அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.

🔷இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குனராகவும் இருந்தார்.

🔷1997 - ஆம் ஆண்டில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற பெயரிடப்பட்ட ஹோலோகாஸ்ட் நகைச்சுவை - நாடகத் திரைப்படத்தில் அவர் நடித்தார் மற்றும் இயக்கியுள்ளார்.

🔷சிறந்த நடிகருக்கான அகாடமி விருதுகளையும் சிறந்த சர்வதேச அம்ச திரைப்படத்தையும் பெற்றார். அவர் அடிப்படையில் மேட்டியோ கரோனின் லைவ் - ஆக்சன் பினோச்சியோவில் கருதப்பட்டார், இதற்காக அவர் டேவிட் டி டொனாடெல்லோ விருதைப் பெற்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...