இந்தியா
திருநங்கைக்கு அனுமதி !!
🔷கேரளா மாநிலத்தில் கல்லூரி தேசிய மாணவர் படையில் சேர ஹனீபா எனும் திருநங்கை ஒருவருக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
🔷மேலும் என்.சி.சி.யில் திருநங்கைகளை சேர்க்கும் வகையில் 1948-ம் ஆண்டு என்.சி.சி. சட்டத்தில் உரியதிருத்தம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய மையம் !!
🔷விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா என்.ஐ.டி.யில் புதிய மையம் அமைக்க, இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
🔷இந்த மையம் அமைப்பதற்கு மானியமாக ரூர்கேலா என்.ஐ.டி.க்கு இஸ்ரோ 2 ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
திட்டங்கள்
கிராம் உஜாலா திட்டம் !!
🔷’கிராம் உஜாலா திட்டம் ’ (Gram Ujala Scheme ) என்ற பெயரில் கிராமப் புறங்களில் மலிவு விலையில் (ரூ.10/-) எல்.இ.டி. விளக்குகளை (LED bulbs) வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு பீகாரின் ஆரா (Arrah) மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.
🔷இந்த திட்டத்தின் முதற்கட்டத்தில், 15 இலட்சம் எல்.இ.டி. விளக்குகள் பீகார், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள கிராமப்புறங்களில் வழங்கப்படவுள்ளன.
நியமனங்கள்
தான்சானியாவுக்கு முதல் பெண் அதிபா் !!
🔷கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹஸன் (வயது 61) பதவியேற்றாா்.
🔷அந்த நாட்டின் துணை அதிபராக இதுவரை பொறுப்பு வகித்து வந்த அவா், உடல் நலக் குறைவு காரணமாக அதிபா் ஜான் மெகுஃபுலி காலமானதைத் தொடா்ந்து அதிபா் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சமியா சுலுஹி ஹஸன் அதிபா் பதவியை வகிப்பாா்.
விளையாட்டு
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: வெள்ளி வென்ற செளரப் செளத்ரி !!
🔷சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
🔷தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின், உலகின் 4-ம் நம்பர் வீரரான இந்தியாவின் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
🔷அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவின் யாஷஸ்வினி !!
🔷சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்றார்.
🔷தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி தேஸ்வால்தங்கம் வென்றார்.
🔷அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா வெண்கலம் பதக்கம் வென்றார்.