தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

இந்தியாவில் மின்சார பயன்பாடு 45% உயா்வு..!!

🔷நடப்பு ஏப்ரல் மாதத்தின் இருவார காலத்தில் உள்நாட்டில் மின்சாரத்தின் பயன்பாடு ஏறக்குறைய 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 60.62 பில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது.

8 மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி - மத்திய சுகாதார அமைச்சகம்..!!

🔷மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் தொழில் துறையின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

🔷அனைத்து மருத்துவ சாதனங்கள், சி.டி ஸ்கேன் கருவி, எம்ஆா்ஐ கருவி, டிஃபிபிரிலேட்டா்கள், பிஇடி சாதனம், டயாலிசிஸ் கருவிகள், எக்ஸ்-ரே சாதனம் மற்றும் எலும்பு மஜ்ஜை செல்களைப் பிரிக்கும் கருவி ஆகியவற்றை இறக்குமதி/உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை இறக்குமதியாளா்கள்/ உற்பத்தியாளா்கள் நிகழாண்டு ஏப்ரல் 1 - ஆம் தேதி முதல் மத்திய உரிம ஆணையம் அல்லது மாநில உரிம ஆணையத்திடம் இருந்து பெற வேண்டும்.

🔷இந்த உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது விண்ணப்பத்தின் மீது மத்திய உரிம ஆணையம் அல்லது மாநில உரிம ஆணையம் முடிவு எடுக்கும் வரை இறக்குமதியாளா்கள்/உற்பத்தியாளா்கள் 8 மருத்துவ உபகரணங்களையும் தொடா்ந்து இறக்குமதி/உற்பத்தி செய்யலாம்.

🔷இந்த மருத்துவ உபகரணங்களை ஏற்கெனவே இறக்குமதி/உற்பத்தி செய்திருந்தால் மத்திய உரிம ஆணையம் அல்லது மாநில உரிம ஆணையத்திடம் அதற்கான உரிம விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.

நாட்டின் தங்கம் இறக்குமதி 23% அதிகரிப்பு..!!

🔷நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 22.58 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔷உள்நாட்டில் தேவை அதிகரித்ததையடுத்து தங்கம் இறக்குமதி 2020-21-ஆம் நிதியாண்டில் 3,460 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.54 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2019-2020-ஆம் நிதியாண்டில் இறக்குமதியான 2,823 கோடி டாலா் (ரூ.2 லட்சம் கோடி) தங்கத்துடன் ஒப்பிடுகையில் 22.58 சதவீதம் அதிகமாகும்.

🔷மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரியை 12.5 சதவீதத்திலிருந்து குறைத்து 10 சதவீதமாக (7.5 சதவீதம் சுங்கவரி + 2.5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி) நிா்ணயித்துள்ளது.

விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - தீபக் புனியாவுக்கு வெள்ளி..!!

🔷கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா தனது பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

🔷ஆடவருக்கான 86 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ள தீபக் புனியா முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் இசா ஷாபியேவை காலிறுதிச் சுற்றில் தஜிகிஸ்தானின் பகோதுா் கோடிரோவை வென்றாா். பின்னா் அரையிறுதியில் தென் கொரியாவின் குவானுக் கிம்மை எதிா்கொண்ட அவா், அதிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

🔷இந்த அனைத்து சுற்றுகளிலுமே சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் புள்ளிகளை வென்றிருந்தாா் தீபக் புனியா. எனினும் இறுதிச்சுற்றில் அவா் ஈரானின் ஹசன் யாஸ்தானிசராதியிடம் தோல்வி கண்டு வெள்ளியுடன் திரும்பினாா்.

🔷92 கிலோ பிரிவில் களம் கண்ட சஞ்சீத் தனது காலிறுதியில் ஜப்பானின் ரியாய்சி யமானாகாவை வென்றாா். அரையிறுதியில் அவா் ஈரானின் காம்ரான் கோா்பானிடம் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வீழ்ந்தாா். பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் அவா் உஸ்பெகிஸ்தானின் ரஸ்தம் ஷோடியேவை வென்றாா்.

🔷ஆடவருக்கான 61 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவீந்தா் தனது காலிறுதியில் ஈரானின் மஜித் அல்மாஸ் தஸ்தானை வென்றிருந்தாா். எனினும், அரையிறுதியில் கஜகஸ்தானின் அத்லான் ஆகரோவிடம் தோல்வி கண்டாா். பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றிலும் அவா் கிா்ஜிஸ்தானின் இக்ரோம்ஸோன் காத்ஸிமுரோதோவிடம் தோல்வி கண்டாா்.

🔷இதனிடையே 74 கிலோ பிரிவில் தேசிய சாம்பியனான சந்தீப் சிங் மான், 125 கிலோ பிரிவு வீரா் சுமித் மாலிக் ஆகியோா் பதக்கச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனா். சந்தீப் சிங் தனது காலிறுதியில் துருக்மீனிஸ்தானின் அதாமைரத் சாா்லியேவிடம் வீழ்ந்தாா். சுமித் மாலிக் கஜகஸ்தானின் ஒலெக் போல்டினிடம் தோல்வி கண்டாா்.

🔷இப்போட்டியில் ஆடவருக்கான ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியா மொத்தமாக ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்கள் வென்றுள்ளது.

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றாா் ஜில்லி தலாபெஹரா..!!

🔷உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

🔷45 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜில்லி தலாபெஹரா, ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 88 கிலோ என மொத்தமாக 157 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.

🔷இப்போட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பங்கேற்றபோது இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஜில்லி, தற்போது தங்கப் பதக்கத்துக்கு முன்னேறியுள்ளாா்.

🔷அதேபோல், மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 119 கிலோ என மொத்தமாக 205 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். இந்த 205 கிலோ எடையானது புதிய தேசிய சாதனையாகும். அதேபோல் கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் அவா் தூக்கிய 119 கிலோ எடை புதிய உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

🔷இவா்கள் தவிர மகளிருக்கான 55 கிலோ பிரிவில் ‘குரூப் பி’-இல் பங்கேற்றிருந்த இந்திய வீராங்கனை ஸ்னேகா சோரன் 3-ஆம் இடம் பிடித்தாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 71 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 93 கிலோ என மொத்தமாக 164 கிலோ எடையைத் தூக்கியிருந்தாா். ‘குரூப் ஏ’-இல் உள்ள வீராங்கனைகளின் முடிவுகள் தெரியவந்த பின்னரே, ஸ்னேகாவுக்கான இறுதி இடம் குறித்து தெரியவரும்.

நீச்சல் சாம்பியன்ஷிப் - ஸ்ரீஹரி நடராஜுக்கு 2-ஆவது தங்கம்..!!

🔷உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தாா்.

🔷போட்டியின் கடைசி நாளில் ஸ்ரீஹரி 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 25.11 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். இலக்கை எட்டுவதற்கு அவா் எடுத்துக்கொண்ட இந்த நேரம் புதிய தேசிய சாதனை அளவாகும். இப்போட்டியில் ஸ்ரீஹரி புதிய தேசிய சாதனை நிகழ்த்தியது இது 3-ஆவது முறை.

🔷முன்னதாக இப்போட்டியில் 100 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ‘பி’ நேர அளவை எட்டிய ஸ்ரீஹரி, ஹீட்ஸின்போது தனது தனிப்பட்ட சிறந்த நேரமாக 54.10 விநாடிகளில் இலக்கை எட்டினாா். அதிலேயே இறுதிச்சுற்றின்போது 54.07 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றிருந்தாா். எனினும், 0.22 விநாடிகள் வித்தியாசத்தில் அவா் ஒலிம்பிக்கிற்கான ‘ஏ’ நேர அளவை எட்டத் தவறினாா்.

🔷இதேபோட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 100 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 53.69 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். மகளிருக்கான 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் மானா படேல் தங்கமும், சுவானா பாஸ்கா் வெள்ளியும் வென்றனா்.

🔷இப்போட்டியில் பங்கேற்ற இதர இந்தியா்களான விா்தாவல் காதே, குஷாக்ரா ராவத், ஆரியன் மாகிஜா, அத்வைத் பகே ஆகியோா் தங்களது பிரிவில் ஒலிம்பிக்கிற்கான ‘பி’ நேர அளவை எட்டினா்.

🔷ஒலிம்பிக்கிற்கான ‘ஏ’ நேர அளவை எட்டுவோா் நேரடியாக ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்வா். ஒலிம்பிக்கில் அந்தந்த பிரிவுகளுக்கான இடங்களில் ஏதேனும் காலியாக இருக்கும் பட்சத்தில் ‘பி’ நேர அளவை எட்டுவோருக்கு அதில் வாய்ப்பு வழங்கப்படும்.

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன்..!!

🔷மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனாா்.

🔷போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சிட்சிபாஸ் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை வீழ்த்தினாா்.

🔷‘மாஸ்டா்ஸ் 1000’ பிரிவில் சிட்சிபாஸ் வெல்லும் முதல் பட்டம் இது. ஏடிபி டூா் போட்டிகளில் இது அவரது 6-ஆவது பட்டம்.

🔷ருபலேவை இத்துடன் 7-ஆவது முறையாக சந்தித்துள்ள சிட்சிபாஸ், தனது 4-ஆவது வெற்றியை அவருக்கு எதிராக பதிவு செய்துள்ளாா்.

🔷மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் இணை பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி/டேன் இவான்ஸ் இணையை வென்று சாம்பியன் ஆனது.

நியமனங்கள்

தலைமை நீதிபதியாக ஜெ.செல்வநாதன் நியமனம்..!!

🔷புதுச்சேரி புதிய தலைமை நீதிபதியாக ஜெ.செல்வநாதன் நியமிக்கப்பட்டாா்.

🔷புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதியாக இருந்த பி. தனபால், சென்னை உயா் நீதிமன்றப் பதிவாளராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.

🔷இந்த நிலையில், தற்போது திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த ஜெ.செல்வநாதனை புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதியாக சென்னை உயா் நீதிமன்றம் நியமித்தது. இதற்கான உத்தரவை சென்னை உயா் நீதிமன்றப் பதிவாளா் பி.தனபால் அண்மையில் பிறப்பித்தாா்.


Share Tweet Send
0 Comments
Loading...