தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.3.2021 (Daily Current Affairs)

உலகம்

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின்சக்தி உற்பத்தி ஆலை – சிங்கப்பூர்!!

🔷உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையானது  சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது.

🔷அந்நாடு கடலில் மிதக்கும் ஆற்றல் உற்பத்தி ஆலைகளையும் கடலின் குறுக்கே நீர்த் தேக்கங்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளது.

🔷உலகிலேயே அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

🔷காலநிலை மாற்ற இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்காகவும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டினைக் குறைப்பதற்காகவும் சிங்கப்பூர் நாடானது மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறது.

🔷இந்தப் பணியினை செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறை!!

🔷ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது.  நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது.

🔷இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் முதலாவதாக ஸ்பெயினில் இனி வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அங்கீகாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

🔷இது வேலை நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இதை நடைமுறைப்படுத்த அந்நாடு முடிவெடுத்துள்ளது.

விளையாட்டு

டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!!

🔷ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி  இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

🔷பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறுகிறது.

🔷இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அர்ஜுனா விருது வென்றுள்ள இவர்  தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

திட்டங்கள்

பழைய வாகன அழிப்பு சான்றிதழ் சமா்ப்பித்தால் புதிய வாகன விலையில் 5% தள்ளுபடி!!

🔷பழைய வாகன அழிப்பு சான்றிதழை சமா்ப்பித்தால் புதிய வாகன விலையில் 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

🔷தற்போது 20 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 51 லட்சம் இலகுரக வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான 34 லட்சம் இலகுரக வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. அதுபோல, 15 ஆண்டுகள் பழைமையான 17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் முறையான தகுதிச் சான்று இல்லாமல் சாலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பழைய வாகனங்கள் தகுதியான வாகனங்களைக் காட்டிலும் 10 முதல் 12 மடங்கு கூடுதல் காற்று மாசை ஏற்படுத்துகின்றன. ஒரு வாகனம் தகுதிச் சான்று பெறவில்லை அல்லது பதிவு புதுப்பிக்கப்பட வில்லை என்றால் அதன் பயன்பாட்டுக் காலம் முடிந்துவிட்டதாகவே கருதப்படும்.

🔷அந்த வகையில், பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்தும் மிகச் சிறந்த கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

வலைதள சேவைகளை வழங்குவதற்காக நோக்கியா, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் கூட்டு சேர்ந்துள்ளது!!

🔷புதிய கிளவுட் அடிப்படையிலான 5 ஜி ரேடியோ தீர்வை உருவாக்க நோக்கியா மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் கூகிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

🔷இந்த  5ஜி ரேடியோ தீர்வு மூலமாக ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RNA) தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 செயற்கைகோள் 7 ஆண்டுகள் வரை செயல்படும் என்று இஸ்ரோ தகவல்!!

🔷இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தினை ஆய்வு செய்ய சந்திரயான் 2 செயற்கைகோளினை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது 1 ஆண்டு வரை மட்டுமே செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

🔷ஆனால், தற்போது இந்த செயற்கைகோள் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை செயல்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🔷இது மட்டுமின்றி நிலவில் காணப்பட்ட பள்ளத்தினை சந்திரயான் 2 படம் பிடித்து காட்டியது. இதனை அடுத்து அந்த பள்ளத்திற்கு “சாராபாய் பள்ளம்” என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

நியமனங்கள்

டாக்டர் ஹர்ஷ் வர்தன் – Stop TB Partnership வாரியத்தின் தலைவர்!!

🔷மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Stop TB Partnership) ‘காசநோயை ஒழிப்பதற்கான பங்குதார வாரியத்தின்’ தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

🔷இப்பொறுப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்டு வரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப் பட்டுள்ளது.

🔷2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 3 வருடங்களுக்கு இந்த உலக அமைப்பிற்கு அவர் தலைமையேற்றுப் பணி புரிவார்.

🔷இது ஒரு சர்வதேச அமைப்பாகும். இது காசநோய்க்கு எதிராக போராடுவதற்காக பல நாடுகளை ஒன்று திரட்டும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

🔷இந்த அமைப்பு “காசநோய் இல்லாத உலகம்” எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...