தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.2.2021 (Daily Current Affairs)

இந்தியா

பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு 34 ஆயிரம் கோடி முதலீடு !!

🔷வாகன மாசைக் குறைக்க, கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் – 6 தொழில்நுட்பத்துக்கு, இந்தியா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

🔷பிஎஸ் – 6 விதிமுறைகள், யூரோ-6 விதிமுறைகளுக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

🔷இதன் மூலம் காற்றில் கந்தக அளவு குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் தொழில்நுட்பம்

Progress MS-16 சரக்கு விண்கலம் !!

🔷ரஷ்யா முதன் முறையாக தனது முதல் பலதரப்பட்ட சரக்குகளுடன் கூடிய விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. இதனை அந்த நாட்டின் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவியுள்ளது.

🔷கஜகஸ்தானில் ரஷ்யா-குத்தகைக்கு எடுத்த பைக்கோனூர் ஏவுதளத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் தண்ணீர் உட்பட பல பொருட்களையும் விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளது.

கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு !!

🔷பிரிட்டிஷ் அண்டார்க்டிகா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர். 900 மீட்டர் ஆழத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

🔷அப்போது இதுவரை பார்த்திராத சில வகை பூஞ்சைகளும், சிறிய புழுக்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

🔷இந்த வகை உயிரினங்களும், பூஞ்சைகளும் தற்போதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியில் டைனோசர்கள் அழிவுக்கு குறுங்கோள் காரணமல்ல : விஞ்ஞானிகள் கருத்து !!

🔷இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழக நடத்திய ஆய்வில், வியாழன் கிரகத்தால் தூண்டப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று சூரியனை நோக்கி ஈர்த்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

🔷அவ்வாறு சூரியனுக்கு அருகில் சென்றபோது ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கத்தினால் அந்த வால் நட்சத்திரம் உடைந்து அதன் ஒரு பகுதி பூமியின் மீது மோதியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

🔷வால் நட்சத்திரம் மோதியதால் மெக்ஸிகோ கடற்கரையில், 94 மைல் நீளத்தில், 12 மைல் ஆழம் கொண்ட பள்ளம் உருவாகி அதன் விளைவால் சுனாமி, இருட்டு, தாவரங்கள் அழிதல் போன்ற காரணிகளால் டைனோசர் இனமே அற்றுப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியமனங்கள்

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய தலைவர் நியமனம் !!

🔷மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, கழிவுகளை அகற்றுவோரின் குறைகளை தீர்ப்பதற்காக, தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தை, 1994-ல் அமைத்தது. இது, ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.

🔷இந்த ஆணையத்தின் தலைவராக, சென்னையை சேர்ந்த, தமிழக பா.ஜ., பட்டியல் அணி முன்னாள் மாநில தலைவர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷துணை தலைவராக, பீஹாரை சேர்ந்த பாபன் ராவத், உறுப்பினர்களாக ஜெய்ப்பூரை சேர்ந்த அஞ்சனா பவார், கேரளாவை சேர்ந்த வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்கள் இப்பதவியில் 2022 மார்ச் 31 வரை இருப்பர்.

2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூடுதலாக நியமனம் !!

🔷தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் கூடுதலாக 2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

🔷தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷வேளாண் துறை இணைச் செயலர் ஆனந்த், சுகாதாரத்துறை கூடுதல் ஆணையர் அஜய் யாதவ் ஆகியோர் கூடுதலாக தமிழக தேர்தல் இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷அஜய் யாதவ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மரியோ டிராகி இத்தாலியின் புதிய பிரதமராக பதவியேற்பு !!

🔷பொருளாதார வீழ்ச்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி பதவியேற்றார்.

🔷இத்தாலியின் முக்கிய கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மரியோ டிராகிக்கு ஆதரவினை வழங்கியுள்ளன.

🔷இவரது பதிவியேற்பு மூலமாக நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு !!

🔷பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சௌகார் ஜானகி, நடிகர்கள் ராமராஜன், யோகி பாபு, தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு , இயக்குனர் கவுதம் மேனன், லியாகத் அலிகான் உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷சினிமா துறையை சார்ந்தவர்களுக்கான 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🔷பின்னணி பாடகி ஜமுனா ராணிக்கும்  கலைமாமணி விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதாவுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.சி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டி.சி நடிகர் நந்தகுமாருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, இயக்குனர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷இயக்குனர் லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப் பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...