தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.5.2021 (Daily Current Affairs)

உலகம்

மெக்ஸிகோவை சோ்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு..!!

🔷மெக்ஸிகோவை சோ்ந்த ஆண்ட்ரியா மெசா 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவா்ஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். 73 நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவின் அட்லின் காஸ்டெலினோ 4 ஆவது இடம் பிடித்தாா்.

🔷கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஹாலிவுட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் எளிமையாக நடத்தப்பட்டது.

🔷இப்போட்டியில் மெக்ஸிகோவின் 26 வயது ஆண்ட்ரியா மெசா பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்றதாகவும், அவருக்கு கடந்த ஆண்டு வெற்றியாளரான தென் ஆப்பிரிக்காவின் ஷோஸிபினி துன்ஷி மகுடத்தைச் சூட்டியதாகவும் மிஸ் யுனிவா்ஸின் அதிகாரபூா்வ வலைதளம் தெரிவித்துள்ளது.

🔷இப்போட்டியில் பிரேசிலை சோ்ந்த ஜூலியா காமா (28) இரண்டாவது இடத்தையும், பெரு நாட்டைச் சோ்ந்த ஜானிக் மசீட்டா (27) மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.

🔷‘மிஸ் இந்தியா’ அட்லீன் காஸ்டெலினோ (22) நான்காவது இடத்தைப் பிடித்தாா்.

விளையாட்டு

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது பார்சிலோனா..!!

🔷மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பார்சிலோனா அணி முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

🔷ஸ்வீடனின் கோதென்பர்க் நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் செல்சீ அணியுடன் மோதிய பார்சிலோனா மகளிர் அணி, தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

🔷ஆட்ட நேர முடிவில், பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று மகளிர் சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.

🔷இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் மகளிர் அணி என்ற பெருமையையும் வசப்படுத்தியது. சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கிளப் என்ற சாதனையும் பார்சிலோனாவுக்கு கிடைத்துள்ளது.

திட்டங்கள்

SWAMIH - இன் முதல் குடியிருப்பு வசதி திட்டம் நிறைவு..!!

🔷மத்திய அரசின் மலிவான மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி வழங்கும் சிறப்புத் திட்டத்தின் (Special Window for Affordable & Mid Income Housing - SWAMIH) முதல் குடியிருப்பு வசதி திட்டமானது நிறைவடைந்துள்ளது.

🔷மும்பையின் புறநகர்ப் பகுதியிலுள்ள ரிவாலி பூங்காவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பானது இந்தியாவில் SWAMIH நிதியின் கீழ் நிதி உதவி பெறும் முதல் குடியிருப்பு வசதி வழங்கும் திட்டமாகும்.

🔷SWAMIH நிதியானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீதாராமன் அவர்களால் தொடங்கப்பட்டது.

🔷நிதிப் பற்றாக்குறையினால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்பு வசதி திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக SWAMIH முதலீட்டு நிதியானது உருவாக்கப்பட்டது.

🔷நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் தான் இந்த நிதியின் நிர்வாகி ஆவார்.

விருதுகள்

நாகாலாந்து பாதுகாவலர் நுகு ஃபோம் மதிப்புமிக்க விட்லி விருது 2021 - ஐ வென்றுள்ளார்..!!

🔷நாகாலாந்தின் தொலைதூர லாங்லெங் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், நுகு ஃபோம் (Nuklu Phom) இந்த ஆண்டின் விட்லி விருது 2021 ஐ வென்றுள்ளார், இது பசுமை ஆஸ்கார் என்றும் அழைக்கப்படுகிறது.

🔷இங்கிலாந்தை தளமாகக் கொண்ட விட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர் (Whitley Fund for Nature (WFN)) ஏற்பாடு செய்த மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் நுகு ஃபோமின் பெயர் மற்ற ஐந்து பேரின் பெயருடன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

🔷அமுர் பால்கானை ஒரு பிரதானமாகப் பயன்படுத்தி சமூகங்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தும் மாற்று வழிகளை நுகு மற்றும் அவரது குழுவினர் வழங்க விரும்புகிறார்கள்.


Share Tweet Send
0 Comments
Loading...