தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.4.2021 (Daily Current Affairs)

உலகம்

கியூபாவில் 60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது..!!

🔷அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்னமாகத் திகழந்துவரும் குட்டி நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

🔷ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கேஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

60% யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது ஈரான்..!!

🔷வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60 சதவீதம் வரை சுத்திகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

🔷நடான்ஸ் நகரில் அமைந்துள்ள தங்கள் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் இஸ்ரேலின் சதிச் செயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஈரான், அதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்தியா

2020-21 நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவை வெற்றிகரமாக செயல்படுத்திய உதம்பூர் மாவட்டம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது!!

🔷2020-21 காலப்பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனாவை (PMGSY) வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாவட்டம் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.

🔷2020-21 ஆம் ஆண்டில் 560.49 கிமீ சாலைகள் அமைப்பதில் மாவட்டத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

🔷இருப்பினும், PMGSY நாட்டின் சிறந்த 30 மாவட்டங்களின் பட்டியலில் யூனியன் பிரதேசத்திலிருந்து மேலும் நான்கு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிரிவின் ராஜோரி, தோடா, கத்துவா மற்றும் ரியாசி மாவட்டங்கள் அடங்கும்.

தமிழ்நாடு

வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு..!!

🔷பேட்டரியில் இயங்கக்கூடிய பறக்கும் இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.

🔷போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டது. அதற்காக ‘தி இ-பிளேன் கம்பெனி’ (The ePlane Company) என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸியை ஐஐடி வடிவமைத்துள்ளது.

🔷சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் இதில் 2 பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிலோ அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

🔷இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்குமட்டுமே வாடகை அதிகம் இருக்கும்.

இறப்பு

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..!!

🔷சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68.

🔷பீகாரில் 1974 - ல் பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, சிபிஐ இயக்குனர், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

🔷சிபிஐ இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைவராகவும், பாட்னா மற்றும் டெல்லியில் சிபிஐ உயர் பதவிகளிலும் பணியாற்றி உள்ளார்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

🔷மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகமானது AYUSH அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

🔷இது ஆயுர்வேதத்தின் கருத்தையும் அதனுடன் தொடர்புடைய துறைகளையும் கால்நடை அறிவியலில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

விளையாட்டு

ஆசிய மல்யுத்தம் - வினேஷ், அன்ஷுவுக்கு தங்கம்..!!

🔷ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் தங்கம் வென்றனா்.

🔷கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், ஒரு புள்ளியைக்கூட இழக்காமல் தங்கம் வென்றுள்ளாா்.

🔷சீனா மற்றும் ஜப்பானைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்காததால் வினேஷ் போகத்தின் வெற்றி எளிதானது. மகளிா் 57 கிலோ எடைப் பிரிவில் 19 வயதான அன்ஷு மாலிக் தங்கம் வென்றாா்.

🔷வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

🔷வினேஷ் போகத் இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளி உள்பட 7 பதக்கங்கள் வென்றிருந்தபோதிலும், இப்போதுதான் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளாா். இதேபோல் இந்தியாவின் திவ்யா காக்ரன் (72 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சாக்ஷி மாலிக் (65 கிலோ எடைப் பிரிவு) வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

🔷ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஆட்டங்களில் சரிதா (59 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சீமா பிஸ்லா (50 கிலோ எடைப் பிரிவு), பூஜா (76 கிலோ எடைப் பிரிவு) ஆகியோா் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...