தினசரி நடப்பு நிகழ்வுகள் 16.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 16.5.2021 (Daily Current Affairs)

இந்தியா

Care மதிப்பீடுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2022 - க்கு 9.2% ஆக கணித்துள்ளது..!!

🔷மதிப்பீட்டு நிறுவனமான CARE மதிப்பீடுகள், நடப்பு 2021-2022 (FY22) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 9.2 சதவீதமாக திருத்தி கணித்துள்ளது.

🔷இது ஏப்ரல் 2021 இல் மதிப்பிடப்பட்ட 10.2 சதவீதத்தை விடக் குறைவு.

6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை..!!

🔷நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவசமாக இணைய வசதி அளிப்பதற்கான வைஃபை சேவை திட்டம் 6,000 ரயில் நிலையங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

🔷மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக ரயில் நிலையங்களில் இலவச வைஃபை திட்டம் தொடங்கப்பட்டது. ரயில்டெல் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

🔷கூகுள், டாட், டாடா அறக்கட்டளை ஆகியவை பின்னா் இத்திட்டத்தில் இணைந்தன. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முக்கியமாக கிராமப்புற மக்களுக்கும் இணையதள சேவையைக் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

🔷மேற்கு வங்கத்தில் மிதுனபுரி ரயில் நிலைத்தில் வைஃபை வசதி அமைத்தபோது 5,000 என்ற அளவு எட்டப்பட்டது. இப்போது ஒடிஸா மாநிலம் ஜாரபாதா ரயில் நிலையத்திலும், ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாத் ரயில் நிலையத்திலும் இலவச வைஃபை சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை என்ற மைல்கல் எட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!!

🔷தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த ஆணையை பிறப்பித்துள்ளார்.

🔷அதன்படி, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் முன்னதாக பங்கஜ் குமார் என்பவர் இருந்தார்.

🔷முன்னதாக ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலராக இருந்த அவர் தமிழக ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்..!!

🔷இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.

🔷இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.

🔷2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...