உலகம்
அம்பேத்கரை கௌரவிக்கும் தீா்மானம் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்..!!
🔷இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் கலிஃபோா்னியா 17 - ஆவது மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினா் ரோஹித் கன்னா கூறியது, அனைவரையும் சரிசமமாக மதிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவைத்தான் அம்பேத்கா் விரும்பினாா். அவரை கௌரவப்படுத்தும் தீா்மானமொன்றை பிரதிநிதிகள் சபையில் நான் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
🔷தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக ரோஹித் கன்னா தாக்கல் செய்யும் அந்தத் தீா்மானத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவா்களுக்கு எதிரான இன பேதத்தைப் போக்குவதில் அம்பேத்கா் ஏற்படுத்திய தாக்கத்தின் பங்கு குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் 18.3% பொருளாதார வளர்ச்சியை எட்டி சீனா சாதனை..!!
🔷சீனாவின் தேசிய புள்ளிவிவர செய்தித் தொடர்பாளர் லியு ஹைஹுவா கூறும்போது, “நாட்டின் பொருளாதாரம் நல்ல தொடக்கத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டும் வேலை செய்யும் நாட்கள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
🔷முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 18.3% அதிகரித்துள்ளது மிகப்பெரிய வளர்ச்சி இது என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் முதல் விண்வெளி வீராங்கனை தேர்வு..!!
🔷ஐக்கிய அரபு அமீரகம் அரசு வெளியிட்ட அறிக்கையில், “27 வயதான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை, ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். விரைவில் நாசாவில் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் இவர் கலந்துகொள்ள இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்..!!
🔷இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரான்விஜய் நீர்மூழ்கிக் கப்பல், இலங்கைக்கு 3 நாள்கள் நல்லிணக்க பயணமாக சென்றடைந்தது.
🔷சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டின் புனித நிகழ்வான "அவருடு' தினத்தையொட்டி, இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு வருவதன் மூலம், இலங்கை மக்களுக்கு ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான செய்தியைத் தாங்கி வருகிறது.
🔷ராஜபுத்திர வம்சத்தினரின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் ரான்விஜய்யில், ஏவுகணைகளை அழிக்கும் கருவிகளும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையும் பொருத்தப்பட்டுள்ளது.
🔷இந்தக் கப்பல் கேப்டன் நாராயணன் ஹரிஹரன் தலைமையில் அங்கு சென்றடைந்துள்ளது. அவர், மேற்கு கடற்படை பகுதியின் தளபதியான டபிள்யூயுடிஇஎம் சுதர்சனாவை சந்தித்து, வியாழக்கிழமை இந்திய அமைதி காக்கும் படையின் (ஐபிகேஎஃப்) நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என கொழும்பில் இருந்து வரும் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
🔷இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1987 முதல்1990-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில் ஐபிகேஎஃப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மிஷன் அஹார் கிரந்தி..!!
🔷சமீபத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் “மிஷன் அஹார் கிரந்தி” என்ற புதிய முயற்சியை தொடங்கினார்.
🔷இதன் நோக்கம் முக்கியமாக ஊட்டச்சத்து சீரான உணவின் முக்கியத்துவத்தின் செய்தியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றிய முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும்.
🔷இந்தியாவும் உலகமும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையான “ஏராளமான பசி மற்றும் நோய்களை” நிவர்த்தி செய்வதற்காக இந்த மிஷன் முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பசுமை கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ள முதல் மாநகராட்சி..!!
🔷இந்தியாவில் ‘பசுமை கடன் பத்திரங்களை’ (green bonds) வெளியிட்டுள்ள முதல் மாநகராட்சி எனும் பெருமையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஷியாபாத் மாநகராட்சி (Ghaziabad Municipal Corporation) பெற்றுள்ளது.
🔷உத்தரபிரதேசத்தில் ஒரு குடிமை அமைப்பான காஷியாபாத் மாநகராட்சி மும்பை பங்குச் சந்தையில் (BSE) நாட்டின் முதல் பசுமை நகராட்சி பத்திரங்களை வெற்றிகரமாக பட்டியலிட்ட இந்தியாவின் முதல் நகராட்சி நிறுவனமாக ஆனது.
🔷ரூ .150 கோடியை 8.1 சதவீதமாக திரட்டுவதாக நிறுவனம் அறிவித்தது. மூன்றாம் நிலை நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும், காஷியாபாத்தில் நீர் மீட்டர் வழியாக குழாய் நீரை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும்.
செயற்கைக்கோள் / ஏவுகணை
விண்வெளி பயணிகளுக்கான ராக்கெட் பரிசோதனை வெற்றி..!!
🔷விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லும் புளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் பரிசோதனை டெக்சாஸ் மாகாணத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
🔷இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக 15 வது முறையாகவும் இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
🔷மேற்கு டெக்சாஸின் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து பூஸ்டர்கள் தீர்ந்தவுடன் பாராஷீட் உதவியுடன் தரையிரங்கியது.
🔷இதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனைகளை விட இம்முறை நடைபெற்ற பரிசோதனையில், ராக்கெட் தரையிரக்கத்தில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
🔷புளூ ஆரிஜின் நிறுவனம் ராக்கெட் மூலம் பயணிகளையும், விஞ்ஞானிகளையும், தொழில்முறை விண்வெளி வீரர்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தரவரிசை
இணையதள உள்ளடக்கக் குறியீடு 2021..!!
🔷பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவானது (EIU - Economist Intelligence Unit) பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இணையதள உள்ளடக்க குறியீடு 2021 என்ற ஒரு குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
🔷இதில் உலகளவில் இந்தியா 49 - வது இடத்தில் உள்ளது,
🔷இந்தியாவும் தாய்லாந்தும் இந்த இடத்தை (49வது) பகிர்ந்து கொள்கின்றன.
🔷இக்குறியீடானது பேஸ்புக் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டு EIU அமைப்பினால் மேம்படுத்தப்பட்டு உள்ளது.