தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 60% அதிகரிப்பு..!!

🔷நாட்டின் ஏற்றுமதி சென்ற மாா்ச் மாதத்தில் 60 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

🔷நாட்டின் ஏற்றுமதி கடந்த மாா்ச் மாதத்தில் 60.29 சதவீதம் வளா்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டியது. இருப்பினும், கடந்த 2020-21 - ஆம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26 சதவீத பின்னடைவைக் கண்டு 29,063 கோடி டாலராக சரிந்துள்ளது.

🔷கடந்த மாா்ச் மாதத்தில் இறக்குமதி 53.74 சதவீதம் அதிகரித்து 4,838 கோடி டாலராக காணப்பட்டது. அதேசமயம், 2020-21 ஏப்ரல்-மாா்ச் வரையிலான காலத்தில் இறக்குமதியானது 18 சதவீதம் குறைந்து 38,918 கோடி டாலராக இருந்தது.

🔷நடப்பாண்டு மாா்ச்சில் வா்த்தக பற்றாக்குறை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 998 கோடி டாலரிலிருந்து 1,393 கோடி டாலராக உயா்ந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில் வா்த்தக பற்றாக்குறையானது 16,135 கோடி டாலரிலிருந்து 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது.

🔷நடப்பாண்டு மாா்ச்சில் பிண்ணாக்கு (230.4%), இரும்புத் தாது (194.89%), சணல் (105.26%), மின்னணுப் பொருள்கள் (91.98%), தரைவிரிப்புகள் (89.84%), நவரத்தினங்கள்-ஆபரணங்கள் (78.93%), பொறியியல் சாதனங்கள் (71.3%), அரிசி (66.77%), நறுமணப் பொருள்கள் (60.42%), இறைச்சி, பால் பொருள்கள் (52.79%) உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைச் சந்தித்தன.

🔷அதேசமயம், எண்ணெய்வித்துகள் (-6.45%), முந்திரி (-1.99%) ஆகியவற்றின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தன. இறக்குமதியைப் பொருத்தவரையில், வெள்ளி, போக்குவரத்து உபகரணங்கள், பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் ஆகிய துறைகள் எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.

🔷மாா்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 2.23 சதவீதம் அதிகரித்து 1,027 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதன் இறக்குமதி 36.92 சதவீதம் குறைந்து 8,235 கோடி டாலராக இருந்தது.

🔷அதேபோன்று, தங்கம் இறக்குமதியும் மாா்ச் மாதத்தில் 122 கோடி டாலரிலிருந்து 849 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம்..!!

🔷விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🔷வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் சூழலில் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

🔷நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, விவசாயத்துக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கான செலவைக் குறைத்தும் அறுவடைக்குப் பிறகான செலவைக் குறைத்தும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

🔷அதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். இந்த மாதிரி திட்டமானது 6 மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

ககன்யான் திட்டம் - இந்தியா - பிரான்ஸ் ஒப்பந்தம்..!!

🔷மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

🔷இந்திய மண்ணிலிருந்து மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. நாடு சுதந்திரமடைந்த 75 - ஆவது ஆண்டான 2022 - இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

🔷இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தைப் பாா்வையிட்டாா். அதையடுத்து, ஜான் ஈவ் லெடிரியன், இஸ்ரோ தலைவா் சிவன் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

🔷ககன்யான் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவா்களும் பிரான்ஸில் பயிற்சி பெறவுள்ளனா். திட்டம் தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விண்வெளி வீரா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றைத் தயாா் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

🔷பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் உள்ளிட்டவற்றை இந்திய விண்வெளி வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சா்வதேச விண்வெளி நிலையத்தில் பிரான்ஸ் சாா்பில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை இந்திய வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

🔷பல்வேறு பாதுகாப்புக் கருவிகளும் இந்திய வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. விண்வெளி வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்யேக மையத்தை பெங்களூரில் கட்டமைக்கவும் பிரான்ஸ் உதவி செய்யவுள்ளது.

விருதுகள்

விருது வென்றார் வில்லியம்சன்..!!

🔷நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இம்முறை, சிறந்த வீரருக்கான ‘ரிச்சர்டு ஹாட்லீ’ விருதை கேப்டன் கேன் வில்லியம்சன் தட்டிச்சென்றார். இவர், 4வது முறையாக (2016, 2017, 2019, 2021) இவ்விருதை கைப்பற்றினார்.

🔷இதேபோல சிறந்த டெஸ்ட் வீரர், முதல் தர போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனுக்கான ‘ரெட்பாத்’ கோப்பை விருதுகளையும் வில்லியம்சன் வென்றார்.

🔷டெஸ்ட் அரங்கில் கடைசியாக விளையாடிய 4 இன்னிங்சில் 2 இரட்டை சதம் (251 ரன் மற்றும் 238 ரன்) ஒரு சதம் (129 ரன்) உட்பட 639 ரன் குவித்திருந்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியது.

🔷சிறந்த ஒருநாள், ‘டுவென்டி - 20’ போட்டி வீரருக்கான விருதுகளை டேவன் கான்வே தட்டிச் சென்றார். முதல் தர போட்டியில் சிறந்த பவுலருக்கான ‘வின்சர்’ கோப்பை விருதை கைல் ஜேமிசன் கைப்பற்றினார்.

🔷சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனையாக அமி சாட்டர்வைட், சிறந்த ‘டுவென்டி - 20’ போட்டி வீராங்கனையாக அமேலியா கெர் தேர்வாகினர். உள்ளூர் போட்டிக்கான சிறந்த வீரராக வேகப்பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் டேரில் மிட்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...