தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

தனியார் வேலை வாய்ப்புகளில் 75% முன்னுரிமை !!

🔷ரூ.30,000/- வரையிலான ஊதியமுள்ள தனியார் வேலை வாய்ப்புகளில் மாநிலத்திலுள்ளவர்களுக்கு 75% முன்னுரிமை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

🔷ஜார்க்கண்ட்  மாநிலத்திற்கு முன்பு ஹரியானா மாநிலம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் மிகப்பெரிய மிதவை சூரிய மின் நிலையம் !!

🔷தெலுங்கானாவில் நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

🔷தண்ணீரில் மிதக்கும் வகையில் இந்த மின் நிலையம் அமையவுள்ளது.

🔷தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீராம் சாகர் நீர்த்தேக்கத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் மிதவை சூரிய மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

🔷நம் நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் நிலையமான இது 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உடையது.

🔷423 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த மின் நிலையம் மே மாதம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.

🔷தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள எட்டயபுரத்தில் நிலத்தில் 230 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் சூரிய மின் நிலையம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட உள்ளது.

விளையாட்டு

3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி !!

🔷20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

🔷இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

🔷கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.  இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

🔷கோலி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

🔷அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்தில் உள்ளார்.  அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களை சேர்த்துள்ளார்.

🔷3வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார்.  அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களை குவித்துள்ளார்.

ஈட்டி எறிதலில் அன்னு ராணி புதிய சாதனை !!

🔷24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தொடங்கியது.

🔷இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயது வீராங்கனை அன்னு ராணி 63.24 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

🔷இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் 62.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

🔷இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (64 மீட்டர்) அவரால் எட்ட முடியவில்லை. இந்த பந்தயத்தில் ராஜஸ்தான் வீராங்கனை சஞ்சனா சவுத்ரி (54.55 மீட்டர்) 2-வது இடமும், அரியானா வீராங்கனை குமாரி ஷர்மிளா (50.78 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர்.

🔷பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேச வீராங்கனை சவிதா பாலும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பாலியானும் முதலிடம் பிடித்தனர்.

விருதுகள்

கிராமி விருது 2021 !!

🔷இசைத் துறைக்கான மிகப் பெரிய 'கிராமி' விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, நடைபெற்றது.

🔷இந்த விழாவில், ஆண்களை விட பெண்கள் அதிக விருதுகளை பெற்றனர்.ஒன்பது பிரிவுஇதில், பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

🔷இவர், 'சேவேஜ், பிளாக் பரேட், பிரவுன் ஸ்கின் கேர்ள்' உட்பட, பாடல், வீடியோ என, ஒன்பது பிரிவுகளில் தேர்வாகி, அவற்றில் நான்கில் விருது களை அள்ளிச் சென்றார். இதன் மூலம், மொத்தம், 28 விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் அதிகம் விருது வென்ற பெண் என்ற சிறப்பை, பியான்ஸ் படைத்துள்ளார்.

🔷இவர், தற்போது, 31 கிராமி விருதுகளை வென்ற, இசையமைப்பாளர், சர்.ஜார்ஜ் சோல்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பியான்சுடன் இணைந்து பாடிய அவரது, ஒன்பது வயது மகள், புளு ஐவி கார்ட்டருக்கு, சிறந்த இணை பாடகிக்கான கிராமி விருது கிடைத்துள்ளது.

🔷இதன் மூலம் குறைந்த வயதில் கிராமி விருது பெற்ற இரண்டாவது பெண் என்ற சிறப்பை, புளு ஐவி கார்ட்டர் பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான சிறந்த இசை ஆல்பமாக, டெய்லர் ஸ்விப்ட்டின், 'போக்லோர்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

🔷மூன்றாவது முறையாக இவ்விருது வென்ற முதல் பெண் என்ற சிறப்பை, டெய்லர் ஸ்விப்ட் பெற்று உள்ளார். இதற்கு முன், ஸ்டீவ் வன்டர், பிராங்க் சினாட்ரா, பால் சைமன் ஆகியோர் தான் மூன்று முறை விருதுகளை வென்றுள்ளனர்.

🔷விரைவில் வெளியாக உள்ள, 'நோ டைம் டு டை' ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 'டைட்டில்' பாடலுக்காக, எய்லிஷ் விருது வென்றார். முதன் முறையாக, வெளியாகாத ஒரு படத்தின் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷புதிய பாடகிக்கான விருதை, 'வேப்' பாடலுக்காக, மெகன் தட்டிச் சென்றார். முக கவசம்இரட்டையர் பிரிவில், 'ரெய்ன் ஆன் மீ' பாடலுக்கான விருது, லேடி காகா, அரியனா கிராண்டே ஆகியோருக்கு கிடைத்தது.


Share Tweet Send
0 Comments
Loading...