தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.4.2021 (Daily Current Affairs)

உலகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான பிட்காயின் மதிப்பு புதிய உச்சம்..!!

🔷அமெரிக்க பங்குச்சந்தையில் பிட்காயினின் மதிப்பு 62 ஆயிரத்து 741 டாலராக அதிகரித்து புது உச்சம் தொட்டு உள்ளது.

🔷இணையதள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குசந்தையில் பிட்காயினின் விலை 5 சதவீதம் அதிகரித்தது உள்ளது.

🔷அதேபோல் மற்றொரு இணையதள பணமான எத்தேரியமும் அதிகரித்து 2 ஆயிரத்து 205 டாலராக புது உச்சம் தொட்டது. ஏற்கனவே எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் 1 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பிட்காயினில் முதலீடு செய்து இருந்த நிலையில் தற்போது அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்து உள்ளது.

இந்தியா

கடல் உணவுப் பொருள் விற்பனைக்காக இ - சான்டா வலைதளம் துவக்கம்..!!

🔷கடல் உணவுப் பொருள் விற்பனைக்கான ‘இ - சான்டா’ வலைதள பயன்பாட்டை வா்த்தக மற்றும் தொழில்துறையின் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தாா். விவசாயிகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இ - சான்டா வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவா்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்.

🔷விவசாயிகள் தங்களது கடல் உணவுப் பொருள்களை இணைய வா்த்தக வலைதளத்தில் சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு சொடுக்கில் அவற்றை விற்பனை செய்ய முடியும். இ - சான்டா வலைதளம் விவசாயிகளுக்கு கடல் உணவுப் பொருள்களை ஒரே இடத்தில் பட்டியலிட உதவுவதுடன் அவற்றின் விற்பனையும் கணிசமாக அதிகரிக்க உதவும்.

🔷இந்த வலைதளம் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தை வழங்கும் என்பதுடன் மிகச் சிறந்த டிஜிட்டல் தீா்வுகளையும் அளிக்கும். இதன் வாயிலாக அவா்கள் வாழ்வு மேம்படும். பாரம்பரியமாக வாய்மொழி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்த்தகத்தை இ - சான்டா வலைதளம் முறையானதாகவும் சட்டபூா்வமானதாகவும் மாற்ற உதவும்.

🔷இ - சான்டா இணைய வா்த்தக தளம் வருவாய் ஈட்டுவதற்கான அபாயங்களை குறைப்பதுடன், தயாரிப்புகள் மற்றும் சந்தைகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் வாயிலாக தவறான நடைமுறைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் கேடயமாக அது திகழும்.

🔷அத்துடன் விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கு இடையில் காகிதமற்ற மின்னணு வா்த்தக தளமாகவும் அது செயல்படும். தற்போதைய நிலையில், நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் 18,000 விவசாயிகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனா். நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இறால் உற்பத்தியை தற்போதைய 40,000 டன்னிலிருந்து 6 - 7 லட்சம் டன்னாக அதிகரிக்க முடியும்.

🔷தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், வங்க மொழி, தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் இந்த வலைதளம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் இதர மொழிகளிலும் இந்த வலைதளத்தின் சேவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் மேலும் தெரிவித்தாா்.

ஆன்ட்ராய்டு செயலி

சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ள ஆப் வெளியீடு..!!

🔷சமஸ்கிருத மொழி கற்றல் பயன்பாடான ‘லிட்டில் குரு’ (Little Guru) பங்களாதேஷில் வெளியிடப்பட்டது.

🔷சமஸ்கிருத கற்றல் பயன்பாடான லிட்டில் குரு பங்களாதேஷில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இந்திரா காந்தி கலாச்சார மையம் (ICCR) சார்பில் அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷உலகெங்கிலும் உள்ள மாணவர்கள், மத அறிஞர்கள், இந்தோலஜிஸ்டுகள் மற்றும் வரலாற்றாசிரியர்களிடையே சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) நடத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமஸ்கிருத கற்றல் பயன்பாடு உள்ளது.

நியமனங்கள்

ஐசிஎல்இஐ சா்வதேச துணைத் தலைவராக ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி நியமனம்..!!

🔷உள்ளூா் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சா்வதேச கவுன்சில் (ஐசிஎல்இஐ) என்ற சா்வதேச நகரங்களின் அமைப்பின் துணைத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் அதிஷி நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷நிலையான எதிா்கால அபிவிருத்திகளுக்காக 1,750 நகரங்களுக்கான உலகளாவிய வலையமைப்புதான் ஐசிஎல்சிஐ. நாற்பத்தி மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த அமைப்பில் தில்லியும் உள்ளது.

🔷இந்த அமைப்பில் துணைத் தலைவராக அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அவா் தனது சுட்டுரையில், ‘அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தேசிய தலைநகா் தில்லியில் மேற்கொண்ட நிலையான அபிவிருத்திப் பணிகளுக்கான அங்கீகாரம்தான் இது. இந்தியாவைச் சோ்ந்த ஒருவா் இந்த அமைப்பின் முதல் முதலில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

🔷ஐசிஎல்சிஐயின் 2021 - ஆம் ஆண்டுக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் கூட்டத்திலும் பங்கேற்க அதிஷி செல்கிறாா். இதில் மக்களை மையமாகக் கொண்டு, நகா்ப்புறத்தில் அனைவருக்கும் நிலையான எதிா்காலத்தை வடிவமைப்பது குறித்த தலைப்பில் அவா் உரையாற்றவுள்ளாா்.

விளையாட்டு

ஐசிசியின் சிறந்த வீரராக புவனேஸ்வர் குமார் தேர்வு..!!

🔷மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி.

🔷மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

🔷தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள்.

🔷விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

🔷ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பந்த் தேர்வானார். பிப்ரவரி மாத விருது ஆர். அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

🔷இந்நிலையில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஆறு ஒருநாள், 4 டி20 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பாகப் பங்களித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...