தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.3.2021 (Daily Current Affairs)

உலகம்

ஆப்கன் அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் !!

🔷ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு அரசுக்கும் பிற குழுக்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையும் முடங்கியுள்ளது.

🔷இந்த நிலையில், அமைதிக்கான 8 பக்க வரைவு ஒப்பந்தத்தை சண்டையிட்டு வரும் குழுக்களிடம் பரிசீலனைக்காக அமெரிக்கா அளித்துள்ளது.

🔷குழுக்களிடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதனை செல்படுத்துவது, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினா் உரிமைகளைப் பாதுகாப்பது, 42 ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் குழுக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குழுவை அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் அந்த வரைவு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

முதலாவது இந்திய எரிசக்தி அலுவலகம் !!

🔷முதலாவது, இந்திய எரிசக்தி அலுவலகம் (India Energy Office (IEO)) ரஷியாவின், மாஸ்கோ நகரில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.

🔷இந்த அலுவலகம் இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையில் எரிசக்தி துறையில் பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.

🔷இந்தியாவின் சிறந்த எண்ணெய் நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி விதேஷ் (ONGC Videsh), இந்தியன் ஆயில் (IndianOil), கெயில் (GAIL), ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Ltd) மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (Engineers India Ltd) ஆகியவை எரிசக்தி துறையில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான பொதுவான தளமாக இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தியா

சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம் நிகழ்ச்சி !!

🔷இந்திய சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளதைச் சிறப்புப்படுத்தும் நோக்கிலான கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபா்மதி ஆசிரமத்திலிருந்து ‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்தாா்.

🔷இந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூரும் வகையில், 81 போ் கொண்ட குழு புறப்பட்டது.

🔷அகமதாபாத்திலிருந்து தண்டி கடற்கரை வரையிலான 386 கி.மீ. தூரத்தை இவா்கள் 25 நாட்களில் நிறைவு செய்வாா்கள். ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.

🔷நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🔷இதன்படி, 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களானது 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன

ஆன்ட்ராய்டு செயலி

🔷’மேரா ரேஷன் மொபைல் ஆப்’ (Mera Ration Mobile App) என்ற பெயரில் ‘ஒரு தேசம் ஒரே ரேஷன் அட்டை’ (‘One Nation-One Ration Card’ ) முறைமைக்கான மொபைல் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

🔷இந்த செயலியின் உதவியுடன் பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானிய அளவு, சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் ஆதார் இணைப்பு நிலை பற்றிய விவரங்களை எளிதாக சரிபார்க்க முடியும்.

🔷புலம்பெயர்ந்த பயனாளிகள் விண்ணப்பத்தின் உதவியுடன் தங்கள் இடம்பெயர்வு விவரங்களையும் பதிவு செய்யலாம்.

அறிவியல் தொழில்நுட்பம்

ஆர்எச்-560 ரக சவுண்டிங் ராக்கெட் !!

🔷உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் ‘ஆர்எச்-560 (RH-560) ரக சவுண்டிங் ராக்கெட்’ (sounding rocket) ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப் பட்டது.

🔷புவி பரப்புக்கு மேல் உள்ள உயர் வளிமண்டலத்தில் வீசக்கூடிய காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் நிலவும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

விளையாட்டு

ஐஎஸ்எல்: மும்பை சிட்டி சாம்பியன் !!

🔷இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

🔷ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை சிட்டி அணிக்கு கோப்பையுடன் ரூ.8 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த ஏடிகே மோகன் பகான் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அரையிறுதியில் தோல்வி கண்ட நாா்த் ஈஸ்ட் யுனைடெட், கோவா அணிகளுக்கு தலா ரூ.1.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

அகமதாபாத் ஆடுகளம் சராசரி : ஐசிசி மதிப்பீடு !!

🔷இந்தியா-இங்கிலாந்தின் பகலிரவு டெஸ்ட் நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் ‘சராசரியானது’ என்று ஐசிசி மதிப்பீடு வழங்கியுள்ளது.

🔷இரு நாள்களில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த ஆடுகளம் குறித்து பரவலாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், ஐசிசி இவ்வாறு மதிப்பிட்டுள்ளது. இதனால் ஆட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படும் வாய்ப்புகளில் இருந்து ஆமதாபாத் மைதானம் தப்பியுள்ளது.

🔷ஐசிசி-யின் விதிகள் மற்றும் வரைமுறைகள் பிரிவில் வெளியான மதிப்பீட்டில், 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றபோது ஆடுகளம் சராசரியாக இருந்ததாகவும், கடைசி டெஸ்ட் நடைபெற்றபோது ‘நல்ல’ முறையில் இருந்ததாகவும், முதல் டி20 ஆட்டத்தின்போது ‘சிறப்பான’ முறையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🔷இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்ற சிட்னி மைதான ஆடுகளமும் ‘சராசரியானது’ என்றே ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது.

🔷சா்வதேச அளவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் முடிந்த பிறகு ஐசிசியின் போட்டி நடுவா் ஆட்டம் நடைபெற்ற ஆடுகளத்தை மதிப்பீடு செய்து ஐசிசிக்கு அறிக்கை அளிப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...