தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.4.2021 (Daily Current Affairs)

ராணுவம் / பாதுகாப்பு

இந்திய விமானப்படைக்கு எந்த துப்பாக்கி குண்டாலும் துளைக்க முடியாத புதிய கவச வாகனம்..!!

🔷இந்திய விமானப்படையில் புதிதாக இலகு ரக கவச வாகனம் இணைக்கப்பட்டுள்ளது.

🔷6 டன் எடை கொண்ட அந்த வாகனம் விமானப்படை தளம் சார்ந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷எந்த ரக துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகள் போன்றவற்றால் இந்த வாகனத்தை துளைக்க முடியாது என்றும், ஒரு நேரத்தில் 6 வீரர்களை தாங்கி செல்லும் இந்ந வாகனம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைக்கு கை கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

நாட்டின் 24 - வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுஷில் சந்திரா..!!

🔷நாட்டின் 24 - வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார்.

🔷வருமான வரித்துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2019 - ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

🔷தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவியில் சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டார்.

🔷2022 - ஆம் ஆண்டு மே 14 - ஆம் தேதி வரை சுஷில் சந்திரா தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார். இந்த கால கட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை, தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிறது.

விளையாட்டு

ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ் கெயில் படைத்த புதிய சாதனை..!!

🔷ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் விளாசியதன் மூலம் புதிய மைல்கல்லை கிறிஸ் கெயில் எட்டி உள்ளார்.

🔷ஆட்டத்தின் 7-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிய நிலையில் 3-வது பந்தை அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் சிக்சருக்கு விரட்டிய போது அவரின் ஒட்டுமொத்த சிக்சர் கணக்கு 350 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற தனிச் சிறப்புக்கு கெயில் உரியவர் ஆனார்.

🔷வேறு எந்த வீரரும் ஐ.பி.எல். போட்டியில் 250 சிக்சர்களையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் 100 - வது வெற்றி - சாதனைப் பட்டியலில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி..!!

🔷சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தனது 100 - வது வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

🔷2008 ஆம் ஆண்டு முதல் 13 ஐபிஎல் தொடரில் விளாயாடி இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 99 போட்டிகளில் வென்றுள்ளது.

🔷இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் சன்ரைஸர் ஐதாராபாத் அணியுடனான தனது முதல் போட்டியில் வென்று 100 - வது வெற்றியை சுவைக்குமா என்று பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

🔷இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரின் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளது கொல்கத்தா அணி. இந்த வருடத்தின் முதல் போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி தனது ஐபிஎல் தொடரில் 100 - வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

🔷சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தொடர்ந்து மூன்றாவது அணியாக இந்த சாதனையைப் படைத்துள்ளது கொல்கத்தா அணி.

இறப்பு

இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மனிதஉரிமை ஆா்வலா் ஐ.ஏ.ரஹ்மான் காலமானாா்..!!

🔷பாகிஸ்தானைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலா் ஐ.ஏ. ரஹ்மான் (90) காலமானாா். பாகிஸ்தானின் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வந்த அவா் இந்தியாவில் பிறந்தவா்.

🔷1930 - ஆம் ஆண்டு ஹரியாணாவில் ரஹ்மான் பிறந்தாா். தேசப் பிரிவினையின்போது அவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு சென்றது.

🔷பத்திரிகையாளராகவும் புகழ்பெற்ற அவா் பாகிஸ்தானின் பல்வேறு நாளிதழ்களில் ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளாா்.

🔷பத்திரிகை துறையில் 65 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளாா். பாகிஸ்தான் - இந்திய மக்களின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான மையத்தையும் நிறுவினாா். மகசேசே விருது உள்பட பல்வேறு விருதுகளையும் அவா் பெற்றுள்ளாா்.

விருதுகள்

பிரிட்டனின் பாஃப்டா விருது..!!

🔷லண்டனில் பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது. நோமாட் லேண்ட் சிறந்த படமாக விருதைத் தட்டிச் சென்றது. ஆன்டனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

🔷BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருது வழங்கும் விழா காணொலி வாயிலாக நடைபெற்றது.

🔷இந்த விழாவில் நோமாட்லேண்ட் என்ற அமெரிக்கப் படம் விருதுகளைக் குவித்து சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தை இயக்கிய சீன வம்சாவளியான இயக்குனர் கோலே ஜாவோ மற்றும் 63 வயதான நடிகை பிரான்சிஸ் டார்மண்ட் ஆகியோரும் விருதுகளைப் பெற்றனர்.

🔷"Promising Young Woman" பிரிட்டனின் சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.

🔷சிறந்த நடிகராக ஆன்டனி ஹாப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்றுக் கொண்ட அவர் தாம் முதியவர் பாத்திரத்தில் நடிக்கவில்லை ஏனென்றால் தாம் இப்போது முதிய வயதை எட்டிவிட்டதாக நகையுணர்வுடன் குறிப்பிட்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...