தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.3.2021 (Daily Current Affairs)

இந்தியா

ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று பவானி தேவி சாதனை !!

🔷தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாா். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்.

🔷சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூா்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றாா். ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களைச் சோந்தோா் டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்காக உலகத் தரவரிசையின் அடிப்படையில் இரு இடங்கள் இருந்தன.

🔷உலகத் தரவரிசையில் தற்போது 45-ஆவது இடத்திலிருக்கும் பவானி தேவி, அதில் ஓா் இடத்தை உறுதி செய்துள்ளாா்.

ரயில்வே பயணச்சீட்டை தடையின்றி வழங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் !!

🔷பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

🔷பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது.

🔷சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். இது அனைத்து பயணிகளுக்கும் ரயில்வேயின் புத்தாண்டு பரிசாக இருக்கும்.

🔷ரயில்வே பயணிகளை கருத்தில் கொண்டு, உலகத்தரத்திலான இந்த இ-டிக்கெட் முன்பதிவு இணையதளம் வடிவமைக்கப்பட்டது. இதில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், உணவு, தங்கும் இடம் ஆகியவற்றையும் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

🔷பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்படி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நான்கு விமான நிலையங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு !!

🔷நாட்டில் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்ட தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் மீதமுள்ள அரசு பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🔷2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் தனது பங்குகளை இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது.

🔷தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களின் மீதள்ள இந்திய விமான ஒழுங்காற்று ஆணையத்தின் பங்குகளை விற்பதற்கான முன்மொழிவுகள் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்து விரைவில் அனுப்பி வைக்க உள்ளது.

🔷பிரதமர் நரேந்திர மோடி அரசின் விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் முதல் கட்ட செயலாக்கத்தில் லக்னெள, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களின் ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றது.

🔷கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி தனது உரையில், "ஆயில், கேஸ் பைப்லைன் போன்ற 100 அரசு சொத்துகளில் இருந்து ரூ. 2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெறும் வகையில் நிதி திரட்ட அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

விளையாட்டு

விஜய் ஹஸாரே கோப்பை: வென்றது மும்பை !!

🔷விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 4-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.

🔷மும்பையின் கேப்டன் பிருத்வி ஷா, இந்தத் தொடரில் மொத்தமாக 827 ரன்கள் அடித்துள்ளாா். இது, இப்போட்டியின் ஒரு சீசனில் தனியொரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

🔷அதேபோல், உத்தர பிரதேச வீரா் மாதவ் கௌஷிக் விளாசிய 158 ரன்களே, தேசிய ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் தனியொரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக மயங்க் அகா்வால் 125 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

துபை ஓபன்: முகுருஸா சாம்பியன் !!

🔷துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் காா்பைன் முகுருஸா சாம்பியன் ஆனாா். கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவா் பட்டம் வெல்வது இது முதல் முறையாகும்.

🔷முகுருஸாவின் டென்னிஸ் வாழ்க்கையில் இது அவரது 8-ஆவது ஒற்றையா் பட்டம். அதில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் அடக்கம்.

🔷துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்த முகுருஸா, அதில் செக் குடியரசின் பாா்போரா கிரெஜ்சிகோவாவை வென்று சாம்பியன் ஆனாா்.

நியமனங்கள்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக பிராத்வெயிட் நியமனம் !!

🔷இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. மேலும் இந்த இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ம் தேதி துவங்கவுள்ளது.

🔷இந்த அணியின் கேப்டன் ஹோல்டர் சில காரணங்களால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக கிரிக்கெட் வீரர் பிராத்வெயிட் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷ஏற்கனவே இவரது தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முகமது கவுஸ் சுக்குரே நியமனம் !!

🔷இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 224-வது பிரிவின் ஒன்றாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முகமது கவுஸ் சுக்குரே கமாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

🔷இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது.

🔷கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் பெங்களூரிலுள்ள இதர நீதிமன்றங்களிலும் 23 வருடங்களுக்கும் அதிகமாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமால் பணியாற்றியுள்ளார்.

🔷சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, தொழிலாளர், நடுவர் மன்றம், வருவாய் மற்றும் வக்பு சார்ந்த வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...