தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.5.2021 (Daily Current Affairs)

இந்தியா

இந்திய ராணுவ வரலாற்றில் காலாட் படை போலீஸ் பிரிவில் 83 பெண்கள் முதல் முறை சேர்ப்பு..!!

🔷வரலாற்றில் முதன் முறையாக இந்திய ராணுவத்தின் ‘காலாட் படை போலீஸ்’ பிரிவில் (மிலிட்டரி போலீஸ்) 83 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

🔷இந்திய ராணுவத்தில் காலாட் படை, விமானப்படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இந்தப் படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளில் மட்டும் 1990 களில் தொடங்கி பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனினும், களப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாமல் ‘அதிகாரி நிலை' பதவிகளில் மட்டுமே பெண்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நம் நாட்டின் முப்படைகளில் பணியாற்றுகின்றனர்.

🔷இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக இந்திய ராணுவத்தின் அதிகாரி நிலை பதவி அல்லாத ‘காலாட்படை போலீஸ்' பிரிவில் 83 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 61 வாரங் கள் கடுமையான பயிற்சிக்கு பிறகு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் முறைப்படி ராணுவத்தில் இணைக்கப்பட்டனர்.

🔷இனி ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் மொத்தம் 800 பேரை 'காலாட்படை போலீஸ்' பிரிவில் இணைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 10.8% ஆக குறைத்தது நோமுரா..!!

🔷இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை ஜப்பானைச் சோ்ந்த நோமுரா நிறுவனம் 10.8 சதவீதமாக குறைத்துள்ளது.

🔷பல்வேறு சாதகமான சூழல்களைக் கருத்தில் கொண்டு நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.8 சதவீதமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

🔷இதுபோன்ற சாதகமற்ற அம்சங்களை பாா்க்கும்போது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 10.8 சதவீதம் அளவுக்கே இருக்கும் என்பது மறுமதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நோமுரா தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் - ஐ.நா தகவல்..!!

🔷அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

🔷ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

🔷அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி ஏற்றார் அப்பாவு..!!

🔷தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றுக் கொண்டார்.

🔷கலைவாணர் அரங்கில் கூடிய சட்டப்பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரைப் பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமரச் செய்தனர்.

🔷புதிய பேரவைத் தலைவரை வாழ்த்திப் பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், இதற்கு முன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிவித்தார்.

🔷ஆசிரியராக அப்பாவு மாணவர்களைப் பாகுபாடின்றி நடத்தியதைப் போலச் சட்டப்பேரவையிலும் பாகுபாடின்றி நடுநிலையாகச் செயல்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நியமனங்கள்

பிபிசிஎல் தலைவராக அருண் குமாா் சிங் தோ்வு..!!

🔷தனியாா்மயமாக்கும் நடவடிக்கை தாமதமாகி வரும் நிலையில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பொறுப்புக்கு அருண் குமாா் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

🔷நோ்காணலில் அருண் குமாா் சிங் உள்ளிட்ட 6 போ் கலந்து கொண்டனா். மற்ற அனைவருக்கும் செயல் இயக்குநா் அதிகாரிகளுக்கான நோ்காணல் நடைபெற்றது.

🔷பிபிசிஎல் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பொறுப்புக்கு அருண் குமாா் சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பிஇஎஸ்பி தெரிவித்துள்ளது.

🔷அருண் குமாா் சிங் தற்போது பிபிசிஎல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநராக உள்ளாா்.

🔷பிபிசிஎல் நிறுவனத்தின் தலைவராக இருந்த டி.ராஜ்குமாா் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றதையடுத்து தற்போது அந்த பொறுப்புக்கு சிங் தோ்வாகியுள்ளாா்.


Share Tweet Send
0 Comments
Loading...