தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.4.2021 (Daily Current Affairs)

உலகம்

இலங்கைக்கு சீன வங்கி ரூ.3,750 கோடி கடன் !!

🔷இலங்கைக்கு சீன வளா்ச்சி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.3,750 கோடி) கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டது.

🔷நோய்த்தொற்று பிரச்சனையை சமாளிப்பது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக இந்தக் கடன் வாங்கப்படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது. சுமாா் ஒரு மாத காலத்துக்குள் சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் இரண்டாவது கடன் ஒப்பந்தம் இதுவாகும்.

🔷‘இலங்கையின் உண்மையான நட்புநாடாக சீனா திகழ்கிறது. அதனை நிரூபிக்கும் வகையில் இலங்கைக்கு தொடா்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சீனா உதவியுள்ளது. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட 1 பில்லியன் டாலா் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே இக்கடனாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

🔷இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2008-09 காலகட்டத்துக்குப் பிறகு இப்போது 4.05 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது. இலங்கையில் ஏற்கனவே பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது.

🔷சீனாவிடம் வாங்கிய ஒரு கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், தங்கள் நாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

World 2030: Public Survey அறிக்கை வெளியீடு !!

🔷UNESCO அமைப்பானது “World 2030: Public Survey” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, 2020 மே முதல் 2020 செப்டம்பர் வரை உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

🔷இந்த அறிக்கையின்படி, காலநிலை மாற்றம், வன்முறை மற்றும் மோதல், பல்லுயிர் இழப்பு, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை போன்றவை அமைதியான சமூகத்தை பாதிக்கும் சில முக்கியமான சவால்களாக இனங்காணப்பட்டுள்ளன.

இந்தியா

குத்தகை அவசர ஆணை 2021 !!

🔷உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

🔷தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சங்கல்ப் சே சித்தி இயக்கம் !!

🔷மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (TRIFED) சமீபத்தில் “சங்கல்ப் சே சித்தி” - கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைவு இயக்கத்தை அறிமுகம் செய்தது.

🔷இது, 150 அணிகள் பங்கேற்கும் நாட்டின் 1500 கிராமங்களை உள்ளடக்கும் 100 நாள் இயக்கமாகும்.

🔷அந்தக் கிராமங்களின் வன் தன் மையங்களை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அறிவியல் தொழில்நுட்பம்

ஜெனோபாட்ஸ் ரோபோ !!

🔷டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

🔷இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.

🔷அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும்.

🔷இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.

மாநாடுகள்

இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு !!

🔷இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் தொடங்கி வைக்கிறார்.

🔷மனிதவளம் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

🔷இந்திய விமானப் படை தளபதிகள் மாநாடு, விமானப் படை ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். விமானப் படை செயல்பாடுகள், தளவாட பராமரிப்பு, நிர்வாகம் குறித்த முக்கிய விஷயங்களை மூத்த தளபதிகள் விவாதிப்பதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு விளங்குகிறது.

விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிப் போட்டியிலிருந்து இந்திய ஜூடோ அணி விலகியது !!

🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகரில் நடந்து வருகிறது.

🔷இந்தப் போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய அணியில் இருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அடுத்து, அணியினர் அனைவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

🔷இந்திய அணி ஒன்று, நோய்த்தொற்று  காரணமாக ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் இருந்து வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

நியமனங்கள்

புதிய தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமனம் !!

🔷இந்திய தோ்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

🔷தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா ஏப்ரல் 13-ல் ஓய்வு பெறுகிறாா். அதையடுத்து, தோ்தல் ஆணையராக உள்ள சுஷீல் சந்திராவை அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🔷அவா் ஏப்ரல் 13-ல் தலைமை தோ்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளாா். 2022 ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி வரை சுஷீல் சந்திரா அப்பொறுப்பில் நீடிப்பாா்.

🔷அவரது பதவிக் காலத்தில் கோவா, மணிப்பூா், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெறும்.

🔷கடந்த இரு ஆண்டுகளாக தோ்தல் ஆணையராகப் பதவி வகித்து வரும் சுஷீல் சந்திராவின் மேற்பாா்வையில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றுள்ளன.

🔷தோ்தலில் போட்டியிடுவதற்காக இணையவழியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதில் சுஷீல் சந்திராவுக்கு முக்கிய பங்குண்டு. தோ்தலில் கருப்புப் பணம் புழங்குவதைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டாா்.

🔷1980 ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான (ஐஆா்எஸ்) சுஷீல் சந்திரா, 38 ஆண்டுகள் வருவாய்த் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். தோ்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தாா்.


Share Tweet Send
0 Comments
Loading...