தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.3.2021 (Daily Current Affairs)

உலகம்

501 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டிஜிட்டல் ஓவியம் !!

🔷புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

🔷அமெரிக்காவில் அமைந்துள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம், உலகம் முழுவதுமுள்ள பழமையான, தொன்மைவாய்ந்த பொருட்களை பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது.

🔷அந்த வகையில் டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பில் என்பவர், கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேகரித்த கிட்டத்தட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள்,டிவிட்டர், வீடியோக்கள் ஆகியவற்றை டிஜிட்டல் வடிவில், ஒரே புகைப்படத்தில் சேர்த்து collage செய்துள்ளார்.

🔷ஜே.பெக் format - ல் உள்ள இந்த புகைப்படம் 501 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா

விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடு செய்யும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்..!

🔷பொதுத்துறையைச் சேர்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் விண்வெளித் துறையில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

🔷வணிக நோக்கில் செயற்கைக் கோள்கள், விண்கலங்களை ஏவுவதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மையில் பிரேசில் நாட்டின் அமேசானியா செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

🔷இந்த நிறுவனம் ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் என்னும் அளவில் அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்தம் பத்தாயிரம் கோடி ரூபாயை விண்வெளித் துறையில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

🔷பங்கு வெளியீடு மற்றும் கடன்பத்திரங்கள் மூலம் இந்தத் தொகையைத் திரட்ட உள்ளது. தனது திட்டங்களைச் செயல்படுத்த 300 பேரைப் பணியமர்த்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நியமனங்கள்

டெரிடோரியல் ஆர்மியில் கேப்டனாக அனுராக் தாக்கூர் நியமனம் !!

🔷மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகார இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ( Anurag Thakur)  ’டெரிடோரியல் ஆர்மி’ (Territorial Army) யில்  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷இதன் மூலம்,  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருக்கும் போதே இவ்வாறு, டெரிடோரியல் ஆர்மியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள முதல் நபர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

விருதுகள்

எழுத்தாளா் இமையத்துக்கு சாகித்ய அகாதெமி விருது !!

🔷தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான இமையத்திற்கு 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷தமிழ் உள்பட இருபது மொழிகளைச் சோ்ந்த படைப்பாளா்களுக்கு சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் மொழியில் பிரபல எழுத்தாளா் இமையத்திற்கு அவரது ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷விருது பெறுபவா்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1 லட்சமும், தாமிரப் பட்டயமும் வழங்கப்படும். விருது பெறும் படைப்பு இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் வெளியிடப்படும்.

🔷இவருக்கு இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் சாா்பில் இளநிலை ஆய்வு நல்கை விருதும், தமிழக அரசு சாா்பில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

🔷மேலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் விருது உள்பட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளாா்.

🔷இதற்கு முன்பு கடலூா் மாவட்டத்திலிருந்து சாகித்ய அகாதெமி விருதை எழுத்தாளா் ஜெயகாந்தன் ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ என்ற நாவலுக்காக கடந்த 1972-ஆம் ஆண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மகளிர் துணிவு விருது கவுசல்யா சங்கருக்கு அமெரிக்க தூதரகம் கெளரவம் !!

🔷சென்னையில் செயல்பட்டுவரும் அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்த "தைரியமான பெண்கள் நாளைய உலகுக்கு வழிகாட்டுவார்கள்" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கலந்துகொண்டு சாதி ஒழிப்புப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு ஆர்வலருமான கவுசல்யா சங்கரை கவுரவித்தார்.

🔷அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் "சர்வதேச மகளிர் துணிவு" விருதுக்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கௌசல்யா சங்கர்.

🔷குடும்பம், சமூகம், மற்றும் தேசம் என பல்வேறு தளங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் வீரத்தையும், மனோதரியத்தையும், தலைமை பண்புகளையும் வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கம்.

சாதனைகள்

சா்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 10,000 ரன்கள் கடந்து சாதனை !!

🔷தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 36 ரன்கள் விளாசிய இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், சா்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்றுவித போட்டிகளையும் சோ்த்து) 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

🔷1999-இல் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 663 ரன்கள், 212 ஒரு நாள் போட்டிகளில் 6,974 ரன்கள், 89 டி20 போட்டிகளில் 2,364 ரன்கள் என மொத்தம் 10,001 ரன்கள் குவித்துள்ளார்.

🔷ஒரு நாள் போட்டியில் அவா் இன்னும் 26 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் சா்வதேச அளவில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார்.


Share Tweet Send
0 Comments
Loading...